UDISE + மாணவர்கள் விவரங்கள் பதிவேற்றம் பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்குதல் சார்பு மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, January 18, 2025

UDISE + மாணவர்கள் விவரங்கள் பதிவேற்றம் பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்குதல் சார்பு மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்



UDISE + மாணவர்கள் விவரங்கள் பதிவேற்றம் பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்குதல் சார்பு மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

UDISE + மாணவர்கள் விவரங்கள் பதிவேற்றம் - மாணவர்கள் விவரங்கள் Dropbox க்கு அனுப்புவது Import மாணவர்களை பள்ளிகளில் அனுமதிப்பது சார்ந்த பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்குதல் சார்பு மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ..

பார்வை 1ல் கண்ட கடிதத்தின்படி UDISE+ இணையதளத்தில் 2024-25ம் கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் சார்ந்த தரவுகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்ந்த விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி தமிழகப் பள்ளிகளில் மாணவர்கள் விவரங்கள் பதிவேற்றம் செய்யும் பணிகளில் Progression Activity முடிக்கப்பட்டு தங்கள் பள்ளியில் இக்கல்வி ஆண்டில் (2024-25) தொடர்ந்து பயிலும் மாணவர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

பள்ளியில் இறுதி வகுப்பு (Terminal Class) படித்து முடித்த மாணவர்கள் மற்றும் பள்ளியை விட்டு வேறு பள்ளியில் (Another School) சேர்ந்த மாணவர்கள் விவரங்கள் DROPBOX தொகுப்பிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இக்கல்வி ஆண்டில் (2024-25) தற்போது மாணவர்கள் பள்ளியை விட்டு வேறு பள்ளிகளுக்கு (Another school) சென்ற மாணவர்களின் விவரங்களை எவ்வித விடுதலும் இல்லாமல் உடனடியாக Annexure 1ன்படி DROPBOX தொகுப்பிற்கு அனுப்பபட்டிருப்பதை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் உறுதி செய்தல் வேண்டும்.

வேறு பள்ளியில் (Another school) படித்து இக்கல்வி ஆண்டில் (2024-25) தங்கள் பள்ளியில் (Your school) அனுமதி சேர்க்கை (Admission) பெற்று தங்கள் பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் விவரங்கள் Dropbox or school Achive list இல் இருப்பதை உறுதி செய்திட ஏதுவாக தேடுதல் வழிமுறைகள் (Search options) பள்ளி அளவில் (Annexure II) வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி செயல்முறையில் (Procedure for searching dropbox students) தங்கள் பள்ளியில் இக்கல்வி ஆண்டில் (2024-25) அனுமதி சேர்க்கை பெற்ற மாணவர்களின் விவரங்கள் 'Dropbox' தொகுப்பில் உள்ளது என கண்டறியப்பட்டால் Import module வசதியைப் பயன்படுத்தி பள்ளியில் சம்பந்தப்பட்ட மாணவர்களை Annexure III ன்படி எவ்வித விடுதலும் இல்லாமல் Import செய்திடல் வேண்டும்.

மேற்படி Dropbox தொகுப்பு மற்றும் School Achive List இல் உள்ள மாணவர்களை கண்டறியவும் அனைத்து வகையான தேடுதல் வழிமுறைகளையும் (Searching Opetions) பயன்படுத்திய பின்னர்தான் சம்பந்தப்பட்ட மாணவர்கள் விவரங்கள் Dropbox மற்றும் School Active list-ல் இல்லை என்பதனை உறுதி செய்து மேற்படி சம்பந்தப்பட்ட மாணவர்களின் Missing Students (Class 2 to class 12) என்று வகைப்படுத்தப்பட வேண்டும். Missing Students (Class 2 to class 12) என்ற முறையில் வகைப்படுத்தப்பட்ட மேற்படி மாணவர்களின் விவரங்கள் உரிய படிவத்தில் (FORM S02) உரிய அலுவலர் ஒப்புதலுடன்UDISE+இணையதளத்தில் Block admin வாயிலாக பதிவேற்றம் செய்திட ஏதுவாக Annexure - IVன்படி சம்பந்தப்பட்ட வட்டார வளமைய EMIS ஒருங்கிணைப்பாளரிடம் ஒப்படைக்கப்படவேண்டும்.

பள்ளிகளின் நுழைவு வகுப்பு ( Entry Class ( Pre KG, LKG, UKG AND CLASS 1) அனுமதி சேர்க்கை பெற்ற சம்பந்தப்பட்ட மாணவர்கள் விவரங்கள் Dropbox' மற்றும் School Active list இல் கண்டறியப்பட்டவில்லை என்பதனை உறுதி செய்த பின்னர் சம்பந்தப்பட்ட மாணவர்களை உரிய வகுப்பில் ( Add New Student) வசதியைப்பயன்படுத்தி சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

பள்ளியின் மாணவர்களின் வருகைப்பதிவேட்டின்படி, வகுப்புகள் மற்றும் பிரிவுகள் (Class and section) உள்ள மாணவர்கள் விவரங்கள் UDISE+ இணைய தளத்தில் எவ்வித விடுதலும் மற்றும் இரண்டாம்படியும் இல்லாமலும் (No omission Mnd uphication) செய்யப்பட்டிருப்பதை சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் உறுதி செய்தல் வேண்டும். மேற்கண்ட அட்டவணையில் கண்டபடி, பிரிவு Vஇல் குறிப்பட்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கை மற்ற பிரிவு I, II, III and IV இல் குறிப்பிட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை கூட்டுத் தொகைக்கு சமமாக இருக்க வேண்டும்.

பள்ளியில் மாணவர்கள் விவரங்களை Import செய்யும்போது ஏதேனும் இடர்பாடுகள் EMIS/UDISE+ ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு இருப்பின் வட்டார வளமைய கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளியில் மாணவர்கள் விவரங்களை Import செய்யும் போது பிறந்த தேதி (Date of Birth) மற்றும் அனுமதிக்கப்படும் வகுப்பு (Admission class) ஏதேனும் மாற்றம் தேவைப்படின் சம்பந்தப்பட்ட மாணவர்கள் முழுவிவரங்களோடு சம்பந்தப்பட்ட வட்டார வளமைய EMIS/UDISE+ ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடந்த கல்வி ஆண்டில் (2023-24) வெளி மாநில பள்ளியில் படித்து இக்கல்வி ஆண்டில் (2024-25) தங்கள் பள்ளியில் அனுமதி சேர்க்கை (Admission) பெற்ற மாணவர்கள் விவரங்கள் Import செய்யத் தேவைப்படின், மாணவர்களின் முழு விவரங்களையும் வட்டார வளமைய EMIS / UDISE . ஒருங்கிணைப்பாளர்களிடம் உடனடியாக வழங்கி Import செய்யுமாறு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கையுடன்படி மாணவர்களின் விவரங்களை UDISE இணைய தளத்தில் பதிவேற்றம் செய்த பின்பு ஒவ்வொரு மாணவருக்கும் வகுப்பு மற்றும் பிரிவுகள் வாரியாக (class and section) மாணவர்களின் பொது விவரங்கள் (General profile) மாணவர்கள் சேர்க்கை மற்றும் பதிவு விவரங்கள் (Enrollment profile) and மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் (Facilities Profile) and ஆதார் எண் சரிபார்த்தல் ஆகியவற்றை பள்ளியில் பராமரிக்கப்படும் ஆவணங்களின் அடிப்படையில் துல்லியமாக பதிவு செய்திடல் வேண்டும்.

மேற்படி பணிகளை துரிதமாக முடிக்கும் விதமாக கீழ்க்கண்டவாறு காலநிர்ணயம் செய்யப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD UDISE + மாணவர்கள் விவரங்கள் பதிவேற்றம் பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்குதல் சார்பு மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் SPD Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.