தற்காலிக பராமரிப்பு தேவைப்படும் வகுப்பறைகள் விவரம் கோரி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, August 24, 2024

தற்காலிக பராமரிப்பு தேவைப்படும் வகுப்பறைகள் விவரம் கோரி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!



தற்காலிக பராமரிப்பு தேவைப்படும் வகுப்பறைகள் விவரம் கோரி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-600 006

ந.க.எண்.019231 /கே 4/2024, நாள். 22.08.2024.

பொருள் : தொடக்கக்கல்வி

- தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் தற்காலிக பராமரிப்பு தேவைப்படும் வகுப்பறைகள் விவரம் கோருதல் தொடர்பாக.

பார்வை :

அரசு கடிதஎண். 1604/பொது1(1) /2024-1, நாள். 16.08.2024.

2. தலைமை செயலாளர் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட ஆகஸ்ட் மாதம் 9 தேதியிட்ட தினந்தந்தி நாளிதழில் வெளியான செய்தி எண்.811/சி.எஸ், நாள்.10.08.2024. பார்வை (1)-இல் காணும் அரசுக் கடிதத்தில், 10.08.2024 அன்றைய தினந்தந்தி நாளிதழில் வெளியான செய்தியில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த சிறுதாவூர் அரசு உயர்நிலைப்பள்ளியின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் 5 பள்ளி மாணவிகள் காயமடைந்ததாகவும், இந்நிகழ்வு தொடர்பாக, அரசு தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து அரசு பள்ளிக் கட்டடங்களை ஆய்வு செய்து 100% உறுதி தன்மையுடன் உள்ளதா என்பதை உறுதிபடுத்துமாறும், பராமரிப்புப் பணிகள் தேவைப்படின் பொதுப்பணித் துறை அல்லது தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பின் ஒத்துழைப்புடன் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்காண் பொருள் சார்ந்து, அனைத்து பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்து தற்காலிகமாக பராமரிப்புப் பணிகள் தேவைப்படும் பள்ளிகள் குறித்த விவரங்கள் அடங்கிய பட்டியலை அரசுக்கு 2 வார காலத்திற்குள் அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

எனவே, தொடக்கக்கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளை பார்வையிட வரும் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட செயற்பொறியாளருக்கு ஒத்துழைப்பு தந்திடவும் அவர்கள் உதவியுடன் தற்காலிகமாக பராமரிப்பு பணிகள் தேவைப்படும் விபரங்களை இத்துடன் இணைக்கப்பட்ட Excel Sheet - படிவத்தில் பூர்த்தி செய்தும் அதனை மாவட்டக்கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) கையொப்பம் பெற்று Scan செய்து 28 .08.2024 -க்குள் இவ்வியக்கக deeksections@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக்கல்வி) தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு: படிவம்

பெறுநர்

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) CLICK HERE TO DOWNLOAD DEE - Temporary Maintenance Classroom Proceedings - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.