8வது சம்பள கமிஷன் - அரசு ஊழியர்களுக்கு இனி ஆரம்ப சம்பளம் ரூ.51,480 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, January 18, 2025

8வது சம்பள கமிஷன் - அரசு ஊழியர்களுக்கு இனி ஆரம்ப சம்பளம் ரூ.51,480



8th Pay Commission - Starting salary for government employees will now be Rs. 51,480 - 8வது சம்பள கமிஷன் - அரசு ஊழியர்களுக்கு இனி ஆரம்ப சம்பளம் ரூ.51,480

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை திருத்தும் வகையில், எட்டாவது சம்பள கமிஷனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அடிப்படை ஊதியம் மூன்று மடங்கு உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பில் மத்திய அரசு ஊழியர்கள் உள்ளனர். அவ்வாறு வழங்கப்பட்டால், மத்திய அரசு வேலைகளில் ஆரம்ப சம்பளம், 51,480 ரூபாயாக உயரும்.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதிய விகிதம், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகிறது. ஒப்புதல்

இதற்காக சம்பளக் கமிஷன் அமைக்கப்படுகிறது. கடந்த, 2016ல் ஏழாவது சம்பளக் கமிஷன் அறிவிக்கப்பட்டது. இந்த கமிஷனின் பதவிக்காலம், இந்தாண்டு டிச., 31ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதையடுத்து, 2026 ஜன., 1 முதல் புதிய ஊதியம் மற்றும் ஓய்வூதியங்களை வழங்கும் வகையில், எட்டாவது சம்பளக் கமிஷனை அமைக்கும்படி, மத்திய அரசு ஊழியர்கள் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில், எட்டாவது சம்பளக் கமிஷனை அமைப்பதற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த தேதியில் இருந்து இந்த கமிஷன் செயல்படும் என்பது அறிவிக்கப்படவில்லை.

தற்போதைய சம்பளக் கமிஷனின் பதவிக் காலம் இந்தாண்டு இறுதியுடன் முடிவடைவதால், எட்டாவது கமிஷனின் பதவிக் காலம், 2026 ஜன., 1 முதல் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 50 லட்சம் பேர்

மத்திய அரசின் இந்த அறிவிப்பால், ராணுவத்தினர் உட்பட, 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் மாற உள்ளது.

இதைத் தவிர, டில்லியில் பணியாற்றும் ராணுவத்தினர் மற்றும் டில்லி அரசு ஊழியர்கள் நான்கு லட்சம் பேருக்கும் சம்பளம் மாற உள்ளது.

கமிஷன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்,'' என, மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

ஏழாவது சம்பளக் கமிஷனின்போது, 3.67 'பிட்பென்ட் பேக்டர்' எனப்படும் சம்பளத்தை நிர்ணயிக்கும் பெருக்கல் காரணியை ஊழியர் சங்கங்கள் கோரின. ஆனால், 2.57 மடங்கு வழங்கப்பட்டது. அதாவது, அடிப்படை சம்பளம், 2.57 மடங்கு உயர்ந்தது. அதன்படி, 7,000 ரூபாயாக இருந்த அடிப்படை சம்பளம், 18 ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது. அதுபோல ஓய்வூதியமும், 3,500 ரூபாயில் இருந்து, 9,000 ரூபாயாக உயர்ந்தது. அதிகபட்ச சம்பளம், 2.50 லட்சம் ரூபாயாகவும், அதிகபட்ச ஓய்வூதியம், 1.25 லட்சம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டது.

தற்போது குறைந்தபட்சம் 2.86 பிட்மென்ட் பேக்டர் அளவுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டால், சம்பளம் 186 சதவீதம் அதிகரிக்கும். இதன்படி, மத்திய அரசு வேலைகளில் குறைந்தபட்ச சம்பளம், 18 ஆயிரம் ரூபாயில் இருந்து, 51,480 ரூபாயாக உயரும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.