TNTET: ஆசிரியர் தகுதி தேர்வு- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் விரை வுபடுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இது தொடர்பாக திருச்சியில் சனிக்கிழமை அவர் மேலும் கூறியது: அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிப்பதுடன், அவர்கள் அதிக மதிப்பெண்களும் பெறு வதால் சேர்க்கையும் அதிகரித்துள்ளது.
அதற்கேற்ப தகுதியான ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டியதும் அரசின் கடமை. அதன் அடிப்படையில்தான் 3,000-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. தேர்வுகள் நடத்தி சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்து கொண்டிருந்த நிலையில், ஆசிரியரல்லாத பணியாளர்கள் நீதிமன்றம் சென்றதால் அந்தப் பணி தடைபட்டது. இடைநிலை ஆசிரியர்கள் குறித்து அதிமுக ஆட்சியில் 10 ஆண்டு களாக கண்டுகொள்ளவே இல்லை. இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களையும் சேர்த்து நிரப்புவதற்கான நடவடிக்கையை திமுக அரசு எடுத்து வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.