பள்ளிகளை முறையாக ஆய்வு செய்யாத 145 கல்வி அலுவலர்களுக்கு நோட்டீஸ் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, October 17, 2024

பள்ளிகளை முறையாக ஆய்வு செய்யாத 145 கல்வி அலுவலர்களுக்கு நோட்டீஸ்



பள்ளிகளை முறையாக ஆய்வு செய்யாத 145 கல்வி அலுவலர்களுக்கு நோட்டீஸ்

பள்ளிகளை முறையாக ஆய்வு செய்யாத வட்டார கல்வி அலுவலர்கள் 145 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து தொடக்க கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழக பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான ஆய்வை மேற்கொள்ளவும், பள்ளிகளை பார்வையிட்டு மாணவர்களின் கல்வி திறன்களை மேம்படுத்தவும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. குறைந்தபட்சம் 12 பள்ளிகளை பார்வையிடவும், 2 பள்ளிகளில் ஆய்வு செய்யவும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. கடந்த செப்டம்பரில் அவர்கள்ஆய்வு செய்த விவரங்களை ‘எமிஸ்’தளம் வாயிலாக பதிவு செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டது. அந்த விவரங்களை கண்காணித்ததில், வட்டார கல்வி அலுவலர்கள் பலரும்12-க்கும் குறைவான பள்ளிகளை மட்டுமே ஆய்வு செய்தது தெரியவந்துள்ளது.

பள்ளிகளை சரிவர பார்வையிடாவிட்டால், மாணவர்களின் கற்றல் அடைவு திறன் குறையும். எனவே, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த, பள்ளிகளை ஆய்வு செய்வது மிகவும் அவசியம். அந்த வகையில் 12-க்கும் குறைவான பள்ளிகளை ஆய்வு செய்த வட்டார கல்வி அலுவலர்கள் 145பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்அனுப்பப்பட்டுள்ளது. இவர்களில்ஓய்வு அல்லது மாறுதல் பெற்றவர்கள் தவிர, மற்ற அனைவரும் கட்டாயம் விளக்கம் அளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.