'பயிற்றுநர்களும் இல்லை... பாடத்திட்டமும் இல்லை... ’ - பரிதாபத்தில் கணினி அறிவியல் பாடம்
"தமிழக உயர்நிலைப் பள்ளிக ளில் 6 ஆயிரத்து 454, நடுநிலைப் பள்ளிகளில் 8 ஆயிரத்து 209 என மொத்தம், 14 ஆயிரத்து 663 கணினி பயிற்றுநர்களை நியமிக்க வேண்டும். ஆனால், இப்போது வரை அதற்கான எந்த முயற்சியும் தமிழக அரசு செயல்படுத்தவில்லை. மாறாக, 'இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றும் 8 ஆயிரத்து 200 தன்னார்வலர்களை தமிழக அரசு நிய மித்துள்ளது. இது, மத்திய அரசின் விதிகளுக்கு எதிரானது. தகுதியுள்ள பி.எட்., படித்த கணினி பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அதே நேரம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப் பட்ட தகவலின்படி, 2021 முதல் 2024 வரை, கணினி பயிற்றுநர்களுக்கு சம்பளமாக வழங்க, மத்திய அரசு ரூ.400 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால், தமிழகத்தில் கணினி அறி வியல் பாடமும், கணினி பயிற்று நர்களும் இல்லாததால், அந்த நிதி எங்கே செல்கிறது என்று தெரிய வில்லை. நம் அண்டை மாநிலமான கேரளாவில், 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் தனிப்பாடமாக உள்ளது. அதே போல் தெலுங்கானா, கர்நா டகா, டில்லியில் கணினி அறிவியல் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. கணினி பயிற்றுநர்களுக்கான சம்பளம் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து வழங்குகிறது. கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் கேர ளாவில், மத்திய அரசின் திட்டங் களை மாணவர்களின் நலன் கருதி நடைமுறைப்படுத்துகின்றனர். இந்த விஷயத்தில், கேரளாவிடம் தமிழக கல்வித்துறை பாடம் கற்க வேண் டும்" என்று சொல்லிமுடித்தனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.