பள்ளி வளாகத்திலேயே ஆசிரியை கொடூர க்கொலை டிட்டோஜாக் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆசிரியை படுகொலையைக் கண்டித்து டிட்டோஜேக் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
மல்லிப்பட்டினம் ஆசிரியை படுகொலையைக் கண்டித்து டிட்டோஜேக் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜேக்) மாநில அமைப்பு பள்ளி வளாகத்திலேயே ஆசிரியை கொடூரக்கொலை டிட்டோஜேக் பேரமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது படுகொலை சம்பவத்தைக் கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியை ரமணி என்பார் பள்ளி வளாகத்திலேயே கொடூரமாகக் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலைச் சம்பவத்தை அரங்கேற்றிய கொலையாளி கைது செய்யப்பட்ட நிலையில், இப்படுகொலைச் சம்பவம் ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய கலக்கத்தையும், பயத்தையும் உருவாக்கியுள்ளதோடு, உயிருக்கு பாதுகாப்பற்ற அச்சமிகுந்த சூழலை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் ஆசிரியர்களுக்கு எந்த திசையிலிருந்து எந்தவிதமான தாக்குதல்கள் வருமோ என்ற கலக்கத்தில் பணிபுரிய வேண்டிய அச்சநிலைக்கு ஆசிரியர்கள் ஆளாகியுள்ளனர். இந்த நிலை மாறவேண்டுமென்றால் மருத்துவர் உள்ளிட்ட துறைசார்ந்தவர்களுக்கு நடைமுறையில் உள்ளதுபோல ஆசிரியர்களுக்கும் பணிப்பாதுகாப்புச் சட்டத்தினை தமிழ்நாடு அரசு உடனடியாக ஏற்படுத்த வேண்டும். அச்சட்டத்தில் கடுமையான தண்டனைப் பிரிவுகளை உட்படுத்தவேண்டும். ஆசிரியர் ரமணி அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உரிய இழப்பீட்டினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்க வேண்டும். இது போன்ற ஆசிரியர் விரோத சம்பவம் இனி எங்கும் நடைபெறாத படி கடுமையான தண்டனையை கொலையாளிக்கு தமிழ்நாடு காவல்துறை பெற்றுத்தரவேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் டிட்டோஜேக் பேரமைப்பு சார்பில் 21.11.2024 வியாழன் மாலை 5.00 மணியளவில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என டிட்டோஜேக் பேரமைப்பு முடிவுசெய்து அறிவிக்கிறது.
CLICK HERE TO DOWNLOAD டிட்டோஜேக் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.