Director of School Education orders to hold PTA meeting in schools on 26.03.2025! - 26.03.2025 அன்று பள்ளிகளில் PTA கூட்டம் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல் (POCSO), உள் புகார் குழு (ICC), மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக் குழு (SSAC) உள்ளிட்டவை தொடர்பாக 26.03.2025 அன்று பள்ளிகளில் PTA கூட்டம் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
பள்ளிக் கல்வி - பள்ளி பாதுகாப்பு பள்ளி ஆசிரியர்களால் பள்ளி மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாதல்
வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தல் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் செயல்பாடுகள் - கூட்டம் நடத்துதல் - தொடர்பாக.
G.O.(1D).No.83 School Education (ERT) Department dated.17.06.2021 விவாதிப்பது
அரசு முதன்மை செயலாளர், பள்ளிக் கல்வித் துறை கடித நாள்.03.03.2025 மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன
இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண். 6140/SCERT/2024- F3, நாள்.09.12.2024, 10.12.2024 மற்றும் 10.01.2025. இவ்வியக்கக செயல்முறைகள் ந.க.எண்.012965 /எம்2/இ1/2024 நாள்.07.03.2025
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06, ந.க.எண்.69199/எம்2/இ1/2024, நாள். 22.11.2024 மற்றும் 20.012025. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை-06, மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண்.1342/அ11/ஒபக/பமேகு/2024, நாள். 22.10.2024
அனைத்து பள்ளிகளிலும் பயிலும் பள்ளி மாணவர்கள் நலன் கருதி பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டங்கள் அவ்வப்போது தலைமையாசிரியர்களால் நடத்தப்படுகின்றன. மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பள்ளியின் பாதுகாப்பு சார்ந்து 26.03.2025 அன்று அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடத்திட தேவையான நடவடிக்கையினை எடுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இக்கூட்டத்தில் பின்வரும் கூட்டப் பொருள் சார்ந்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றுதல் வேண்டும். கூட்டப் பொருள் அ) பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (POCSO) பாலியல் தொடுதல் வகையில் மறும் தீங்குகளிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் குழந்தைகளிடம் பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற குழந்தைகளுக்குப் பாலியல் தொந்தரவுகள் குறித்தும் அத்தீங்குகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்தும் பெற்றோர் ஆசிரியர் கழக குழு கூட்டத்தில் விவாதித்து பிரச்சாரங்கள் வாயிலாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது.
பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலை உருவாக்க தேவையான வழிமுறைகள் .
பாலியல் துன்புறுத்தல் குறித்து நம்பிக்கையானவர்களிடம் தெரிவிப்பது மற்றும் அதுகுறித்துப் புகாரளிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஏற்படுத்துதல்.
மாணவர்களிடையே ஏற்படும் நடத்தை மாற்றங்களை கண்காணித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள்
ஆ) உள்புகார் குழு (Internal Compliant Committee - ICC)
பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013 (The Sexual Harrassment of Women at Workplace (Prevention. Prohibition and Redressal) Act. 2013) அடிப்படையில் ஆண், பெண் இருவரும் இணைந்து பணி செய்யும் இடங்களில் உள்புகார் குழு (Internal Compliant Committee - ICC) ஒன்று பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும். இவ்விதிமுறைகள் சார்ந்து பள்ளி அளவில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் சார்ந்து விவாதித்தல் அனைத்து வகையான அரசுப் பள்ளிகளிலும் இருக்க வேண்டும். இ) பள்ளிக் கல்வித் துறையின் அழைப்பு மைய எண் 14417, குழந்தைகள் மைய எண் 1098 மற்றும் மகளிர் உதவி மைய எ 181 அரசின் நலத்திட்டங்கள், பாடத் திட்டங்கள், தேர்வு முறைகள் மற்றும் மேற்படிப் சார்ந்த விவரங்கள், வளரிளம் பருவத்தினருக்கான மனநிலை சார்ந்த அறிவுரைகள், தேர்வுக்காக தயார்ப்படுத்துதல். தேர்வை எதிர்கொள்வது மற்றும் தேர்வு முடிவகள் குறித்த பயத்தைப் போக்குதல் போன்ற தகவக்கள், தன் பாதுகாப்பு கார்ந்து ஆலோசனைகளை 14417 இலவச அழைப்பு மைய எ யிலாக ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் அறிந்துகொள்ள முடியும் என்பது குறித்து பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் அவசியம் பகிர்ந்துகொள்ள வேண்டும். மகளிர் நலன், பாதுகாப்பு உள்ளிட்ட சந்தேகங்கள் மற்றும் தகவல் அளித்திட 181 என்ற மகளிர் உதவி மைய என்னை தொடர்பு கொள்ளாமாம் என்ற விழிப்புணர்வை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
குழந்தைகள் நலன், பாதுகாப்பு, குழந்தைத் திருமணங்கள் தடுப்பு சார்ந்த சந்தேகங்கள் மற்றும் தகவல் அளித்திட 1098 குழந்தைகள் உதவி மைய எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்கிற விழிப்புணர்வை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே ஏற்படுத்த வேண்டும்.
மேற்காண் உதவி மைய எண்களை பள்ளி வளாகம், மக்கள் கூடும் பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் காட்சிப்படுத்த பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் நடவடிக்கை எடுத்தல் சார்ந்து விவாதித்தல்.
ஈ) மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு (Student Safeguarding Advisory committee)
பள்ளி அளவில் பாதுகாப்பு ஆலோசனை குழு பின்வரும் உறுப்பினர்களை கொண்டு செயல்பட வேண்டும். ஆண்டுதோறும் இக்குழுவில் 50% உறுப்பினர்கள் மாற்றி அமைக்கப்பட வேண்ண்டும். இரண்டு வருடத்திற்கு ஒரு முறை இக்குழு உறுப்பினர்கள் முழுமையாக திருத்தி அமைத்திட வேண்டும்.
பள்ளி அளவிலான குழுவில் - தலைமை ஆசிரியர் > ஆசிரியர்கள் -2 பெற்றோர் ஆசிரியர் கழகம் / பெற்றோர் உறுப்பினர்-2 > பள்ளி மேலாண்மை குழு பிரதிநிதி -1 ஆசிரியால்லா பணியாளர் வெளி நபர் (தேவை எனில்)-1 இக்கூட்டத்தில் மாணவர் மனசு பெட்டியின் மூலம் பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை விவலாதித்து தீர்மானம் ஏற்றிடல் வேண்டும். இணையதள பாதுகாப்பு - மாணவர்கள் இணையதளத்தில் உள்ள தகவல்களை பாதுகாப்பு கையாளுவது மற்றும் இணையதள பாலியல் வன்முறைகளை தவிர்ப்பது எவ்வாறு என்பது சார்ந்து விவாதித்தல் வேண்டும்.
உ) மாணவர்களின் உடல் நலன்
• ஒவ்வொரு மாதமும் இரண்டாம் வாரம் கொசு ஒழிப்பு சார்ந்து பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மாணவர்களில் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக சுகாதார அதிகாரிக்கு தகவல் அளிக்கவேண்டும். மாணவர்களிடம் கொசுக்களின் வளர்ச்சி larva, pupa மற்றும் adult vector mosquitoes ஆகியவைகளின் முழுமையான வளர்ச்சி நிலைகளை அறிவுறுத்தல் வேண்டும்.
பற்றி மாணவர்கள் "சுகாதார தூதர்கள்" ஆக இருந்து, மக்களிடம் தகவல், கல்வி மற்றும் தொடர்பு (IEC) செயல்பாடுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களை சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
பள்ளி, வளாகங்களை கொசு தொந்தரவிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
குடிப்பதற்காக காய்ச்சிய நீரை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
மாணவர்களின் சரிவிகித உணவு உட்கொள்ளல் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தல்.
மாணவர்களில் யாருக்காவது காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக தொடர்புடைய ஆரம்ப சுகாதார நிலைய (PHC) மருத்துவ அதிகாரி அல்லது சுகாதார ஆய்வாளருக்கு தகவல் அளிக்க வேண்டும்.
கொசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் முக்கியத்துவம் பற்றி பெற்றோர்- ஆசிரியர் கூட்டங்களில் விவாதிக்கப்பட வேண்டும். மேற்காணும் கூட்டப் பொருளில் பெற்றோர் ஆசிரியர் கழக வட்டத்தில்விவாதித்து தலைமையாசிரியர் ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
CLICK HERE TO DOWNLOAD DSE - PTA Meeting - POCSO Proceedings PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.