காந்திய சிந்தனைகளை வளர்த்தல் - ஒவ்வொரு மாதமும் அறிக்கை அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, November 13, 2024

காந்திய சிந்தனைகளை வளர்த்தல் - ஒவ்வொரு மாதமும் அறிக்கை அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!!



காந்திய சிந்தனைகளை வளர்த்தல் - ஒவ்வொரு மாதமும் அறிக்கை அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!!

பள்ளிக் கல்வி துறையில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடம் உள்ளார்ந்து புதைந்திருக்கும் நற்பண்புகளை வெளிக்கொணர்வது கல்வியின் நோக்கமாக உள்ளது . பள்ளிக் கல்வி பயிலும் மாணவர்களிடத்தில் நமது தேசத்தந்தை மகாத்மா காந்திஜி அவர்களின் சிந்தனைகள் மற்றும் விழுமியங்களை கொண்டு சேர்ப்பது இன்றியமையாத ஒன்றாகும் . 2024-25 ஆம் ஆண்டிற்கான ஜூலை 2024 முதல் செப் 2024 முடிய உள்ள காலாண்டிற்கான இப்பொருள் சார்ந்து , மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் விவரத்தினை 03.10.2024 - க்குள் அனுப்பிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. பார்வை 2 இல் காண் செயல்முறைகளில் இப்பொருள் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விபரங்களை ஒவ்வொரு மாதமும் இறுதி வாரத்தில் 25 ஆம் தேதிக்குள் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் ( நாட்டு நலப் பணித்திட்டம் ) அவர்களுக்கு அனுப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது . எனவே , மேற்காண் அறிவுரைகளை தவறாமல் பின்பற்றி ஒவ்வொரு மாதமும் விபரங்களை அனுப்பிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது .

CLICK HERE TO DOWNLOAD DSE - Gandhiji Thoughts Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.