பி.எட் வினாத்தாள் கசிவு - பதிவாளர் நீக்கம்; புதிய பதிவாளர் நியமனம்.
பி.எட் 4 ஆவது செமஸ்டர் வினாத்தாள் கசிவு தொடர்பாக ஆசிரியர் கல்வியல் பல்கலைக்கழக பதிவாளராக இருந்த ராமகிருஷ்ணன் நீக்கப்பட்டு, புதிய பதிவாளராக ராஜசேகரன் நியமனம்.
இன்று நடைபெற இருந்த creating an inclusive school தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது தொடர்பாக விசாரணை.
இணையதளம் வாயிலாக புதிய வினாத்தாள் அனுப்பப்பட்டு தேர்வு நடைபெற்று வருகிறது. பி.எட் வினாத்தாள் லீக் - திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!..
இரண்டாம் ஆண்டு பி.எட் படிப்புக்கான 4வது செமஸ்டர் வினாத்தாள் லீக்கான விவகாரம்.
வெளியான வினாத்தாளை திரும்ப பெறுவதாக உயர்கல்வித்துறை அறிவிப்பு.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை. நடத்தும் creating an inclusive school என்ற பாடத்துக்கான வினாத்தாள் லீக்கானது.
இன்று காலை 10 மணிக்கு தேர்வு துவங்கும் முன்பாக இணையதளம் வாயிலாக புதிய வினாத்தாள் அனுப்பப்படும் எனவும் உயர் கல்வித் துறை அறிவிப்பு.
கடந்த 27ம் தேதி தொடங்கிய பி.எட் படிப்புக்கான தேர்வுகள் வரும் 31ம் தேதி வரை நடைபெறுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.