PLUS ONE | மார்ச்-2025 பொதுத் தேர்வு தேர்வெண்ணுடன் கூடிய பள்ளி மாணாக்கரின் பெயர்பட்டியலை பதிவிறக்கம் செய்தல்- தேர்வுத்துறை உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, December 9, 2024

PLUS ONE | மார்ச்-2025 பொதுத் தேர்வு தேர்வெண்ணுடன் கூடிய பள்ளி மாணாக்கரின் பெயர்பட்டியலை பதிவிறக்கம் செய்தல்- தேர்வுத்துறை உத்தரவு

PLUS ONE | மார்ச்-2025 பொதுத் தேர்வு தேர்வெண்ணுடன் கூடிய பள்ளி மாணாக்கரின் பெயர்பட்டியலை பதிவிறக்கம் செய்தல்- தேர்வுத்துறை உத்தரவு

பார்வையில் காணும் இவ்வலுவலகக் கடிதத்தில், 2024-2025-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணாக்கரின் GR எண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியல் 13.11.2024 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யுமாறும், அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் அத்திருத்தங்களை 15.11.2024 முதல் 22.11.2024 வரையிலான நாட்களில் பதிவேற்றம் செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், மேற்கண்ட நாட்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, மார்ச் 2025 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணாக்கரின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியல் 10.12.2024 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் உரிய அறிவுரையினை வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஒம்/- இயக்குநர்

நகல்:

1. அனைத்து மாவட்டஅரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள்

2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் தகவலுக்காகக்காகவும், தக்க நடவடிக்கைக்காகவும்

மேல்நிலை முதலாம் ஆண்டு - மார்ச்-2025 பொதுத் தேர்வு தேர்வெண்ணுடன் கூடிய பள்ளி மாணாக்கரின் பெயர்பட்டியலை பதிவிறக்கம் செய்தல் - அறிவுரை வழங்குதல் - தொடர்பாக தேர்வுத்துறையின் செயல்முறைகள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.