வருமான வரி - TDS Form விரைவில் File செய்யக் கோருதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!! தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6. ந.க.எண். 019472/பி1-இ4/2024, நாள். .10.2024
பொருள்:
பள்ளிக் கல்வி - Income Tax TDS Default - TDS Form விரைவில் File செய்யக் கோருதல் - சார்பு.
பார்வை: கடிதம்
ஆணையர். கருவூலக் கணக்குத் துறை, சென்னை-35, அவர்களின் எண்.280/2024/இ1.
நாள்.11.04.2024 மற்றும் 15.10.2024
பார்வையில் காணும் 11.04.2024 நாளிட்ட கடிதத்தில், பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள அனைத்து சார்நிலை அலுவலர்கள் மற்றும் அனைத்து பணம் பெறும் அலுவலர்களின் (அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்) TAN Number-ல் TDS file நிலுவையியுள்ள தொகையினை File செய்வதற்கு உரிய அறிவுரைகள் வழங்க தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்கனவே இவ்வியக்கக இயக்குநரின் 24.04.2024 நாளிட்ட செயல்முறைகள் மூலம் அறிவுரை வழங்கப்பட்டது. தற்போது, பார்வையில் காணும் 15.10.2024-ல் கண்டவாறு. 17.10.2024 அன்று Video Conference மூலம் கூட்டம் நடத்தப்பட்டு. நிலுவையில் உள்ள TDS file சார்பாக துரித நடவடிக்கை மேற்கொள்ள அறிவிக்கப்பட்டது.
மேலும், பார்வையில் காணும் 15.10.2024 நாளிட்ட கடிதத்தில், பிரிவு 234 E-ன் கீழ் உரிய காலத்திற்குள் TDS Return File செய்ய தவறுவது நாள் ஒன்றுக்கு ரூ.200/- வீதம் அபராதம் செலுத்த வழிவகுக்கும் எனவும், உரிய காலத்திற்கு TDS File செய்வது DDO களுடைய பொறுப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழ்கண்டவாறு
The statement / returns have to be filed on Quarterly basis with due dates as below :
Quarter Period Q1 April - June Q2 Q3 Q4 July-September October December - January-March Due Date of TDS Return July 31 October 31 January 31 (Next Year) May 31 Consequences of non-filing of TDS return / non filing of return by due date will entail paying of late filing fee at the rate of Rs.200 per day for every continuous day of default (under Sec. 234 (E) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, July September 2024 காலாண்டிற்கான Quarterly Returns-ஐ 31.10.2024-க்குள் File செய்து அதன் அறிக்கையினை வரும் 01.11.2024-க்குள் இவ்வியக்ககத்திற்கு நேரில் சமர்ப்பிக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், TDS சார்பாக அனுப்பப்பட்ட Google Sheet-ல் நிரப்பப்படாமல் உள்ள மாவட்டங்கள் உடனே பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD DSE - TDS Filing Proceedings PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.