சைனிக் நுழைவு தேர்வு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
நாடு முழுவதும் அமைந்துள்ள 33 சைனிக் பள்ளிகளில் 2025-26-ம் கல்வியாண்டில் 6, 9-ம்வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய நுழைவுத் தேர்வு பிப்ரவரி மாதம் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவானது கடந்த டிச. 24-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் நிறைவு பெறுகிறது.விருப்பமுள்ளவர்கள் https://exams.nta.ac.in/AISSEE/ என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.650-ம், இதர பிரிவினர் ரூ.800-ம் இணையவழியில் ஜன. 24-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
இதுதவிர விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தகுதிகள், ஹால் டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட விவரங்களை என்டிஏ வலைத்தளத்தில் (www.nta.ac.in) அறியலாம். சந்தேகங்கள் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி அல்லது aissee@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்பு கொண்டு உரிய விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Wednesday, January 22, 2025
New
சைனிக் நுழைவு தேர்வு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
Sainik schools
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.