TNPSC - மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு மீண்டும் துறைத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, August 23, 2024

TNPSC - மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு மீண்டும் துறைத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு

TNPSC - மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு மீண்டும் துறைத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அறிவிப்புகள் - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறைத் தேர்வுகளை முதல் மூன்று முறை எழுதியும் தேர்ச்சி பெறாத 50 வயதினை கடந்த மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு மீண்டும் துறைத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்தல் வெளியிடப்படுகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறை தேர்வுகளை முதல் மூன்று முறை எழுதியும் தேர்ச்சி பெறாத 50 வயதினை கடந்த மாற்றுத்திறனாளிகள் அரசு பணியார்களுக்கு மீண்டும் துறைத்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு நடத்தப்படும் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது கடினமாக உள்ளதால் பணிவரன்முறை செய்தல் மற்றும் பதவி உயர்வு கிடைக்கப் பெறாமல் உள்ளனர். குறிப்பாக, 50 வயதினை கடந்து அரசு பணியில் உள்ள பார்வைத்திறன், செவித்திறன் பாதிக்கப்பட்ட கற்றல் குறைபாடு, மனவளர்ச்சி குன்றிய மற்றும் புற உலக சிந்தனையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு துறைத் தேர்வுகள் எழுதுவதிலிருந்து விலக்கு அளிப்பதன் மூலம் இவ்வகை மாற்றுத்திறனாளிகள் பணிவரன்முறை மற்றும் பதவி உயர்வு பெற்றிட எதுவாக அமையும் எனயும், மேலும் அரசு வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பார்வைத்திறன் பாதிப்பு. செவித்திறன் பாதிப்பு, கற்றல் குறைபாடு, மனவளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் புற உலக சிந்தனையற்ற மாற்றுத்திறனாளிகளுடன் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அந்தந்த பதவிகளுக்குரிய துறைத் தேர்விலிருந்து சில நிபந்தனைகளுக்குட்பட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்களித்து ஆணை வெளியிடுமாறு மாற்றுத்திறனாளிகள் நவ இயக்குநர் அரசினைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

3. மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமாக பரிசீலித்து. அதனை துறை வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவிகித இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசின் பங்வேறு துறைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளான பார்வைத்திறன் பாதிப்பு செவித்திறன் பாதிப்பு, கற்றல் குறைபாடு, மனவளர்ச்சி குன்றியவர்கள், புற உலக சிந்தனையற்ற மற்றும் கை கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தினால் நடத்தப்படும் அந்தந்த பதவிகளுக்குரிய உரிய துறை தேர்விலிருந்து கீழ்காணும் நிபந்தனைகளுக்குட்பட்டு விலக்களித்து அரசு ஆணையிடுகிறது:-

சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 50 வயதிற்கு குறையாதவராக இருக்க வேண்டும்.

1 சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற குறைந்தது 3 தடவைகளாவது முயற்சி செய்திருக்க வேண்டும். இதற்கு அத்தாட்சியாக பணிப்பதிவேட்டில் (Service Register) விவரம் இருக்க வேண்டும் அல்லது இது குறித்த நுழைவு சீட்டுகளை வைத்து சம்பந்தப்பட்ட அலுவலர் விண்ணப்பிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் இந்த சலுகையை அடையத்தக்க வகையில் அவருடைய பணிக்குறிப்புகள் மன நிறைவு அளிப்பதாக இருக்க வேண்டும். CLICK HERE TO DOWNLOAD G.O (Ms) No.11, Dt. 13.08.2024 - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.