புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு சத்துணவுத் திட்ட செயலாாக்கத்திற்கென புதியதாக பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை வெளியீடு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, September 5, 2024

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு சத்துணவுத் திட்ட செயலாாக்கத்திற்கென புதியதாக பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை வெளியீடு.



புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு சத்துணவுத் திட்ட செயலாாக்கத்திற்கென புதியதாக பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை வெளியீடு.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட செங்கல்பட்டு, தென்காசி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சத்துணவுத் செயலாக்கத்திற்கென புதியதாக பணியிடங்கள் தோற்றுவித்தல் வெளியிடப்படுகிறது.

ஆணை:-

மேலே ஐந்தாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், தமிழ்நாட்டில் புதியதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள, செங்கல்பட்டு, தென்காசி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில், மாவட்ட சமூக நல அலுவலகங்கள் மற்றும் அவற்றிற்குத் தேவையான புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு தொடர் மற்றும் தொடரா செலவினங்களுக்கு நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

2. சமூக நல ஆணையர், மேலே 6-வதாக படிக்கப்பட்ட கடிதங்களில், புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு தென்காசி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் சத்துணவுத் திட்டப் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தனித்தனியாக கோப்புகள் பராமரிப்பது, கூட்டங்களில் கலந்து கொள்வது போன்ற பணிகளை குறைந்தபட்ச தற்போதுள்ள பணியாளர்களை கொண்டு நடைமுறைப்படுத்துவது மிகுந்த சிரமமாக உள்ளது என்றும், மேலும், சத்துணவுத் திட்டம் மிகவும் உணர்வு பூர்வமானது (Sensitive) என்பதால், தினந்தோறும் கண்காணிக்க வேண்டியதன் அவசியம் கருதி, புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு நிர்வாகத்தினை இடையூறின்றியும், பணிப்பளு இன்றியும் எளிமைப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாலும், தனி நிர்வாக கட்டமைப்பு அத்தியாவசியமாக உள்ளது என்றும், தற்போதுள்ள ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சத்துணவு பிரிவிற்கென குறைந்தபட்ச பணியிடங்களே உள்ளதால், இரு மாவட்ட நிருவாகங்களை ஒரு மாவட்ட பணியாளர்களைக் கொண்டு மேற்கொள்வது மிகவும் சிரமமாகவே உள்ளது என்றும், எனவே, புதியதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு, தென்காசி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில், சத்துணவுத் திட்ட செயலாக்கத்திற்கென கீழ்கண்ட பணியிடங்களை ஒப்பளிப்பு செய்து ஆணை வழங்குமாறும், இது தொடர்பாக ஏற்படும் மொத்த செலவினம் ரூ.4,12,08,696/-க்கு (தொடர் செலவினம் ரூ.22,50,000/-) ஒப்பளிப்பு ரூ.3,89,58,696/- மற்றும் தொடரா செலவினம் செய்யுமாறும் சமூக நல ஆணையர் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்:-

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் . சத்துணவுத் திட்டம் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட செங்கல்பட்டு , தென்காசி , கள்ளக்குறிச்சி , மயிலாடுதுறை , திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சத்துணவுத் திட்ட செயலாக்கத்திற்கென புதியதாக பணியிடங்கள் தோற்றுவித்தல் வெளியிடப்படுகிறது . - ஆணை 👇👇👇 CLICK HERE TO DOWNLOAD G.O.(Ms)No.55, dated 30.08.2024 Post creation 6 districts PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.