டெல்லியில் வசிப்பது தினமும் 40 சிகரெட் புகைப்பதற்கு சமம்.. தமிழ்நாட்டில் எவ்வளவு தெரியுமா? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, November 19, 2024

டெல்லியில் வசிப்பது தினமும் 40 சிகரெட் புகைப்பதற்கு சமம்.. தமிழ்நாட்டில் எவ்வளவு தெரியுமா?



டெல்லியில் வசிப்பது தினமும் 40 சிகரெட் புகைப்பதற்கு சமம்..

தமிழ்நாட்டில் எவ்வளவு தெரியுமா?

டெல்லியில் மக்களை இயல்பு வாழக்கையை முடக்கிப்போடும் அளவுக்கு காற்று மாசு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. அரியானா, உத்தரப் பிரதேசம், பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம் ஆகியவற்றில் கடந்த சில வாரங்களாக காற்றின் தரம் அதலபாதாளத்துக்குச் சென்றுள்ளது. டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடர் பனிமூட்டம் போல மாசு புகை சூழ்ந்துள்ளது.

இதனால் விபத்துகளும் அரங்கேறி வருகிறது. இவை மட்டுமின்றி சென்னை உட்பட இந்தியாவின் பெரு நகரங்களில் காற்றின் தரம் தாறுமாறாக குறைந்து வருகிறது.

இதற்கிடையே மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கும் உடல்ரீதியான பலவித நோய்களும் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் சிகெரெட் புகைப்பதால் ஏற்படும் அபாயங்களான புற்று நோய் உள்ளிட்ட தீங்குகள் மாசுபட்ட காற்றை சுவாசிப்பதாலும் ஏற்படுகிறது என்ற ஒப்பீடு வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலேயே டெல்லி காற்றின் தரம் 978 என்ற மோசமான நிலையில் உள்ளது.

டெல்லியில் இருப்பது ஒரு நாளைக்கு சுமார் 40 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம் என்று தெரியவந்துள்ளது.

அரியானாவில் இருப்பது ஒரு நாளைக்கு 29 சிகெரெட்டுகளை சுவாசிப்பதற்கு சமமாகும்.

தமிழ்நாட்டில் காற்றின் தரக் குறியீடு சராசரியாக 164 ஆக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் இருப்பது ஒரு நாளைக்கு 2 சிகெரெட்டுகளை புகைப்பதால் ஏற்படும் தீங்குகளை விளைவிக்கும்.

இதேபோல், ஆந்திர தெலுங்கானாவில் தினம் 2 சிகெரெட்டுகள், கேரளா, கர்நாடகாவில் தினம் 1 சிகெரெட்டுகள் புகைப்பதற்கு ஈடாக காற்றின் தரம் உள்ளது என்று தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.