NAS - Model Exam - 3rd round Schedule - SCERT Proceedings
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - 3.6 மற்றும் ஆம் வகுப்பிற்கு டிசம்பர் 4 , 2024- ( NAS ) அடைவாய்வு தேர்வு நடைபெறுதால் மதிப்பீட்டு புலம் · அனைத்து மாவட்டங்களிலும் 6 முதல் 9 வகுப்பு வரை கற்றல் விளைவு / திறன் சார்ந்த மதிப்பீட்டுத் தேர்வு நான்கு சுற்றுகள் நடைபெறுதலில் மாதாந்திர பாடத்திட்டம் அட்டவணை மட்டும் மாற்றியமைத்தல் சார்ந்து SCERT Proceedings மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06.
ந.க.எண். 6519 / G3/2023,
நாள்.19.11.2024
பொருள்:
பார்வை:
சென்னை-06, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் - 3, 6 மற்றும் 9 ஆம் வகுப்பிற்கு டிசம்பர் 4, 2024-(NAS) அடைவாய்வு தேர்வு நடைபெறுதால் மதிப்பீட்டு புலம் - அனைத்து மாவட்டங்களிலும் 6 முதல் 9 வகுப்பு வரை கற்றல் விளைவு / திறன் சார்ந்த மதிப்பீட்டுத் தேர்வு நான்கு சுற்றுகள் நடைபெறுதலில் மாதாந்திர பாடத்திட்டம் 3 வது சுற்று தேர்வு அட்டவணை மட்டும் மாற்றியமைத்தல் சார்ந்து.
சென்னை-06, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் இதே எண்ணிட்ட செயல்முறைகள் நாள். 18.09.2024 பார்வையில் காணும் செயல்முறைகளின்படி, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கற்றல் விளைவு / திறன் 25 கல்வியாண்டில் வழி மதிப்பீட்டுத் தேர்வுகளை (Learning Outcome / Competency Based Test) 2024 நான்கு சுற்றுகளில் நடத்துதல் சார்பான வழிகாட்டுதல்கள் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் / மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் / மாவட்ட உதவித் திட்ட அலுவலர்களுக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பப்பட்டுள்ளது. அதன் பொருட்டு, தொடர் வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, டிசம்பர் 4, 2024 (NAS) அடைவாய்வு தேர்வு நடைபெறுவதால், மதிப்பீட்டுப் புலம் சார்பான, கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டு 3 வது சுற்று தேர்வு 26.11.2024 முதல் 29.11.2024 வரை நடத்துவதற்கு பதிலாக, முதன்மையான கற்றல் விளைவுகள் சார்ந்த தேர்விற்கு ஆயத்தப்படுத்தும் விதமாக, 3 வது சுற்று தேர்வு அட்டவணை மட்டும் 25.11.2024 முதல் 29.11.2024 வரை மாதிரித் தேர்வு கீழ்கண்ட அட்டவணையின்படி நடத்திட தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பு:
1. இந்த எவ்வித புகாருமில்லாமல் நடத்துவதற்கு ஆயத்தத் தேர்வினை எவ்வித இதன் சார்பான வழிகாட்டுதல்கள் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி/ மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் / மாவட்ட உதவித் திட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் பொருட்டு கீழ்க்காணும் தொடர் வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கப்படுகிறது.
விடைகளை 2 ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியே அச்சடித்த வினாத்தாள்கள் வழங்கி, அதற்கான செய்ய மாணவர்கள் குறிப்பிட அத்தாள்களிலேயே மாணவர்கள் வேண்டும். இத்தேர்வை வகுப்பாசிரியர்கள் அவரது பாட வேளையில் கொடுக்கப்பட்டுள்ள கால அட்டவணை நாளன்று தவறாமல் நடத்த வேண்டும். 3. இத்தேர்வுக்கான வினாக்கள் அந்தந்த வகுப்புகளுக்கான பாடங்களுக்காக அந்நாள்வரை வகுப்பறையில் கற்பிக்கப்பட்ட கற்றல் விளைவுகளின் அடிப்படையில் அமைந்திருக்கும். மாணவர்கள் விடையளித்த வினாத்தாள்களை மதிப்பெண்ணிட்டு, வகுப்பாசிரியர்கள் பராமரிக்க வேண்டும். தேர்வுக்குப் பின் வரும் கற்பித்தல் நாட்களில், இவ்வினாத்தாள்களில் அமைந்துள்ள வினாக்கள், வினா அமைப்பு தேர்வுகளை எதிர்கொள்ளும் முறை குறித்து அனைத்து ஆசிரியர்களும், தங்கள் வகுப்பறையில் மாணவர்களுடன் தொடர்ச்சியாக கலந்துரையாட வேண்டும்.
அதன்படி, பார்வையில் காணும் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்ட பிற சுற்றுக்கான தேர்வு அட்டவணை மற்றும் அதன் நிபந்தனைகள் அவ்வாறே பொருந்தும் எனவும், இப்பணியினை மிகச் சிறப்பாக எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படுத்திட அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
நகல்
1. இந்நிறுவன சார்ந்த (மதிப்பீட்டுப் புலம்) ஒருங்கிணைப்பாளர் உரிய நடவடிக்கைகாக அனுப்பப்படுகிறது.
2. இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்குநரகம், சென்னை-6 / இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநரகம்,
சென்னை-6 உரிய தொடர் நடவடிக்கைக்காக கனிவுடன் அனுப்பப்படுகிறது.
3. மாநிலத் திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை-6 தகவலுக்காக பணிவுடன் அனுப்பப்படுகிறது.
4. முதன்மைச் செயலர், பள்ளிக்கல்வித்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9 தகவலுக்காக பணிவுடன் அனுப்பப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD Learning Outcome & Competency Test - Schedule - PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.