தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜேக்) மாநில அமைப்பு - மாநிலப் பொதுக்குழு கூட்டம் அழைப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, December 26, 2024

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜேக்) மாநில அமைப்பு - மாநிலப் பொதுக்குழு கூட்டம் அழைப்பு

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜேக்) மாநில அமைப்பு - மாநிலப் பொதுக்குழு கூட்டம் அழைப்பு

பேரன்புடையீர், வணக்கம்.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜேக் பேரமைப்பின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் பின்வரும் நிகழ்வு முறைப்படி நடைபெற உள்ளது.

நாள் : 28.12.2024 சனிக்கிழமை

இடம் : காலை சரியாக 10.30 மணி

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அலுவலகம்

மேயர் சிட்டிபாபு வீதி, சென்னை.

பொருள்:

கோரிக்கைகளை வென்றெடுக்க அடுத்தகட்ட தொடர் நடவடிக்கைகள் திட்டமிடல்

மிக முக்கியமான காலகட்டத்தில் நடைபெறும் இப்பொதுக்குழு கூட்டத்தில் டிட்டோஜேக் பேரமைப்பில் இணைந்துள்ள அனைத்து இயக்கங்களின் சார்பில் மாநிலப்பொதுக்குழு உறுப்பினர்கள் அவசியம் பங்கேற்றிட கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடன்

மன்றம் நா.சண்முகநாதன்

டிட்டோஜேக் சுழல்முறை கூட்டத்தலைவர்

பொதுச்செயலாளர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.