ஆசிரியர் பணி இடைநீக்கம்!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 9, 2024

ஆசிரியர் பணி இடைநீக்கம்!!



ஆசிரியர் பணி இடைநீக்கம்

மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள செறுகோல் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் நாகர்கோவிலைச் சேர்ந்த ஜார்ஜ் ஹென்றி என்பவர் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவதாகவும், மாணவர்களுக்கு முறையாக பாடம் எடுப்பதில்லை எனவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக பள்ளி மாணவர்கள் பெற்றோரிடம் புகார் தெரிவித்தனர். பெற்றோரும் அந்த பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து, வேறு ஆசிரியரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த நிலையில் காலாண்டு விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தமிழ் ஆசிரியர் ஜார்ஜ் ஹென்றியும் பள்ளிக்கு வந்தார். இதனை அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து தமிழ் ஆசிரியர் ஜார்ஜ் ஹென்றி பணி இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பாலதண்டாயுதபாணி நடவடிக்கை எடுத்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.