அரசுப் பள்ளி ஆசிரியை சடலமாக மீட்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 20, 2025

அரசுப் பள்ளி ஆசிரியை சடலமாக மீட்பு



அரசுப் பள்ளி ஆசிரியை சடலமாக மீட்பு

Government school teacher found dead கோவையில் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மதுக்கரையை சேர்ந்த பத்மா (53) வழுக்குப்பாறை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் வழக்கம் போல நேற்று பள்ளிக்கு சென்ற பதமா மாலை வீட்டிற்கு வரவில்லை, இரவு முழுவதும் வராததால் அவரது குடும்பத்தார் மதுக்கரை போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் இந்நிலையில் நாச்சிபாளையம் வழுக்குப்பாறை சாலையில் ஓடை அருகே உள்ள காலி இடத்தில் பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாகக் கிடப்பதாக மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்குச் சென்று விசாரணையை துவங்கினர். அதில் சடலமாக மீட்கப்பட்டது மாயமான அரசுப் பள்ளி ஆசிரியை பத்மா என்பது தெரியவந்தது.

பள்ளிக்குச் செல்வதாகக் கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு உள்ளார். ஆனால் அவர் பள்ளிக்குச் செல்லவில்லை என்று தெரிய வந்துள்ளது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் சம்பவம் நடந்த இடத்தில் நேரில் சென்று ஆய்வு செய்ததை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இது சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பத்மா நேற்று காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்து இருந்தனர்.

போலீசார் மோப்பநாய் உதவியுடன் அங்கு ஆய்வு மேற்கொண்டு, தடயவியல் துறையினர் மூலம் சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களைச் சேகரித்தனர். இதையடுத்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது கொலையா இல்லை தற்கொலையா என்று போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் என்று கூறினார்.

பத்மா (வயது 56), வழுக்குபாறை அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வந்ததும், இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் என, இரு குழந்தைகள் உள்ளனர் என்பதும் தெரியவந்தது.

இவரின் மகள் வழக்கறிஞராக இருப்பதாகவும், மகன் கல்லூரி படிப்பு படித்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. பள்ளிக்கூடம் செல்வதாக வீட்டிலிருந்தவர்களிடம் கூறி அவர் கிளம்பி சென்றதாக தெரிகிறது.

ஆனால் வீட்டில் இருந்து 400 மீட்டர் தொலைவில் உள்ள, குப்பை எரிக்கும் இடத்தில் இவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணத்திலும் டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டிலிருந்து அவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்ற சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.