தமிழகத்தில் பாடப் புத்தகங்களின் விலை அதிரடியாக உயர்வு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, August 13, 2024

தமிழகத்தில் பாடப் புத்தகங்களின் விலை அதிரடியாக உயர்வு!



தமிழகத்தில் பாடப் புத்தகங்களின் விலை அதிரடியாக உயர்வு!

காகிதங்களின் விலை உயர்வு, அச்சடிப்பதற்கான கட்டணம் உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பாடப் புத்தகங்களின் விலையை உயர்த்தியுள்ளதாக பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது. 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களின் விலைப்பட்டியல்!

பாடப் புத்தகங்களின் விலை உயர்வு.*

தனியார் பள்ளி மாணவர்களுக்கு விற்கப்படும் அரசு பாடநூல் கழக புத்தகங்களின் விலை ₹30 முதல் ₹90 வரை உயர்த்தப்பட்டுள்ளன.

1 முதல் 4-ம் வகுப்பு புத்தகங்கள் ₹30 - 40 வரையும்,

5 முதல் 7-ம் வகுப்பு புத்தகங்கள் ₹30 - 50 வரையும் உயர்த்தப்பட்டுள்ளன.

8-ம் வகுப்பு புத்தகம் ₹40 - ₹70 வரையும்,

9 - 12 வகுப்பு புத்தகங்கள் ₹50 -80 வரையும் உயர்வு.

ஒருசில புத்தகங்கள் ₹90 வரை உயர்த்தப்பட்டுள்ளன.

-பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல்.



*தமிழகத்தில் பாடப் புத்தகங்களின் விலை அதிரடியாக உயர்வு*

தமிழகத்தில் பாடப் புத்தகங்களின் விலையை உயர்த்தி பாடநூல் கழகம் அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்களுக்காக தமிழ்நாடு பாடநூல் கழகம் ஆண்டுதோறும் சுமார் 5 கோடி பாடப் புத்தகங்களை அச்சிட்டு விநியோகம் செய்து வருகிறது. இதில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த பாடப் புத்தகங்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடப் புத்தங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

அதேபோல, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களும் இந்த பாடப் புத்தகங்களை வாங்குகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் பாடப் புத்தகங்களின் விலையை உயர்த்தி பாடநூல் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, 1-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.160 உயர்ந்து, ரூ.550-க்கு விற்பனையாகிறது. 2-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.150 உயர்ந்து ரூ.530-க்கு விற்பனையாகிறது. 3-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.190 உயர்ந்து ரூ.620-க்கு விற்பனையாகிறது. 4-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.180 உயர்ந்து, ரூ.650-க்கு விற்பனையாகிறது. 5-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.200 உயர்ந்து ரூ.710-க்கு விற்பனையாகிறது. 6-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.320 உயர்ந்து ரூ.1,110க்கு விற்பனையாகிறது. 7-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.340 உயர்ந்து ரூ.1,200 விற்பனையாகிறது.

8-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.310 உயர்ந்து ரூ.1,000 உயர்ந்துள்ளது. 9-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.340 உயர்ந்து ரூ.1,110க்கு விற்பனையாகிறது. 10-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.340 உயர்ந்து, ரூ.1,130க்கு விற்பனையாகிறது.

காகிதங்களின் விலை உயர்வு, அச்சடிப்பதற்கான கட்டணம் உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பாடப் புத்தகங்களின் விலையை உயர்த்தியுள்ளதாக பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.