பள்ளிகளை தத்தெடுக்க DIET நிர்வாகத்திற்கு SCERT இயக்குநர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, November 14, 2024

பள்ளிகளை தத்தெடுக்க DIET நிர்வாகத்திற்கு SCERT இயக்குநர் உத்தரவு!



பள்ளிகளை தத்தெடுக்க DIET நிர்வாகத்திற்கு SCERT இயக்குநர் உத்தரவு!

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்

பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் சில பள்ளிகளை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் சார்ந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மூலம் தெரிவு செய்து தத்தெடுத்தல் ( Adoption ) -மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் தொடர்பாக SCERT இயக்குநர் உத்தரவு! மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06

ந.க.எண்.898560/எஃப்-3/2024 நாள்.8.10.2024

பொருள்:

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் சில பள்ளிகளை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் சார்ந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மூலம் தெரிவு செய்து தத்தெடுத்தல் (Adoption) மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் தொடர்பாக.

பார்வை: 14.10.2024 அன்று நடைபெற்ற பள்ளிக் கல்விச் செயலர் அவர்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள். பள்ளிக் கல்வித்துறை செயலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அனைத்து மாவட்டங்களிலுள்ள பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசுப் பள்ளிககளில் சில பள்ளிகளை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள், முதுநிலை விரிவுரையாளர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் தத்தெடுத்து அப்பள்ளிகளை வளப்படுத்தவும் ஆசிரியர்களின் பணித்திறனை மேம்படுத்தவும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள், முதுநிலை விரிவுரையாளர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் ஒவ்வொருவரும் சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருடன் கலந்தாலோசித்து தங்கள் மாவட்டத்திலுள்ள இரண்டு பள்ளிகளைத் தெரிவு செய்து, தத்தெடுக்க (Adoption) வேண்டும். அவ்வாறு தத்தெடுத்த பள்ளிகளின் விவரங்களை இணைப்பு 1 இல் தெரிவித்துள்ளவாறு ஒரு பட்டியலினைத் தயாரித்து இவ்வியக்ககத்திற்கு 25.10.2024க்குள் tnscertjd3@gmail.com இணை இயக்குநர் (பயிற்சி) அவர்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு தத்தெடுத்த பள்ளிகள் ஒவ்வொன்றையும் மாதம் இரு முறை பார்வையிட வேண்டும். அவ்வாறு பார்வையிடும் போது பள்ளி வளாகத் தூய்மை சார்பாகத் தேவையான வழிகாட்டுதல்களைப் பள்ளித் தலைமையாசிரியருக்கு வழங்க வேண்டும்.

பள்ளி வகுப்பறை கற்பித்தலைப் பார்வையிடும்போது, ஆசிரியர் மாணவர்களிடையிலான அணுகுமுறை, கற்பித்தல் கருவிகளைப் பயன்படுத்தும் விதம், பாடப்பொருளை துணைக் கருவிகளுடன் விளக்குதல், மாணவர் செயல்பாடுகள், ஆசிரியர் மாணவர்களிடம் வினாக் கேட்டு விடையறிதல் போன்ற வகுப்பறைச் செயல்பாடுகளை உற்று நோக்க வேண்டும்.

மேற்கண்டவற்றில் ஏதேனும் குறைபாடுகளை கண்டறிந்தால், ஆசிரியர் வகுப்பு கற்பித்தலை நிறைவு செய்தபின் தனிப்பட்ட முறையில் ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியருடன் கலந்துரையாட வேண்டும். வகுப்பறை கற்பித்தலில் ஆசிரியர் சிறப்பாகச் செயல்படுத்திய செயல்பாடுகள் அல்லது புதிய உத்திகளை குறிப்பெடுத்து பாடவாரியாக தொகுத்து, அதனை அறிக்கையாகத் தயாரிக்க வேண்டும்.

மேலும் வகுப்பறை உற்றுநோக்கலின் போது ஆசிரியருக்கு கற்பிக்கும் போது இடர்பாடு ஏற்பட்டால் அப்பகுதிகளை குறிப்பெடுத்து பாடவாரியாக தொகுத்து தனி அறிக்கை தயாரிக்க வேண்டும். மேற்கூறிய இரண்டு அறிக்கைகளையும் நிறுவன முதல்வரிடம் மறு நாளே ஒப்படைக்க வேண்டும்.

அனைத்து கல்வியாளர்களின் அறிக்கைகளை தொகுத்து, துரிதமாக இவ்வியக்ககத்திற்கு அனுப்ப அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பள்ளிப் பார்வைக்குச் செல்லும் நிறுவன முதுநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர்களுக்கு பயணப்படியாக நாள் ஒன்றுக்கு ரூ.200/- வீதம் வழங்கிடவும், இந்நிதியினை தங்களது நிறுவன திட்டம் மற்றும் செயல்பாடுகள் நிதியிலிருந்து செலவினம் மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது. CLICK HERE TO DOWNLOAD SCERT - School Adoption Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.