ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் பணிபுரியும் கணக்காளர்களுக்கு பணி நிரவல் ஆணையை திரும்ப பெற்று விருப்ப மாறுதல் கலந்தாய்வு நடத்திட கோரிக்கை
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் கணக்காளர்கள் மிக குறைந்த தொகுப்பூயதியத்தில் பணி புரிந்து வருகிறோம். 50 பள்ளிகளுக்கு ஒரு பள்ளி மேலாண்மை குழு கணக்காளர் என பணிமர்த்தபட்டார்கள் தற்போது பணி நிரவல் வாயிலாக 50 முதல் 75 பள்ளிகள் ஒரு கணக்காளருக்கு என்று கூறிவிட்டு சில மாவட்டங்களில் 30 பள்ளிக்கு ஒரு கணக்காளர் என்றும் சில மாவட்டங்களில் 73 பள்ளிகளுக்கு ஒரு கணக்காளர் என்றும் பாரபட்சத்துடன் பணி நிரவல் நடத்துவதற்கான கடிதம் மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. இதனால் கணக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பள்ளிகளில் எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்டங்களுக்கு இடையே வேறுபாடுகள் உள்ளது. தொகுப்பூதியத்தில் சீனியர் (19,450) ஜூனியர் (16,810) என்று ஊதிய வேறுபாடுகள் இருக்கும் நிலையில் பணி நிரவல் காரணமாக குறைந்த ஊதியம் பெறும் ஜூனியர் கணக்காளர்கள் தற்போது ஒரு நாளைக்கு 120 கிலோமீட்டர் மேல் பயணம் மேற்கொண்டு பணி செய்து வரும் சூழ்நிலையில் தற்போது பணி நிரவல் காரணமாக பயண தூரம் இரட்டிப்பாக மாறுகின்றது.
ஒரே ஊதியம் பெறும் கணக்காளர்கள் பள்ளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வேறுபாடுகளுடன் கொடுத்திருப்பது அனைத்து மாவட்ட கணக்காளர்களுக்கும் பாதிக்கப்பட்டு உள்ளோம் குறிப்பாக பணியில் இளையோர் பணி நிரவல் கணக்காளர்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்துகின்றது.
இத்தகைய பணி நிரவல் ஆணையை திரும்ப பெற பணிந்து கணக்காளர்கள் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. கணக்காளர்களுக்கு 50 பள்ளிகளுக்கு ஒரு கணக்காளர்கள் என்ற விதத்தில் கணக்காளர்களிடம் விருப்பமாறுதல் விண்ணப்பம் பெற்று விருப்ப மாறுதல் கலந்தாய்வு நடத்த ஆவணம் செய்ய பணிவுடன் வேண்டுகிறோம்.
👇👇👇👇 SS SPD office - Accountant letter CLICK HERE TO DOWNLOAD PDF
தங்கள் உண்மையுள்ள
ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் - 34/200
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.