பெற்றோர்களே உஷார்!!! பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை ...!!! DSE - Money Forgery Awareness for Scholarship Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, October 15, 2024

பெற்றோர்களே உஷார்!!! பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை ...!!! DSE - Money Forgery Awareness for Scholarship Proceedings



பெற்றோர்களே உஷார்!!! பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை ...!!!

பெற்றோர்களின் whatsapp எண்ணில் தொடர்பு கொண்டு பணம் பறிக்கும் மோசடி செயலில் ஈடுபடுவோர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!

பள்ளிக் கல்வி - 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களின் வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொண்டு பணம் பறிக்கும் மோசடி செயலில் ஈடுபட்டது சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த கோருதல் - தொடர்பாக.

அரசு கடிதம் எண் 1765/SE 5 (1)/ 2024 -1 பள்ளிக் கல்வித் துறை, நாள் 20.09.2024. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மாணவ மாணவியர்களின் நலனுக்காக அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்விப் தொழிற்கல்விப் பாடப்பிரிவில் பயின்றுவரும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 நாட்கள் அகப்பயிற்சி (Internship) அளிக்கப்பட்டுவருவதாகவும், அகப்பயிற்சி முடித்த மாணவர்களுக்கு ரூ.1000/- ஊக்கத்தொகை மாணவ மாணவியரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும் விதம், மாணவ மாணவியர்களுக்கு அந்தந்த பள்ளியிலேயே ஆதார் வழங்கும் விதமாக ஆதார் பதிவு என்ற சிறந்த திட்டத்தின் மூலம் புதிய பதிவுகள் மற்றும் ஆதார் எண் புதுப்பித்தல் தொடர்பான பணிகளை தமிழ்நாடு மின்னனு நிறுவனம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் இதனை சாதகமாக பயன்படுத்தி சில மோசடி கும்பல்கள் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்களின் வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொண்டு பணம் பறிக்கும் செயலில் திருநெல்வேலி மாநகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் நடைபெற்று வருவதாகத் தெரியவந்ததாக பார்வையில் காணும் அரசுக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்படி மோசடியில் ஈடுபடுபவர்கள் கல்வித் துறையிலிருந்து ஊக்கத்தொகை பெற்றுத் தருவதாகக் கூறி, குறிப்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களை அணுகி அவர்களுக்கு ஆன்லைன் வாட்ஸ் ஆப் மூலம் QR Code அனுப்பி அதனை ஸ்கேன் செய்தால் உதவித்தொகை (Sholarship) கிடைக்கும் என போலியான செய்திகளை பரப்பி அவர்களை ஏமாற்றி அவர்கள் வங்கி கணக்கில் இருந்து ஆயிரக்கணக்கில் பணத்தை எடுத்துள்ளதாகத் தெரிவதாகவும் மேற்படி மோசடி கும்பலிடம் ஏமாந்தது குறித்து 2024 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 10 நபர்கள் மாநகர சைபர் கிரைம் பிரிவில் புகார் மனு அளித்துள்ளதாகவும் பலர் தாங்கள் ஏமாந்தது குறித்து புகார் அளிக்காமல் இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பார்வையில் காணும் அரசுக் கடிதத்தில் அறிவுறுத்தியவாறு மோசடி கும்பலிடம் பெற்றோர்கள் மேலும் பணத்தை இழப்பதைத் தடுக்கும் வகையில் பள்ளியில் பெற்றோர்களுக்கு நடத்தும் கூட்டத்தின்போது Sholarship ஊக்கத்தொகை) தொடர்பாக போனில் தொடர்பு கொண்டு அரசு தரப்பில் யாரும் பேசமாட்டார்கள் என்றும் போனில் தொடர்பு கொள்பவர்களிடம் வங்கி தொடர்பான தகவல்களை தெரிவிக்க வேண்டாம் என்றும் தெரிவிக்குமாறு அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரிகள் மூலம் அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தி விழிப்புணர்வு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இதில் தனிகவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD DSE - Money Forgery Awareness for Scholarship Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.