ஆசிரியர்களுக்கு மாநில நிதியிலிருந்து சம்பளம் வழங்க முன்னாள் முதல்வர் கோரிக்கை!
‘மத்திய அரசு நிதி வழங்க வில்லை என காரணம் கூறி, தமிழக அரசு, ஆசிரியர்களுக்கு கடந்த மாத ஊதியம் வழங்காமல் இருப்பது கண் டனத்திற்குரியது' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் இ.பி.எஸ்., தெரி வித்துள்ளார். அவர் அறிக்கை:
ஒருங்கிணைந்த கல்வி திட்டத் திற்கான மத்திய அரசின் நிதி, பள்ளி கல்வித்துறைக்கு வரவில்லை என்ற காரணம் கூறி, நிரந்தர ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் என 32,500 பேருக்கு, கடந்த மாதத்திற் கான ஊதியத்தை, தமிழக அரசு வழங்கவில்லை என, செய்திகள் வெளியாகி உள்ளன. தனியார் நிறுவனம் நடத்திய கார் பந்தயத்திற்கு, கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்த தமிழக முதல்வர், மத்திய அரசிடமிருந்து நிதி வராததை காரணம் கூறி, ஆசி ரியர்களுக்கு ஊதியம் வழங்காதது, கடும் கண்டனத்திற்குரியது.
மாநில அரசின் நிதியிலிருந்து, ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் உட்பட, 32,500 பேருக்கு, கடந்த மாதத்திற்கான ஊதியத்தை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.