ஆங்கில ஆசிரியர்களுக்கு whatsapp குழு ஆரம்பித்து பணித்திறனை மேம்படுத்த SCERT உத்தரவு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, October 18, 2024

ஆங்கில ஆசிரியர்களுக்கு whatsapp குழு ஆரம்பித்து பணித்திறனை மேம்படுத்த SCERT உத்தரவு.



ஆங்கில ஆசிரியர்களுக்கு whatsapp குழு ஆரம்பித்து பணித்திறனை மேம்படுத்த SCERT உத்தரவு.

ஆங்கில ஆசிரியர்களுக்கு whatsapp குழு ஆரம்பித்து பணித்திறன் மேம்படுத்துதல் சார்ந்து எஸ் சி இ ஆர் டி இயக்குனரின் செயல்முறைகள் English Trs Whatapp Group - SCERT Proceedings

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மாவட்டங்களில் உள்ள ஆங்கில பாட ஆசிரியர்களை இடைநிலை, பட்டதாரி என இரண்டு வகையாகப் பிரித்து கட்செவி அஞ்சல் (whatsapp) குழுவில் இணைத்து செயல்பாடுகள் மற்றும் பணித்தாள்களைக் கொண்டு பணித்திறன் மேம்படுத்துதல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுரை வழங்குதல் - தொடர்பாக. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மாவட்டங்களில் உள்ள ஆங்கில பாட ஆசிரியர்களை இடைநிலை, பட்டதாரி என இரண்டு வகையாகப் பிரித்து கட்செவி அஞ்சல் (whatsapp) குழுவில் இணைத்து செயல்பாடுகள் மற்றும் பணித்தாள்களைக் கொண்டு பணித்திறன் மேம்படுத்துதல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுரை வழங்குதல் - தொடர்பாக.

14.10.2024 அன்று நடைபெற்ற பள்ளிக் கல்விச் செயலர் அவர்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்.

பள்ளிக் கல்வித்துறை செயலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர்களை இடைநிலை, பட்டதாரி என வகைப்படுத்தி அவர்களை, 2 கட்செவி அஞ்சல் (whatsapp) குழுவில் இணைத்து அவர்களுக்கு கற்பித்தல் பணிக்கு உதவ மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் தங்கள் நிறுவனத்திலுள்ள 2 முதுநிலை விரிவுரையாளர் விரிவுரையாளர்களை நியமித்து 2 வாட்ஸ் ஆப் குழுக்கள் உருவாக்கச் செய்ய வேண்டும். இக்குழுவில் ஆசிரியர்களை இணைத்த பிறகு அக்குழுவிலுள்ள ஆசிரியர்களோ அல்லது நிறுவன பொருப்பாளரோ சிறு செயல்பாடுகள், பணித்தாள்கள் மற்றும் பாடக்கற்பித்தல் சார்ந்த விவரங்களையோ குழுவில் பதிவிட வேண்டும். இச்செயல் வழியாக ஆங்கில ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை பணித்திறன் மேம்படுவதற்கான தொடர் முயற்சியாகும்.

இச்செயல்பாடுகளில் ஆர்வமில்லாத ஆசிரியர்களை ஊக்கப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இருப்பினும் தொடர்நது ஆர்வம் காட்டாத ஆசிரியர்களை தெரிவு செய்து மீளவும் பயிற்சியில் பங்கு பெறச் செய்யும் வகையில் ஒரு பட்டியல் தயாரித்து இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்க அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.