அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்த திட்டமா? - மத்திய அரசு வெளியிட்ட தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 20, 2025

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்த திட்டமா? - மத்திய அரசு வெளியிட்ட தகவல்

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்த திட்டமா? - மத்திய அரசு வெளியிட்ட தகவல் - Is there a plan to increase the retirement age of government employees? - Information released by the central government



இந்தியாவில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உள்ளது. அதேவேளை, அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவின.

இந்நிலையில், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்த்த மத்திய அரசிடம் திட்டம் உள்ளதா? என்று மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு மத்திய அரசு தரப்பில் எழுத்துப்பூர்வ பதில் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்தும் திட்டம் இல்லை, ஓய்வு வயதை குறைக்கும் திட்டமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.