மத்திய அரசு இணையத்தில் மாணவர் , ஆசிரியர் விபரம் பதிவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, January 20, 2025

மத்திய அரசு இணையத்தில் மாணவர் , ஆசிரியர் விபரம் பதிவு



மத்திய அரசு இணையத்தில் மாணவர் , ஆசிரியர் விபரம் பதிவு

பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பணியாற்றும் ஆசிரியர்கள் விபரங்களை, பிப்ரவரி, 17க்குள், யு.டி.ஐ.எஸ்.இ., என்ற, மத்திய அரசு இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறையின், மாநில திட்ட இயக்குனரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம், நாட்டில் உள்ள பள்ளிகள், மாணவர்கள், ஆசிரியர்களை மேம்படுத்தும் வகையில், அவை குறித்த தரவுகளை, யு.டி.ஐ.எஸ்.இ., என்ற இணையதளத்தில் சேகரிக்கிறது.

அந்த வகையில், 2024 - 2025ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் சார்ந்த தரவுகள், மாணவர்கள், ஆசிரியர்கள் குறித்த விபரங்களை, பிப்ரவரி, 17ம் தேதிக்குள் யு.டி.ஐ.எஸ்.இ., இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மாணவர்களின் வகுப்பு, பிரிவு, பொது விபரங்கள், வழங்கப்படும் நலத்திட்டங்கள், ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை துல்லியமாக பதிவு செய்ய வேண்டும். ஆசிரியர்களின் விபரங்களையும், பள்ளி அறைகளில் உள்ள உள் கட்டமைப்பு விபரங்களையும், விரைவாக பதிவேற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.