DTCP Approval இல்லாமல் Planning & Non Planning Area அனைத்து பகுதிகளில் உள்ள பள்ளிகளும் 31.05.2026 வரை RENEWAL செய்யலாம் - தனியார் பள்ளிகள் இயக்குநர் Schools located in all areas—both Planning and Non-Planning—may renew their registrations until May 31, 2026, even without DTCP approval — Director of Private Schools.
அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. இதில், பள்ளிக் கட்டடங்களுக்கான வரைபட அனுமதி முறையாகப் பெற்ற பின்னரே கட்டடங்கள் கட்டப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2) மேற்படி அரசாணை வெளியிடப்படுவதற்கு முன்னர் வரை பள்ளிக் கட்டடங்களுக்கான வரைபட அனுமதி, நகர் மற்றும் ஊரமைப்புத் துறை / உள்ளூர் திட்டக்குழுமம் / சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் பெறப்பட வேண்டும் என்ற எவ்வித அரசாணையும் இத்துறை மூலம் வழங்கப்படாத நிலையில், உள்ளாட்சி அமைப்பிடம் பெறப்பட்ட பள்ளிக் கட்டட வரைபட அனுமதியினைக் கொண்டு பள்ளிகள் தொடங்க அனுமதி மற்றும் அங்கீகாரங்கள் வழங்கப்பட்டு வந்தன.
3) முறையான கட்டட வரைபட அனுமதி பெறாத பள்ளிக் கட்டடங்களை முறைப்படுத்த பார்வை 2 முதல் 5, 6 மற்றும் 9ல் உள்ள அரசாணைகளில் தளர்வு வழங்கி கடைசியாக 31052023 வரை தொடர் அங்கீகாரம் வழங்க அனுமதிக்கப்பட்டது.
4) இந்நிலையில் பள்ளிகள் பாதிக்கப்படாமல் இருக்க தற்காலிக தொடர் அங்கீகாரம் 31052026 வரை வழங்கலாம் என பார்வை 14ல் காணும் அரசு கடிதத்துடன் இணைத்து பெறப்பட்ட அரசு தலைமை வழக்கறிஞரின் சட்டக்கருத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5) மேற்படி சட்டக் கருத்தில் நகர் மற்றும் ஊரமைப்புத் துறையின் இசைவினைப் பெற வேண்டும் என்று வலியுறுத்தாமல் உள்ளாட்சி அமைப்பில் பெற்ற கட்டட வரைபட ஒப்புதலைக் கொண்டு 31052026 வரை தற்காலிகத் தொடர் அங்கீகாரம் வழங்கத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து வகைத் தனியார் பள்ளிகளுக்கும் மேற்படி வழிகாட்டுதலின்படி 31052026 வரை தற்காலிகத் தொடர் அங்கீகாரம் பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (தனியார் பள்ளிகள்) தெரிவிக்கப்படுகிறது. This Tamil government directive outlines the process for renewing temporary recognition for private schools based on building plan approvals.
Schools previously operating with plan approvals from local bodies can now get temporary recognition renewed until May 31, 2026.
This extension is granted based on legal advice to ensure school operations are not disrupted.
District Educational Officers are instructed to take necessary actions to process these temporary renewals for all private schools under these guidelines.


No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.