தேர்தல் பணி - ஆசிரியருக்கு 'நெருக்கடி' இல்லை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 16, 2026

தேர்தல் பணி - ஆசிரியருக்கு 'நெருக்கடி' இல்லை

தேர்தல் பணி ஆசிரியருக்கு 'நெருக்கடி' இல்லை

திருப்பூர், மார்ச் 16-சட்டசபை தேர்தல் மார்ச் துவக்கத்தில் அறி விக்கப்படுமென எதிர் பார்க்கப்பட்ட நிலையில், நேற்று அறிவிப்பு வெளி யானது.

வழக்கமாக தேர்தல் அறிவிப்பு வெளியான, ஓரிரு நாட்கள் அல்லது அதே வாரத்தில் வேட்பு மனு தாக்கல் துவங்குவ தாக அறிவிக்கப்படும். ஆனால், கட்சியினர், இம்முறை அனைத்து தரப்பினரும் யோசித்து, நிதானிக்க,நேரம் வழங் கப்பட்டுள்ளது.

நேற்று தேர்தல் அறி விப்பு வந்தாலும், வரும், 30ம் தேதி தான் வேட்பு மனு தாக்கல் துவங்கு கிறது. கடந்த முறை, ஏப் ரல், 6ல் தேர்தலே நடத்தி முடிக்கப்பட்டு விட்டது; இம்முறை வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 6 வரை நடக்கிறது.

தேர்தல், ஏப்ரல் மூன் றாவது வாரம், 23ம் தேதி நடக்கவுள்ளது. கடந்த, 2021ல் முதலாவ தாக தமிழகத்தில் தேர்தல் நடந்தது; பிற மாநிலங் களில் அதன்பின் தேர்தல் நடந்தது. 2026 பிற மாநில தேர்தல் நடந்த முடிந்த பின் தான், தமிழ கத்தில் தேர்தல் நடக்கிறது. இதனால், பள்ளி கல்வி பணியை ஒருபுறம் பார்த்து விட்டு, தேர்தல் பணியில் ஈடுபட ஆசிரியர்களுக்கு ரிலாக்ஸ் கிடைத்துள்ளது.

தேர்தல் பணியில் ஈடு படும் ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், கடந்த முறை தேர்வு நடந்து கொண்டிருந்த போது தேர் தல் பணிகளையும் மேற் கொள்ளவேண்டியிருந்தது; 6ம் இம்முறை ஏப்ரல், தேதியுடன் பொதுத்தேர் வுகள் முடிந்து விடுகிறது. ஏப்ரல், 23 தேர்தல் என் பதால், அதற்கு முன்பாக துவக்க, நடுநிலைப்பள் ளிகள் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு விடும் என் பதால், சற்று ஆறுதலாக பணியாற்ற முடியும்.

தேர்தல் அறிவிப்பு மட் டுமின்றி, வேட்பு மனுதாக் கல், தேர்தல் நடக்கும் நாள் ஏப்ரல் மூன்றாவது வாரம் வரை தள்ளி போயுள்ள தால், சிரமமின்றி பணி யாற்ற முடியும்,' என்றனர்.

This Tamil-language news article discusses how the schedule for the 2026 assembly elections provides relief to teachers involved in election duties.

The election notification was released on March 15, but candidate nomination filing starts on March 30, giving parties more time.

Unlike the 2021 election, which was held first in Tamil Nadu, the 2026 election is scheduled for April 23, after elections in other states conclude.

Teachers report that this schedule is less stressful than the last election, as public examinations will be completed by April 6, before election work peaks.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.