புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் கற்போருக்கான தேர்வு தேதி மற்றும் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு. . - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, October 29, 2024

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் கற்போருக்கான தேர்வு தேதி மற்றும் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு. .



புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் கற்போருக்கான தேர்வு தேதி மற்றும் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு. .

CLICK HERE TO DOWNLOAD Dir instructions & Proceedings PDF

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் கற்போருக்கான தேர்வு 10.11.24 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுகிறது.

பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் முன்னிலை:முனைவர.சு.நாகராஜ முருகன் நக.எண்:065/ஆ2/2024

நாள் 410.2024

பொருள்: பள்ளிக் கல்வி பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் புதிய. பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-27 நடப்பு 2024-25ஆம் ஆண்டு செயல்பாடுகள் திட்ட முதற்கட்ட கற்போருக்கு 10.11.24 அன்று இறுதி அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - சார்பு.

பார்வை: 1, 2024-25ஆம் ஆண்டிற்கான புதிய பராத எழுத்தறிவுத் திட்டஏற்பளிப்புக் குழு கூட்ட (PAB) நாள் 22.03.24

2, அரசாணை நிலை எண்.159, பள்ளிக் கல்விது(எம்எஸ்) துறை, நாள்:09.07.24 3. இவ்வியக்கக செயல்முறைகள் ந.க.எண்.065/ஆ2/2024, நாள்:09.07.24

தமிழ்நாட்டில், 15வயதுக்கு மேற்பட்ட எழுதப்படிக்கத் தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிடும் வகையில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் கடந்த 2022-23 ஆம் ஆண்டு முதல் அனைத்து 38 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ், 2022-23ஆம் ஆண்டு முதல் 2024-25ஆம் ஆண்டு வரை 16 இலட்சம் பேர் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கஅம்சமாகும். பார்வை-3இல் காணும் செயல்முறைகளின்படி, 2024-25ஆம் ஆண்டில் அனைத்து எழுதப்படிக்கத் தெரியாதோர் அனைவரையும் 100% கண்டறிந்து, அவர்கள்அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவுக் கல்வி கற்கும் வாய்ப்பை வழங்கிடும் வகையில் திட்டச் செயல்பாடுகளை இரண்டு கட்டங்களாகப் பிரித்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதன் அடிப்படையில், திட்ட முதற்கட்டத்தில் விரிவானகணக்கெடுப்பின்படி கண்டறியப்பட்டுள்ள 6.14இலட்சம் நபர்களுள், 5.09இலட்சம் நபர்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள 30.113 கற்போர் எழுத்தறிவு மையங்களில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு 30,113 தன்னார்வலர்களின் உதவியுடன் 200 மணி நேரக் கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் 2024-ஜீலை மாதம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திட்ட இரண்டாம் கட்டம் 2024-நவம்பர் மாதம் முதல் 2025-மார்ச் மாதம் வரை செயல்படுத்தப்படும்.

தற்போது, திட்ட முதற்கட்டத்தின்கீழ். விரிவானகணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்பட்டு, அனைத்து 38 மாவட்டங்களிலும் இணைப்பில் கண்டுள்ளபடி எழுத்தறிவு மையங்களில் சேர்க்கப்பட்டுள்ள 5,09,459 கற்போருக்கு வருகின்ற 10.11.24 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்துவது சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குப் பின்வருமாறு வழங்கப்படுகிறது. 1. தேர்வு விவரம்:

தேர்வு நடைபெறும் நாள் 2024 நவம்பர் மாதம் 10 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்வு நடைபெறும் நேரம்

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெறும் மையம் மையம் செயல்படும்

தேர்வர்களை பதிவு செய்வதற்கான இறுதி நாள் கற்போர் எழுத்தறிவு பள்ளி வளாகம் தேர்வு நடைபெறும் நாள் வரை

2. தேர்வு நடத்துவது சார்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்

> தமிழ்நாட்டில் அனைத்து (38) மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகின்ற புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் முதல்கட்டத்தின் கீழ் கடந்த ஜூலை 2024 முதல் பயின்று வரும் அனைத்துக் கற்போருக்கும் இறுதி அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு வருகின்ற 10.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடத்தப்பட வேண்டும்.

> தேர்வின் மந்தணத் தன்மை குறையாமலும், எவ்வித புகர்களுக்கும் இடமளிக்காத வகையில் இத்தேர்வை நடத்தவேண்டிய பொறுப்பு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரையே சாரும்.

பணிபுரியும் கற்போருக்கு வசதியாக மையம் சார்ந்த பள்ளி வளாகத்திலோ அல்லது அவர்கள் இடத்திலோ அல்லது கற்போர் மாற்றுத்திறனாளியாகவோ அல்லது மூத்த கற்போராகவோ இருப்பின் அவர்களுடைய இல்லங்களிலோ இந்த அடிப்படை தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும்.

* அனைத்து கற்போரும் 100% தேர்வில் கலந்து கொள்ளும் வகையில் உரிய நடவடிக்கைகளை எழுத்தறிவு மையம் சார்ந்த ஆசிரியர் பயிற்றுநர், தலைமையாசிரியர், பள்ளி உதவி ஆசிரியர் மற்றும் தன்னார்வலரால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

10.11.2024 அன்று தேர்வு நடைபெறும் மையங்கள், கற்போர் எண்ணிக்கை, தன்னார்வலர்கள் உள்ளிட்ட விவரங்களை அனைத்து மாவட்ட மற்றும் ஒன்றியங்கள் அளவில் தேர்வு நடைபெறும் நாளுக்கு முன்னர் (10.11.2024) அனைத்து மாவட்டங்கள், ஒன்றியங்கள் மற்றும் மையங்கள் அளவில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

> தேர்வு எழுதுவதற்கான இருக்கை வசதிகள், குடிநீர் வசதி, கழிவறை வசதி, மின்சார வசதி, போதிய வெளிச்சம் மற்றும் கற்றோட்ட வசதி, வயதில் மூத்த மற்றும் மாற்றுத்திறனாளிக் கற்போருக்கு வசதியாக சாய்தள நடைபாதை போன்ற வசதிகள் இருப்பதை அந்தந்த எழுத்தறிவு மையம் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

3. வினா விடைத்தாள், இதர படிவங்கள் மற்றும் பேனா ஆகியனவற்றை அந்தந்த ஒன்றியங்கள் வாயிலாக எழுத்தறிவு மையங்களுக்கு வழங்குதல் :-

- வினா-விடைப் புத்தகத்தில் வினாக்களுக்குரிய மதிப்பெண்கள் வழங்கப்படும் முறையானது " மதிப்பெண் X வினா = மதிப்பெண் " என்கிற அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன. - ஒவ்வொரு மையத்தின் கற்போர் எண்ணிக்கைக்கேற்ப சீலிடப்பட்ட கவரில் வினா-விடைத்தாள் கட்டுகள் 07.11.2024-க்குள் சார்ந்த வட்டார வள மையங்களுக்கு அந்தந்த மாவட்டத் திட்ட அலுவலகத்தால் வழங்கப்பட வேண்டும்

> அந்தந்த மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலர் தேர்வுக் கட்டுக்காப்பு அலுவலர் ஆவார். எனவே, தேர்வின் மந்தணத் தன்மை குறையாமல் மிகுந்த கவனத்துடன் தேர்வை நடத்த வேண்டும். சீலிடப்பட்ட வினா-விடைத்தாள் அடங்கிய உறையின் மேல் எழுதப்பட்டிருக்கும் எழுத்தறிவு மையத்தின் பெயர், அம்மையத்தில் பயிலும் கற்போரின் எண்ணிக்கைக்கேற்ப வினா விடைத்தாள்களின் எண்ணிக்கை, வருகைப் பதிவு படிவம், மதிப்பெண் படிவம், பேனா ஆகியனவற்றை அந்தந்த ஒன்றியத்திற்குட்பட்ட மையங்களின் விவரங்களின் அடிப்படையில் சரிபார்த்து சார்ந்த வட்டார வளமைய மேற்பார்வையாளர்(பொ) மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களால் 07.11.2024- க்குள் பெற்றுக் கொள்ள வேண்டும்.

- வட்டார வளமைய மேற்பார்வையாளர்(பொ) ஒன்றியத்திற்குட்பட்ட கற்போர் எழுத்தறிவு மையங்களுக்குத் தேவையான வினா - விடைத்தாள் கட்டுகள், படிவங்கள், பேனா ஆகியனவற்றை 08.11.2024 அன்று மாலை எழுத்தறிவு மையம் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைத்து தேர்வு தொடங்கும் வரை மந்தணத் தன்மையோடு பாதுகாப்பாக வைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வரை வினா-

> தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடத்திற்கு முன்னர் விடைத்தாள் கட்டுக்களை எக்காரணம் கொண்டும் பிரிக்கக்கூடாது. 4. தேர்வு அறை செயல்பாடுகள் வினா-விடைத்தாள், கற்போர் வருகைப் பதிவுப் படிவம், மதிப்பெண் படிவம் மற்றும் பேனா ஆகியன தேவையான எண்ணிக்கையில் பெறப்பட்டுள்ளதை தேர்வு நடைபெறும் நாளுக்கு முதல் நாளே (09.11.2024) எழுத்தறிவு மையம் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியரால் உறுதி செய்யப்பட வேண்டும். * தேர்வு முதன்மைக் கண்காணிப்பாளராக பள்ளியின் தலைமையாசிரியரும், அறை கண்காணிப்பாளராக தன்னார்வலரும் செயல்பட வேண்டும்.

> கற்போர் விருப்பத்திற்கேற்பவும், வசதிக்கேற்பவும் தேர்வு நடைபெறும் நாளன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு எழுதலாம். ஒரு கற்போருக்கான மொத்த தேர்வு நேரம் - 3 மணி நேரம் ஆகும். >தேர்வு நடைபெறும் நாளில் கற்போரின் வருகையை, வருகைப் பதிவுப் படிவத்தில் தன்னார்வலர்கள் பதிவு செய்ய வேண்டும். 5. வினா - விடைத்தாள் ஒப்படைத்தல்

10.11.2024 அன்று மாலை 5 மணிக்கு தேர்வு முடிந்ததும் தேர்வு எழுதிய வினா விடைத்தாள்களை பதிவெண் வாரியாக அடுக்கி பாதுகாப்பாகக் கட்டி உறையில் வைத்து அந்த உறையின் மேல் எழுத்தறிவு மையத்தின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய முகப்புத் தாளை ஒட்டி தலைமையாசிரியர் மற்றும் தன்னார்வலர் கையொப்பத்துடன் மற்றும் பயன்படுத்தாத வினா-விடைத்தாள்களையும் 10.11.2024 அன்றே வட்டார வளமைய அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். >வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் இவ்விடைத்தாள்களை மதிப்பீட்டுப் பணி முடியும் வரை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

6. தேர்வு கண்காணிப்பு

அ. ஒன்றிய அளவில் தேர்வு மேற்பார்வை :

> தேர்வு நடைபெறும் அனைத்து எழுத்தறிவு மையங்களையும் பார்வையிடும் வகையில் ஒன்றிய அளவில் வட்டாரக் கல்வி அலுவலர் வட்டார வளமைய மேற்பார்வையாளர், ஆசிரிய பயிற்றுநர்கள் ஆகியோரை கண்காணிப்பு அலுவலர்களாக முதன்மைக் கல்வி அலுவலர் நியமிக்க வேண்டும்

> தேர்வு நாளன்று ஒவ்வொரு கண்காணிப்பு அலுவலரும் குறைந்த பட்சம் 10 தேர்வு மையங்களையாவது பார்வையிட்டு முதன்மைக் கல்வி அலுவலரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆ. மாவட்ட அளவில் தேர்வு மேற்பார்வை:

> தங்கள் மாவட்டத்தில் நடைபெறும் அடிப்படை எழுத்தறிவுத் தேர்வினை முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் ஆகியோர் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட உதவி திட்ட அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோரும் தேர்வு

மையங்களைப் பார்வையிட வேண்டும்.

இ. மாநில அளவில் தேர்வு மேற்பார்வை:

> தேர்வு நடைபெறும் எழுத்தறிவு மையங்களைப் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இயக்குநர், இணை இயக்குநர், தொழில்நுட்ப அலுவலர், களப்பணி அலுவலர் மற்றும் SCL ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் பார்வையிடுவர். குறிப்பு :

> தேர்வு நடைபெறும் நாளன்று ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை எத்தனை கற்போர் இத்தேர்வில் பங்கு கொண்டனர் என்ற எண்ணிக்கை விவரத்தினை அந்தந்த வட்டார வளமைய மேற்பார்வையாளர்களிடமிருந்து சார்ந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பெற்று அவ்விவரங்களைக் குறுஞ்செய்தி மூலம் இவ்வியக்கத்திற்குத் தெரிவிக்க வேண்டும்.

7. அனைத்து வட்டார வளமைய அளவில் விடைத்தாள் திருத்தும் பணி மற்றும் மதிப்பெண் விவரங்களைக் கணினியில் உள்ளீடு செய்தல் செயல்பாடுகள்:

> விடைத்தாள்களின் எண்ணிக்கைக்கேற்ப வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) / ஆசிரியர் பயிற்றுநர்கள் / தன்னார்வலர்கள், தேவையிருப்பின் மட்டும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி உதவி ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிக்கு நியமனம் செய்துகொள்ள வேண்டும்.

விடைத்தாள் என்ற வீதத்தில், ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 30 வினா 12.11.2024 ஆம் தேதி முதல் 16.11.2024 வரையிலான 5 நாட்களுக்குள் விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட வேண்டும்.

இப்பணியின் மந்தணத்தன்மை குறையாமல் வட்டாரக் கல்வி அலுவலர் தலைமையில் வட்டார வளமைய மேற்பார்வையாளர்(பொ) கண்காணிப்பில் நடைபெற வேண்டும்.

விடைத்தாள் திருத்தும் பணி முடிவுற்ற பின்னர் வட்டார வளமைய அளவில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு, இவ்வியக்கத்தால் வழங்கப்பட்டுள்ள கற்போர் மதிப்பெண் (Excel) படிவத்தின்படி கற்போரின் மதிப்பெண் விவரங்கள் 21.11.2024 -க்குள் பதிவேற்றம் செய்து முடிக்கப்பட வேண்டும். 8. மாவட்ட அளவில் மதிப்பெண் விவரங்களை வட்டார வளமையங்கள் வாரியாகத் தொகுத்தல் (BRC)

> வட்டார அளவில் தயார் செய்யப்பட்ட கற்போர் மதிப்பெண் பட்டியல் (Excel) 25.11.2024 ஆம் தேதிக்குள் மாவட்ட அலுவலகத்திற்கு மின்னஞ்சல் வாயிலாக சார்ந்த வட்டார வளமைய (பொ) மேற்பார்வையாளரால் அனுப்பப்பட வேண்டும்.

> அனைத்து வட்டார வளமையங்களிலிருந்தும் பெறப்பட்டு. மாவட்ட அளவில் தொகுக்கப்பட்ட மதிப்பெண் பட்டியல் விவரங்கள் அனைத்தும் Excel படிவத்தில் இவ்வியக்கக மின்னஞ்சல் முகவரிக்கு (dnfae.tm16@gmail.com) 05.12.2024 க்குள் அனுப்ப வேண்டும். 9. தேர்வு மைய கண்காணிப்பு, விடைத்தாள் மற்றும் கணினியில் உள்ளீடு செய்வதற்கான மதிப்பூதியம்

10.11.2024 அன்று நடைபெறவுள்ள தேர்வு கண்காணிப்புப் பணிக்காக, மையம் ஒன்றுக்கு ரூ.200 வீதம் எனக் கொண்டு, சார்ந்த பள்ளித் தலைமையாசிரியருக்கு ரூ.100/-ம், மையத் தன்னார்வலருக்கு ரூ100/-ம் மதிப்பூதியமாக வழங்கப்படவேண்டும்.

விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஒரு விடைத்தாளுக்கு ரூ 1/- வீதம் எனக் கொண்டும் மற்றும் மதிப்பெண் விவரங்களை கணினியில் உள்ளீடு செய்திடும் ஆசிரியர் பயிற்றுநருக்கு/உதவி ஆசிரியருக்கு ஒரு 25 கற்போருக்கு ரூ.1/- வீதம் எனக் கொண்டு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்த பின்னர் வழங்கப்படவேண்டும். > மதிப்பூதியங்கள் அனைத்தும் ECS வாயிலாக மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

இச்செலவினங்களை இத்தேர்வு சார்ந்து வழங்கப்பட்டுள்ள இவ்வியக்கக செயல்முறைக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தலைப்புகள் ஒதுக்கீடுகள் மற்றும் வழிமுறைகளின் படி மேற்கொள்ளவேண்டும்.

10. கற்போருக்கு சான்றிதழ் வழங்குதல் நிதி கற்போருக்கு அடிப்படை எழுத்தறிவுச் சான்றிதழ் இவ்வியக்ககத்தின் வாயிலாக வழங்கப்படும். எனவே, மேலே குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாது பின்பற்றி திட்ட முதற்கட்ட அடிப்படை எழுத்தறிவுத் தேர்வை செம்மையான முறையில் எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் நடத்திட அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு: மாவட்ட வாரியான கற்போர் எண்ணிக்கை $5.5. Tom's! 120/ NILP/03.0.2/mam: 28.10.2024 இயக்குநர

தகவலூர்காகவும், தக்க நடவடிக்கைக் காகவும் அனுப்பலர்கிற மேற்கான் புமுறைகளை பின்பற்றி எழுத்தழிவுத்தேர்வு நடத்த பௌளர்: நடடிக்கை மேற்கொள்ள அறிவுபூந்தப் படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD Dir instructions & Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.