100 ஆண்டுகளைக் கடந்த அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டுத் திருவிழா கொண்டாடுதல் - தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலாளரின் செயல்முறைகள்! Celebrating the centenary of government schools that have completed 100 years - Proceedings of the Member Secretary of Tamil Nadu Model Schools!
பொருள்: நூறு ஆண்டுகளைக் கடந்த அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டுத் திருவிழா மாநில, மாவட்ட மற்றும் பள்ளி அளவில் கொண்டாடுதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - சார்ந்து.
பார்வை: -
செயல்முறைகள், பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் ந.க.எண்: 29550/N2/S1/2024, நாள்: 03.01.2025 இணைச் பார்வையில் காணும் செயல்முறையின் படி அரசுப் பள்ளிகளில் முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வாயிலாக நூற்றாண்டுத் திருவிழா கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது.
நூறு ஆண்டுகள் கடந்த அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டுத் தொடக்க விழாவானது வருகின்ற ஜனவரி 22 ஆம் தேதி முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் படித்த திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாநில அளவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சுடர் ஏற்றி தொடங்கி வைத்திடத் அவர்களால் நூற்றாண்டுச் திட்டமிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் இணைப்பு 2-ல் பரிந்துரைக்கப்பட்ட பள்ளிகளில் மாவட்ட அளவிலான தொடக்க விழா ஜனவரி 23 ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 ஆம் ஆம் தேதி வரை நடத்திட மாவட்ட அளவிலான தொடக்க விழாவினைத் திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து பள்ளி அளவிலான நூற்றாண்டுத் திருவிழா பள்ளியின் ஆண்டு விழாவோடு முன்னான் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை இணைத்து கொண்டாடப் பரிந்துரைக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்:
பரிந்துரைக்கப்பட்ட பள்ளிகளில் மாவட்ட அளவிலான நூற்றாண்டுத் திருவிழாவை தொடங்கி வைத்தல்.
மாநில அளவில் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் நூற்றாண்டுச் சுடர் ஏற்றி வைத்திட அதனைத் தொடர்ந்து மாவட்ட அளவிலான தொடக்க விழாவிற்கு பரிந்துரைக்கப்பட்ட பள்ளிகளில் நூற்றாண்டுச் சுடர் ஏற்றுதல்.
• அதனைத் தொடர்ந்து அனைத்து நூற்றாண்டுப் பள்ளிகளிலும் பள்ளி அளவிலான நூற்றாண்டுத் திருவிழா, முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கொண்டாடப் பரிந்துரைக்கப்படுகிறது.
• அரசுப் பள்ளிகளில் நிகழும் நூற்றாண்டுத் திருவிழாவினை குறித்து ஆவணப்படுத்திடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. தலைமை ஆசிரியர்களுக்கான நூற்றாண்டுத் திருவிழா வழிகாட்டு நெறிமுறைகள்:
1. பள்ளி அளவில் விழா ஒருங்கிணைப்புக் குழு அமைத்தல்:
தலைமை ஆசிரியர் வழிகாட்டுதலின் படி ஆசிரியர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், மாணவர்கள் என பள்ளி சார்ந்த பங்காளர்களை (Stakeholders) கொண்டு பள்ளி அளவில் விழா ஒருங்கிணைப்புக் குழு உருவாக்குதல்.
2. நூற்றாண்டு விழா திட்டமிடுதல் மற்றும் பகிர்தல்:
விழாவின் தேதி, சிறப்பு விருந்தினர்கள் விவரம், நிகழ்ச்சி நிரல், பாதுகாப்பு ஏற்பாடுகள், மாணவர்கள் பங்கேற்பு ஆகியவற்றை குழுவாக இணைந்து முடிவெடுத்தல் மற்றும் திட்டமிடுதல்.
3. விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் நூற்றாண்டு விழா நிகழ்வுகள்:.
• விழாக் குழு வாயிலாக பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், உள்ளாட்சி உறுப்பினர்கள், கல்வி அலுவலர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளியைச் சார்ந்த அனைவருக்கும் நூற்றாண்டு விழாக் குறித்து தெரியப்படுத்துதல் மற்றும் வரவேற்றல்.
• விழாவுக்கு முன்பே எதிர்பார்க்கப்படுகிற பங்கேற்பாளர் பட்டியலை தயார் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களை விழாக் குழு வாயிலாக ஒருங்கிணைத்தல். பள்ளி அளவிலான நூற்றாண்டுத் திருவிழாவில் நூற்றாண்டுச் சுடர் ஏற்றுதல்
விழாவில் பள்ளியின் அனைத்து பங்காளர்களும் நூற்றாண்டு உறுதிமொழி ஏற்றல் .
விழாவில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த திட்டமிடுதல்.
விழாவில் தற்போது பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், முன்னாள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை கௌரவித்தல்.
இதுவரை பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுகள், பள்ளி மற்றும் மாணவர்கள் பெற்ற விருதுகள், அரசு மற்றும் பள்ளியின் முன்னெடுப்புகள் குறித்து காட்சிப்படுத்துதல்.
4. நன்கொடை மேலாண்மை: .
விழாவிற்கு முன், விழாவின் போது, விழாவிற்கு பின் பங்காளர்களால் நூற்றாண்டு விழா (அ) பள்ளியின் தேவைக்காக பகிரப்பட்ட அனைத்து வகை பங்களிப்புகளும் (பணம் மற்றும் பொருட்கள்) முறையாக கணக்கு பராமரிக்கப்பட்டு நம்ம வாயிலாக" பள்ளி பதிவு ஸ்கூல் நம்ம ஊரு செய்யப்படவேண்டும். https://nammaschool.tnschools.gov.in/#/find- செலவினங்களுக்காக பங்களார்களிடமிருந்து school-new • இவ்விழாச் இதர செலவினங்களுக்காக (Stakeholders) நிதியாக பெறப்படும் நன்கொடையை பள்ளியின் உள்ள வங்கி கணக்கில் (Miscellaneous Account) வரவு வைத்து கொள்ளலாம்.
5. நூற்றாண்டுத் திருவிழா குறித்து ஆவணப்படுத்துதல் • நூற்றாண்டு விழாவை புகைப்படம் அல்லது வீடியோ வாயிலாக நிகழ்வுகளை பதிவு செய்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்.
மேற்குறிப்பிட்ட அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தவறாது பின்பற்றி, இவ்விழாவினை சிறப்பாக கொண்டாடிட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு:
1. நூறாண்டுகள் கடந்த அரசுப் பள்ளிகளின் பட்டியல்
2. மாவட்ட அளவிலான தொடக்கவிழாவிற்குப் பரிந்துரைக்கப்படும் பள்ளிகளின் பட்டியல்
உறுப்பினர் செயலாளர் தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் பெறுநர்
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நகல்
1. செயலர், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை, தலைமைச் செயலகம். சென்னை - 09.
2. மாநிலத் திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை - 06.
3. இயக்குநர், பள்ளிக் கல்வித் துறை, சென்னை - 06.
4. இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை
CLICK HERE TO DOWNLOAD DSE - 100 Years Schools Celebration PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.