குறைந்த தேர்ச்சி சதவீதம் கொண்ட அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் - CEO Proceedings பள்ளிக் கல்வித் துறை சார்ந்த பகுப்பாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள் , குறைந்த தேர்ச்சி சதவீதம் கொண்ட அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் - 21.10.2024 அன்று பிற்பகல் 03.30 மணியளவில் நடைபெறுதல் தொடர்பாக CEO Proceedings
தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டட கூட்டரங்கில் 2110.2024 (திங்கள் கிழமை) அன்று பிற்பகல் 03.30 மணியளவில் காலாண்டு தேர்ச்சி பகுப்பாய்வு கூட்டம் நடைபெறவுள்ளதால், பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள், காலாண்டு தேர்வில் குறைந்த தேர்ச்சி சதவீதம் கொண்ட அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்கள் இணைப்பில் காண் கூட்டப்பொருள் சார்ந்த விவரங்களுடன் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள், காலாண்டு தேர்வில் குறைந்த தேர்ச்சி சதவீதம் கொண்ட அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்கள் கூட்டப்பொருள் சார்ந்த விவரங்களுடன் குறித்த நேரத்தில் கூட்டத்திற்கு வருகை தர வேண்டுமென இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பு-வருகைப்பதிவேடு பதிவு செய்யும் நேரம்: பிற்பகல் 03.30 மணி.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.