பத்திரிகை மற்றும் ஊடக செய்தி
~~
மாணவர்கள் நலன் கருதி காலாண்டு விடுமுறையை நீடிக்க வேண்டும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் கோரிக்கை
~
இந்த கல்வி ஆண்டிற்கான காலாண்டுத் தேர்வு 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இம்மாதம் செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெறுகிறது தேர்வு முடிந்து செப்டம்பர் 28ம் தேதியில் இருந்து அக்டோபர் 2ம் தேதி வரை என ஐந்து நாட்கள் மட்டுமே காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே காலாண்டுத் தேர்வு என்றாலும் அரையாண்டு தேர்வு என்றாலும் குறைந்த பட்சம் 7 நாட்கள. முதல் 10 நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமான ஒன்று இந்த விடுமுறை எதற்காக விடப்படுகிறது என்றால் தொடர்ச்சியாக மாணவர்கள் பள்ளிக்கு வருவதால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட கூடாது என்பதற்காகவும் விழித்திருக்கின்ற நேரம் முழுவதும் பள்ளியிலேயே மாணவர்கள் இருக்கின்ற சூழ்நிலை ஆதலால் மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது பெற்றோருடன் ஒவ்வொரு மாணவரும் முழு நேரமும் இருந்தால் மன அழுத்தம் ஏற்படாது என கருதி தான் மாணவர்களுக்கு காலாண்டு அரையாண்டு முழு ஆண்டு விடுமுறை விடப்பட்டு வருகிறது அதேபோன்று ஆசிரியர்களுக்கும் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி உட்பட மாணவர்களுக்கு தேவையான கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளவே இந்த விடுமுறை என்பதை அனைவரும் அறிவார்கள் இந்த ஆண்டு காலாண்டு விடுமுறை வரும் 28ம் தேதி சனிக்கிழமை தொடங்கி அக்டோபர் 2ம் தேதி புதன்கிழமை வரை என அறிவிக்கப்பட்டுள்ளது அதாவது விடுமுறை முடிந்து 3ம் தேதி வியாழக்கிழமை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது அதாவது 3ம் தேதி வியாழன் மற்றும் 4ம் தேதி வெள்ளிக்கிழமை பள்ளி வேலை நாட்கள் இதனை தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் அக்டோபர் 3ம் மற்றும் 4ம் ஆகிய இரண்டு நாட்களுக்கும் விடுமுறை அளித்து மாணவர்களின் நலன் கருதி அக்டோபர் 7ம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் திறக்க மாணவர்கள் ஆசிரியர்கள் நலன் காக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
நன்றி ! நன்றி !! நன்றி !!!
~~~~
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று காலாண்டு விடுமுறையை நீட்டிப்பு செய்த மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் சா.அருணன் நன்றி
~~~
காலாண்டு தேர்வு செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற்று வருகிறது.வருகிற 28ம் தேதி தொடங்கி அக்டோபர் 2ம் தேதி வரை 5 நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது இந்த ஐந்து நாட்கள் விடுமுறையில் விடைத்தாள் திருத்தும் பணி மற்றும் மாணவர்களின் கட்டமைப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ள முடியாது எனவும் மாணவர்களுக்கும் மன அழுத்தம் ஏற்படும் எனவும் மாணவர்கள் நலன் ஆசிரியர்களின் அக்கறை கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் கோரிக்கையைப் பரிசீலித்து 5 நாள் விடுமுறை நீட்டித்து வரும் அக்டோபர் 6ம் தேதி வரை விடுமுறை அளித்து காலாண்டு விடுமுறையை 9 நாட்களாக நீட்டிப்பு செய்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் பள்ளிக்கல்வித்துறையில் பல மாற்றங்களை மாணவர்கள் ஆசிரியர்கள் நலன் கருதி செய்துவரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யமொழி அவர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதிப்புபிகு எஸ்.மதுமதி ஐ.ஏ.எஸ் அவர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மதிப்புமிகு முனைவர் ச.கண்ணப்பன் அவர்களுக்கும் மற்றும் தொடக்கக்கல்வி துறை இயக்குநர் மதிப்புமிகு முனைவர் பூ.ஆ.நரேஷ் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
Thursday, September 26, 2024
New
காலாண்டு விடுமுறையை நீட்டிப்பு செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு ஆசிரியர்கள் நன்றி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.