"மகிழ் முற்றம்" - அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர் குழுக்கள் அமைத்திட பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
"மகிழ் முற்றம்" - அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர் குழுக்கள் அமைத்திட பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
• மற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் குலுக்கல் முறையில் குழுவானது ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும்.
ஒவ்வொரு குழுவிற்கும் ஒன்றிற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இருப்பின், தலைமை தாங்கும் ஆசிரியர் (House Head Teacher) கை தூக்கும் முறை/ குலுக்கல் முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, பள்ளியளவில் "மகிழ் முற்றம்" ஆசிரியர் கட்டமைப்பு மாற்றி அமைக்கப்படுதல் வேண்டும். தலைமையாசிரியர் "மகிழ் முற்றம்" மாணவர் குழு அமைப்பினை திட்டமிட்டு வழி நடத்துதல் வேண்டும்.
5-ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொண்ட பள்ளிகள் குறைவான 5-ற்கும் ஆசிரியர்கள் கொண்ட பள்ளிகள் • ஒரு ஆசிரியர் "மகிழ் முற்றம்" மாணவர் குழு அமைப்பின் தலைமை பொறுப்பாளராக இருத்தல் வேண்டும். (House sytem In-charge Teacher).
• மற்ற ஆசிரியர்களுக்கான குழு. குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும். ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு பொறுப்பு ஆசிரியர் நியமிக்கப்படுதல் வேண்டும். (House Head Teacher)
• ஒரு ஆசிரியர் "மகிழ் முற்றம்" மாணவர் குழு அமைப்பின் தலைமை பொறுப்பாளராக (House sytem In-charge Teacher) இருத்தல் வேண்டும். மற்ற ஆசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்களுக்கு பொறுப்பு ஆசிரியராக குலுக்கல் முறையில் நியமிக்கப்படுதல் வேண்டும். (House Head Teacher)
தலைமையாசிரியர் மட்டும் உள்ள பள்ளிகளில் "மகிழ் முற்றம்" மாணவர் குழு அமைப்பின் அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்ளுதல் வேண்டும். மகிழ்முற்றம் - மாணவர் குழு அமைப்பின் பள்ளி அளவிலான மாணவர் தலைவர் (House Captain) ஒவ்வொரு பள்ளியிலும், அப்பள்ளியின் உயர்வகுப்பில் பயிலும் மாணவர்களுள், ஒவ்வொரு மாணவர் குழுவிற்கும் இரண்டு தலைவர்கள் (House Captain) நியமிக்கப்படுதல் வேண்டும்.
இம்மாணவர் தலைவர்கள் (House Captain) தேர்வானது குலுக்கல் முறையில் நடைபெறுதல் வேண்டும். முதலில் ஒவ்வொரு குழுவிற்கும் தலைவராக இருக்க விருப்பம் தெரிவிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகளின் பெயர்களை துண்டுச் சீட்டுகளாக எழுதி அம்மாணவர்களின் முன்னிலையில் குலுக்கல் முறையில் ஒரு மாணவ குழுத் தலைவரையும், ஒரு மாணவி குழுத் தலைவரையும் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.
இருபாலரும் பயிலும் பள்ளிகளில் ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவி ஆகிய இருவரும் குழுத்தலைவர்களாக இருப்பர்.
ஒரு பாலருக்கான பள்ளிகளில், ஒவ்வொரு குழுவிற்குமான இரண்டு தலைவர்களும், அப்பள்ளியில் பயிலும் பாலினத்தை பொறுத்து அமையப்பெறும்.
இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும். பள்ளியளவில் மாணவர் தலைவர்கள் நியமிக்கப்படுதல் வேண்டும்.
மகிழ் முற்றம் - மாணவர் குழு அமைப்பின் வகுப்பு தலைவர் : (House Leader) ஒவ்வொரு வகுப்பிலும் மற்றும் வகுப்பிற்கான பிரிவிலும், பிரிவிலும், ஒவ்வொரு குழுவிற்கான வகுப்பு தலைவர் (House Class Leader) நியமிக்கப்படுதல் வேண்டும். இத்தேர்வானது. குழுவின் வகுப்பு தலைவராக இருக்க விருப்பம் தெரிவிக்கும் மாணவ/மாணவியர்களின் பெயர்களை துண்டுச் சீட்டுகளாக எழுதி அம்மாணவர்களின் முன்னிலையில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும்.(குறிப்பு: ஒவ்வொரு வகுப்பிலும், மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில், குறைந்தது மூன்று குழுக்களுக்கான வகுப்பு தலைவர்கள் மாணவிகளாக இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்). ஒவ்வொரு மாதமும் குழுக்களுக்கான வகுப்பு தலைவர்கள் மாற்றி அமைக்கப்படுதல் வேண்டும். மகிழ் முற்றம் -பதவி ஏற்பு விழா ஒவ்வொரு குழுவிற்குமான மாணவர் தலைவர்கள் (House Captain) வகுப்பு தலைவர்கள் (Class Leaders) மற்றும் தலைமை பொறுப்பு ஆசிரியர் (House System In-Charge Teacher), குழுவிற்கான பொறுப்பு ஆசிரியர்கள் (House Head Teacher) ஆகியோருக்கான பதிவி ஏற்பு விழாவானது அனைத்துப் பள்ளிகளிலும் குழந்தைகள் தினமான நவம்பர 14-ஆம் தேதியன்று திட்டமிட்டு நடைபெறுவதை சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் உறுதி செய்தல் வேண்டும்.
அவ்வாறு நடைபெறும் நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் 5 நிமிடத்திற்கு தொகுக்கப்பட்ட காணொலியின் URL Link-யினை 19-11-2024-ற்குள் EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுதல் வேண்டும்.
பள்ளி அளவிலான "மகிழ் முற்றம்" மாணவர் குழு அமைப்பிற்கான செயல்பாடுகள் EMIS தளத்தின் வாயிலாக ஒவ்வொரு மாணவருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள குழுவினைப் பற்றி சார்ந்த மாணவருக்கு தெரியப்படுத்துதல் வேண்டும். பள்ளி அளவில் நடைபெறும் செயல்பாடுகளான கல்விசார் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகள், கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் மாணவர் வருகை போன்றவற்றின் அடிப்படையிலேயே ஒவ்வொரு குழுவிற்குமான மதிப்பெண்கள் வழங்கப்படும் என்பதைப் பற்றிய விளக்கத்தினை மாணவர்களுக்கு எடுத்துரைத்தல் வேண்டும்.
"மகிழ்முற்றம்" என்ற மாணவர் குழு அமைப்பு பள்ளி அளவில் நடைமுறைபடுத்தப்படுவதன் அடையாளமாக ஒவ்வொரு குழுவினை குறிக்கும் வண்ணத்திலான கொடி (House Flag) பள்ளி அளவில் இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
பள்ளி அளவில் நடைபெறும் பல்வேறு செயல்பாடுகளில், மாணவர்களின் பங்கேற்பினை EMIS தளத்தில் உள்ளீடு செய்வதன் அடிப்படையில் புள்ளிகள் கணக்கிடப்படும். அவ்வாறு மேற்கொள்ளப்படும். கணக்கீட்டின் அடிப்படையில், ஒவ்வொரு மாத இறுதியிலும், அதிக புள்ளிகளைப் பெறும் குழுவானது அம்மாதத்தின் வெற்றி குழுவாக (House of the Month) அறிவிக்கப்பட்டு. அக்குழுவிற்கான வண்ணக் கொடி பள்ளியில் அனைவரின் பார்வைக்கு எதிர்வரும் மாதம் முழுவதும் காட்சிபடுத்தப்படுதல் வேண்டும். மகிழ் முற்றம் -மாணவர் குழு தகவல் பலகை (House System Notice Board) மாணவர் குழு தகவல் பலகை, பள்ளியில் அனைவரின் பார்வைக்கு உட்பட்ட இடத்தில் பொறுத்தப்படுதல் வேண்டும். இத்தகவல் பலகையானது தலைமையாசிரியர் அறையிலோ அல்லது வகுப்பறைகளிலோ இருத்தல் கூடாது. ஒவ்வொரு மாத இறுதியிலும், EMIS தளத்தில் அனைத்து செயல்பாடுகளின் பதிவேற்றத்தின் அடிப்படையில் ஒவ்வொரு குழுவிற்கும் வழங்கப்படும் புள்ளிகளை, இத்தகவல் பலகையில் குறிக்கப்படுவதை உறுதி செய்தல் வேண்டும்.
மேலும், ஒவ்வொரு வகுப்பறையிலும், அந்தந்த வகுப்பிற்கான மாணவர் குழுக்கள் பெற்ற புள்ளிகளை கரும்பலகையிலோ அல்லது ஒரு CHART-ல் காட்சிபடுத்துதல் வேண்டும்.
குறிப்பு: EMIS தளத்தின் வழியாக எடுத்துக் கொள்ளப்பட்ட செயல்பாடுகளுக்கான புள்ளிகளுடன், ஒவ்வொரு பள்ளியிலும், தலைமையாசிரியர் மற்றும் House Head Teacher சேர்ந்து தீர்மானிக்கும் செயல்பாடுகளுக்கும் புள்ளிகள் வழங்கப்படலாம்.
(எ.கா.EMIS தளத்தில் பதிவுகள் மேற்கொள்ளப்படாத தரவுகளான நேரம் தவறாமை (Punctuality). காலை வழிபாட்டு கூட்டத்தில் பங்கேற்றல் (Participation in Morning Assembly), வீட்டு பாடம் முடித்தல் (Homework Completion), தன் சுத்தம் (Personal Hygiene) போன்ற செயல்பாடுகளுக்கு அந்தந்த பள்ளியின் விருப்பத்தின் பேரில் செயல்பாடுகளுக்கான புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டு. ஒவ்வொரு வகுப்பறையிலும் பள்ளிக்கான மாணவர் குழு தகவல் பலகையிலும் கூடுதலாக இடம் பெறச் செய்யலாம். மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு மாவட்ட ஆட்சியரின் தலைமையில் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், உதவித் திட்ட அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர்கள் இருவர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் இருவர். ஆசிரியர்கள் இருவர் ஆகியோர் அடங்கிய மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழுவினை ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்குதல் வேண்டும்.
மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழுவானது, ஒவ்வொரு காலாண்டின் 'மகிழ் முற்றம்' மாணவர் குழு அமைப்பின் செயல்பாடுகள் குறித்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துக்களைப் பெற்று, கலந்தாலோசித்து, இச்செயல்பாடுகளை சிறப்பாக மேற்கொள்ள உரிய வழிகாட்டுதல்களை வழங்குதல் வேண்டும்.
இறுதியில் கூடி, அந்தந்த மாவட்டத்தில் இச்செயல்முறைகளை அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிட தக்க நடவடிக்கை எடுக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள்(தொடக்கக் கல்வி) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இச்செயல்முறைகளைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதலை உடன் அனுப்பிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
DSE - Maghizh Mutram- Proceedings CLICK HERE TO DOWNLOAD PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.