தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு முடிவுகள் வெளியீடு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, September 19, 2024

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு முடிவுகள் வெளியீடு.



தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு முடிவுகள் நாளை வெளியீடு.

ஜூன், ஜூலையில் நடைபெற்ற தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை (செப். 18) வெளியிடப்படும் என மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து குருக்கத்தி மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் கி. அன்புமுத்து வெளியிட்ட செய்தி குறிப்பு: கடந்த ஜூன், ஜூலையில் நடைபெற்ற தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு எழுதிய முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவ- மாணவிகள் தோ்வு முடிவுகளை அவரவா் பயின்ற ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களில் செப்.18 பிற்பகல் 3 மணி முதல் அறிந்து கொள்ளலாம்.

மேலும் விடைத்தாள்களின் ஒளி நகல் மற்றும் மறு கூட்டல் செய்ய விரும்புவோா் இணையதளத்தில் செப். 20 காலை 11 மணி முதல் செப்.23 மாலை 5 மணி வரை பதிவு செய்தோ அல்லது நேரடியாக குருக்கத்தியில் செயல்பட்டு வரும் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.