ஆசிரியர்களுக்கு எது மிகவும் வகுப்பறையில் தொந்தரவாக இருக்கிறது? - படித்ததில் பிடித்தது - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 5, 2025

ஆசிரியர்களுக்கு எது மிகவும் வகுப்பறையில் தொந்தரவாக இருக்கிறது? - படித்ததில் பிடித்தது



ஆசிரியர்களுக்கு எது மிகவும் வகுப்பறையில் தொந்தரவாக இருக்கிறது? - படித்ததில் பிடித்தது - What is the most annoying thing for teachers in the classroom? - Favorite thing to read

எதனால் ஆசிரியர்கள் அவ்வப்போது முகம் கடுகடுக்கிறார்கள்?

உண்மையில் இது ஆசிரியர்களுக்கான பிரச்சனை மட்டுமா மட்டுமில்லை எல்லோருக்கும் ஆனது தான்.

நாம் சொல்வதை எதிரில் இருப்பவர் காது கொடுத்து கேட்க வேண்டும் என்று நினைப்பது மனித இயல்பு. அதிலும் உனக்காகத்தான் நான் அத்தனையும் சொல்கிறேன் என்னும் ஆசிரியர் புத்தி உறைந்து போன ஆசிரியர் சொல்லும்போது குழந்தைகள் கேட்கவில்லை எனில் ஆசிரியர் சிடுசிடுப்பதில் வியப்பேதும் இல்லை

சரி மொழி ஆளுமை ஓரளவுக்கு புரிந்த குழந்தை, ஆசிரியர் சொல்வதை கேட்க இயலும் .ஆனால் மொழியே சரியாக கை வராத குழந்தை ஆசிரியர் சொல்வதை மணிக்கணக்காக எப்படி கேட்க இயலும் என்று எப்போதேனும் நாம் யோசித்தோமானால் நாம் பேசுவதை அதுவும் வகுப்பில் மனம் போன போக்கில் நான் சொல்வதை எல்லாம் கேள்.. இதையெல்லாம் உன் அறிவு உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற ரீதியில் நாம் பேசுவதை நிறுத்தி விடுவோம் இல்லையா?

இது புரியும் பொழுது அவர்களுக்கேற்ற மொழியை நாம் நிச்சயம் பயன்படுத்தத் துவங்கி விடுவோம்.

இன்று வகுப்பில் மிகவும் அதிக சுட்டித்தனங்கள் செய்தது சஞ்சய் தான்.

நான் கதை சொல்ல ஆரம்பித்தேன் அவன் குறிப்பேட்டை எடுத்து மிகவும் தீவிரமாக வரைய ஆரம்பித்தான்.

நடுவில் ஒரு வித்தியாசமான எல்லா மாணவர்களும் யோசிக்கும் படியான ஒரு கேள்வியை எழுப்பும்போது மட்டும் அவன் தலையை நிமிர்த்தி பதிலே சொல்வார்.

சில நேரங்களில் நான் சொல்வதை அவர் உரத்த குரலோடு எல்லோரும் கேட்கும்படி மீண்டும் சொல்வார்.

பிறகுதான் புரிந்தது நாம் சொல்வதை அவர்கள் ஒருமுறை சொல்லிப் பார்த்துக் கொள்கிறார்கள் அது அவர்கள் கற்றுக் கொண்டதை மீண்டும் உறுதி செய்து கொள்வதற்காக இருக்கலாம். அதேபோல் பெரியவர்கள் படிப்பதைப் போல் ஒரே இடத்திலேயே அமர்ந்து கொண்டு எந்திரம் போல் படிப்பது அவர்களுக்கு இயல்பாக இல்லை.

சில சமயம் சஞ்சய் அப்படித்தான் குதித்துக் கொண்டே ஒன்று இரண்டு சொல்வார், கரும்பலகையில் எழுதி இருப்பவற்றை சத்தமாக கைத்தட்டிக் கொண்டே வாசிப்பார்.

இதோ இன்று அப்படி ஒரு நிகழ்வு வகுப்பு நடந்தது. ஹர்ஷிதா எழுத்துக்களை அடையாளம் கண்டு கூறும் பொழுதெல்லாம் அதற்கு ஏற்றவாறு சரியான விதத்தில் சஞ்சய் கைதட்டி கொண்டே இருந்தார்.

நான் இப்பொழுதெல்லாம் சஞ்சய் அப்படி செய்தால் அதட்டுவதில்லை ஏனெனில் சஞ்சய் இப்பொழுது கற்றுக் கொண்டிருக்கிறார் என்பதை எனக்கு இந்த செய்கைகள் உறுதிப்படுத்துகின்றன.

பிறகு உங்களுக்கு தெரியுமா? நான் தான் சஞ்சய் கைதட்டுவதையோ சத்தமாக பேசுவதையோ இடைஞ்சலாக நினைக்கின்றேன் ஆனால் சக குழந்தைகள் அவ்வாறு நினைக்கவே இல்லை.

கைகட்டி வாய்பொத்திக் கவனிப்பது தான் மிக நல்ல கவனிப்பு இன்று நாம் நினைப்பதும் தவறுதான் அல்லவா

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.