31.05.2025 வரை ஓய்வு பெறவுள்ள தலைமையாசிரியர்கள் விவரங்கள் அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, March 15, 2025

31.05.2025 வரை ஓய்வு பெறவுள்ள தலைமையாசிரியர்கள் விவரங்கள் அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.



31.05.2025 வரை ஓய்வு பெறவுள்ள தலைமையாசிரியர்கள் விவரங்கள் அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

பள்ளிக்கல்வி துறையில் மாவட்டம் வாரியாக 31.05.2025 வரை ஓய்வு பெற்ற ஓய்வு பெறவுள்ள பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பணிபுரிந்த பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் நாளது தேதி வரை தணிக்கை செய்யப்படாத அரசு / அரசு நிதியுதவி பெறும் மற்றும் நகராட்சி உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகள் , ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களை அகத்தணிக்கை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது . 8 எனவே , 31.05,2025 வரை ஓய்வு பெறவுள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் , அலுவலர்களின் விவரங்களையும் மற்றும் நிதி உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் விவரங்களையும் இணைப்பில் கண்ட படிவங்களில் ( படிவம் -1,23 ) தனித்தனியாக பூர்த்தி செய்து பள்ளிக்கல்வி இயக்கக நிதி ஆலோசகர் மற்றும் முதன்மைக் கணக்கு அலுவலருக்கு உடன் அனுப்ப அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் , பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தாங்கள் பணிபுரிந்த காலங்களில் வரவு செலவு கணக்குகள் துறை ரீதியாக அகத்தணிக்கை மேற்கொள்ளும் பொருட்டு 31.05.2025 வரை ஓய்வு பெறவுள்ள பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் விவரங்களை coseauditsec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு - படிவம் -1

CLICK HERE TO DOWNLOAD HM Retd details 31.05.2025 - Revised - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.