ஆசிரியர் 'சஸ்பெண்ட்’ விவகாரம் கல்வி அலுவலர் நேரில் விசாரணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, November 27, 2024

ஆசிரியர் 'சஸ்பெண்ட்’ விவகாரம் கல்வி அலுவலர் நேரில் விசாரணை

ஆசிரியர் 'சஸ்பெண்ட்’ விவகாரம் கல்வி அலுவலர் நேரில் விசாரணை Education officer to personally investigate teacher suspension issue

தலைவாசல் அருகே, கிழக்கு ராஜாபாளையம் கிராமத்தில் உள்ள, அரசு உயர்நிலைப்பள்ளியில், 90க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பள்ளி கணித ஆசிரியர் ஜெயபிரகாஷிற்கு, மாணவர்கள் கால் பிடித்து விடும் வீடியோ கடந்த, 22ல், வெளியானது. வீடியோ தொடர்பாக, சேலம் முதன்மை கல்வி அலுவலர் கபீர், ஆசிரியர் ஜெயபிரகாசை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். கடந்த, 23ல், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள், ஆசிரியர் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வேண்டும். வீடியோ குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என, சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நேற்று சேலம் மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் நரசிம்மன் தலைமையிலான கல்வித்துறை அலுவலர்கள், உயர்நிலை பள்ளிக்கு நேரில் சென்று மாணவர்கள், பெற்றோர், பொதுமக்களிடம் விசாரணை செய்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.