நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் - திருப்பூர், நாமக்கல், ஈரோடு, தஞ்சாவூர், கரூர், திருவள்ளூர், புதுக்கோட்டை, கடலூர், தருமபுரி, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களிலுள்ள கிராம ஊராட்சிகளை
25 பேரூராட்சிகளுடன் இணைத்து எல்லைகளை விரிவாக்கம் செய்தல் உத்தேச முடிவு - ஆணைகள் - வெளியிடப்படுகிறது
13 நகராட்சிகள் உருவாக்கம் அரசாணை வெளியீடு Government Decree on the formation of 13 municipalities issued
ஆணை:
தமிழ்நாடு சட்டப்பேரவையில், 2021-22ஆம் ஆண்டிற்கான இத்துறையின் மானியக் கோரிக்கையின்போது, பிறவற்றுடன் கீழ்க்காணுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது:
"2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாநிலத்தின் நகர்ப்புர மக்கள் தொகை 48.45 சதவீதம் ஆகும். 2021ஆம் ஆண்டு தற்போதைய சூழலில் மொத்த மக்கள் தொகையில் நகர்ப்புர மக்கள் தொகை சுமார் 53 சதவீதமாக உயர்ந்துள்ளதென கருதப்படுகிறது. எனவே, மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளை ஒட்டியுள்ள நகர்ப்புரத் தன்மையோடு உள்ள பகுதிகளை நகர்ப்புரங்களோடு
இணைத்து தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவது இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.
தற்போது நகராட்சியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளை
மாநகராட்சியாகவும், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி அமைப்புகளை நகராட்சியாகவும், அதேபோன்றே மாநகராட்சிகள், நகராட்சிகளில் சிலவற்றை விரிவாக்கம் செய்திடவும் தொடர்ந்து கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன.
தற்போதுள்ள நகர்ப்புர உள்ளாட்சிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில், நகர்ப்புரத்தன்மை, மக்கள் தொகை, மக்கள் தொகை அடர்த்தி, ஆண்டு வருமானம், பொருளாதார முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையிலும் நகர்ப்புரமாக மாறி வருகின்ற இந்த பகுதிகளிலும் நகரத்திற்கு இணையான அடிப்படை வசதிகளை அளித்திடும் நோக்கிலும் உள்ளாட்சி அமைப்புகள் தரம் உயர்த்தப்படுகிறது."
2. மேலும், உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு, அதாவது, நகரமயமாதலின் வீச்சு, நிர்வாகத் தேவைகள், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைத் திறம்படவும், முழுஅளவிலும் வழங்குதல் (in an efficient and comprehensive manner), உள்ளாட்சிப் பகுதிகளின் எதிர்கால வளர்ச்சிக்கான தேவைகள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, அருகருகே அமைந்துள்ள ஊரக மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளை இணைப்பதன் மூலம் புதிய உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்குதல், எல்லைகளை விரிவாக்கம் செய்தல் போன்றவற்றை ஆய்வு செய்து தக்க செயற்குறிப்புகளை உருவாக்குதல், பரிந்துரைகளை அளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்களைக் கொண்ட உயர்நிலைக் குழுவொன்றை அமைத்து மேலே முதலாவதாக படிக்கப்பட்ட அரசாணையில் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
3. மேற்கண்ட, உயர்நிலைக்குழு, பல்வேறு தேதிகளில் கூடி இப்பொருண்மைகள் மீது விரிவான ஆலோசனைகளை / விவாதங்களை
மேற்கொண்டது. ஊரக மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு, புதிய உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்குதல், உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகள் விரிவாக்கம் தொடர்பாக, நகரமயமாதலின் வீச்சு, நிர்வாகத் தேவைகள், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைத் திறம்படவும், முழுஅளவிலும் வழங்குதல் (in an efficient and comprehensive manner), உள்ளாட்சிப் பகுதிகளின் எதிர்கால வளர்ச்சிக்கான தேவைகள், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், ஊரக மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் பல்வேறு நிலைகளைச் சேர்ந்த அலுவலர்கள் போன்ற தொடர்புடைய அனைத்து தரப்பினரின் (Stakeholders) கோரிக்கைகள்/கருத்துகள் போன்றவை உயர்நிலைக்குழுவின் பல்வேறு கூட்டங்களில் ஆய்வு செய்யப்பட்டு, விவாதிக்கப்பட்டு பல்வேறு தற்காலிக செயற்குறிப்புகள் (Tentative Proposals) உருவாக்கப்பட்டன.
4. மேலும், இப்பொருள் தொடர்பான பல்வேறு பொருண்மைகள் குறித்து உயர்நிலைக் குழுவால் 18.12.2024 அன்று காணொளி வாயிலாக 28 மாவட்ட ஆட்சியர்களுடன் இறுதி ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
5. அதனடிப்படையில், திருப்பூர், நாமக்கல், ஈரோடு, தஞ்சாவூர், கரூர், திருவள்ளூர், புதுக்கோட்டை, கடலூர், தருமபுரி, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளை 25 பேரூராட்சிகளுடன் இணைத்து எல்லைகளை விரிவாக்கம் செய்வது குறித்து மேலே 2 முதல் 13 வரை படிக்கப்பட்ட கடிதங்களில் தொடர்புடைய மாவட்ட ஆட்சித் தலைவர்கள் செயற்குறிப்புகளை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
6. கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைத்து அவற்றின் எல்லைகளை விரிவாக்கம் செய்வது தொடர்பாக பின்வரும் முக்கிய காரணங்களால் முடிவு செய்யப்படுகிறது:
(அ) பெரும்பாலான ஊரகப்பகுதிகள் நகர்ப்புரப் பகுதிகளுக்கு இணையான வளர்ச்சியை அடைந்து வருகின்றன. எனவே, இத்தகைய ஊரகப் பகுதிகளிலும், நகர்ப்புரங்களுக்கு இணையான வகையில் சாலைகள், குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, திரவக்கழிவு மேலாண்மை, பொது / சமுதாய பயன்பாட்டிற்கான நவீன கழிப்பிடங்கள், பாதாளச் சாக்கடை கட்டமைப்பு, ஆற்றல்மிகு தெருவிளக்குகள் போன்ற மக்களுக்கான இன்றியமையாத அடிப்படை வசதிகளை விரிவுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. (ஆ) வேகமாக நகரமயமாகிவரும்/வளர்ச்சியடைந்துவரும் பெரும்பாலான சிறிய உள்ளாட்சி அமைப்புகளால் மக்களுக்கு தேவையான அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான நிதி/இடப்பற்றாக்குறை மற்றும் உட்கட்டமைப்பு வசதி திட்டங்களை நிறைவேற்றுதல், மக்களுக்கான அடிப்படை வசதிப் பணிகள் / சேவைகளின் விரைவான, திறம்பட்ட செயலாக்கத்திற்கு தேவைப்படும் பொறியாளர்கள் உள்ளிட்ட பணியமைப்பு குறைந்த அளவிலேயே உள்ளது போன்றவற்றை களையவும் (to overcome) பேரூராட்சிகளாக தரம் உயர்த்துதல் அவசியமாகிறது.
கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகளாகத் தரம் உயர்த்துவதால், அப்பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதுடன், அடிப்படை வசதிகள், கட்டமைப்பு மேம்பாடு, மேம்படுத்தப்பட்ட சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகளும் அவர்களுக்குக் கிடைக்கும். இந்த மேம்பாட்டினால், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் புதிய தொழிலகங்கள் ஏற்படவும், வேலைவாய்ப்பு உருவாகவும், வருவாய் பெருகவும், அனைத்துத் தரப்பு வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
7. இந்நிலையில், அரசு, மேலே 2 முதல் 13 வரையில் படிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் செயற்குறிப்பினை கவனமாகப் பரிசீலித்து பின்வரும் அட்டவணையில் உள்ளவாறு திருப்பூர், நாமக்கல், ஈரோடு, தஞ்சாவூர், கரூர், திருவள்ளூர், புதுக்கோட்டை, கடலூர், தருமபுரி, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளை 25 பேரூராட்சிகளுடன் இணைத்து எல்லைகளை விரிவாக்கம் செய்வது என உத்தேச முடிவு மேற்கொண்டு, அவ்வாறே அரசு ஆணையிடுகிறது.
கன்னியாகுமரி , அரூர் , பெருந்துறை உள்ளிட்ட 13 புதிய நகராட்சிகளை உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியீடு 16 மாநகராட்சிகளுடன் 4 நகராட்சிகள் , 5 பேரூராட்சிகள் , 149 ஊராட்சிகளை இணைக்க முடிவு - தமிழக அரசு
*13 நகராட்சிகள் உருவாக்கம்-கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட 13 புதிய நகராட்சிகளை உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியீடு 01.01.25...
*16 மாநகராட்சிகளுடன் 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 149 ஊராட்சிகளை இணைக்க முடிவு - தமிழக அரசு.
*சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன், 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 149 ஊராட்சிகள் இணைக்கப்படுகின்றன.
*திருவாரூர், திருவள்ளுர், சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகளுடன் 147 ஊராட்சிகள், 1 பேரூராட்சி இணைக்கப்படுகின்றன.
*கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்பட 13 நகராட்சிகள், புதிதாக அமைக்கப்பட உள்ளன
*ஏற்காடு. காளையார்கோவில், திருமயம் உள்பட 25 பேரூராட்சிகள், புதிதாக உருவாக்கப்பட உள்ளன.
*29 கிராம ஊராட்சிகள், 25 பேரூராட்சிகளுடன் இணைக்கப்பட உள்ளன- தமிழக அரசு.
8. இதனடிப்படையில் உத்தேச எல்லை
அருகில் உள்ள வளர்ச்சி
அடைந்த ஊராட்சி.
விரிவாக்கம் செய்யப்படும்
பேரூராட்சிகளுக்கான வார்டு எண்ணிக்கை மறுநிர்ணயம் செய்யப்பட்டு, வார்டு எல்லைகள் வரையறை செய்யப்பட்டு, பேரூராட்சி மன்றங்களுக்கான அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படும்.
9. இதுகுறித்து, 1998ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின், 3ஆம் பிரிவின் வகைமுறைகளின்படி, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அவ்வாறே மேற்குறிப்பிடப்பட்டுள்ள 3ஆம் பிரிவின் (2)ஆம் உட்பிரிவின்கீழ் இவ்வாணையுடன் இணைக்கப்பட்டவாறான அறிவிக்கை 31.12.2024-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் சிறப்பிதழில்
(ஆங்கிலத்தில்), வெளியிடப்படும்.
10. இதனடிப்படையில் உத்தேச புதிய பேரூராட்சிகளுக்கான வார்டு எண்ணிக்கை மறுநிர்ணயம் செய்யப்பட்டு, வார்டு எல்லைகள் வரையறை செய்யப்பட்டு, பேரூராட்சி மன்றங்களுக்கான அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படும்.
G.O.Ms.No.205 - CLICK HERE TO DOWNLOAD PDF
Press News - CLICK HERE TO DOWNLOAD PDF
Wednesday, January 1, 2025
New
13 நகராட்சிகள் உருவாக்கம் அரசாணை வெளியீடு Government Decree on the formation of 13 municipalities issued
Tamil Government
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.