சுதந்திர தின விழா -தேசியக்கொடி ஏற்றுதல் - செயல்முறை ஆணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, August 13, 2024

சுதந்திர தின விழா -தேசியக்கொடி ஏற்றுதல் - செயல்முறை ஆணை



சுதந்திர தின விழா -தேசியக்கொடி ஏற்றுதல்- செயல்முறை ஆணை

பொருள்:

கிராம சபைக் கூட்டங்கள் - கிராம சபைக் கூட்டங்களில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்பது குறித்து பத்திரிக்கைச் செய்தி வெளியீடு வழங்குதல் - சார்பாக.

பார்வை:

- அறிவுரைகள்

அரசு முதன்மைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கடிதம் எண்.17729/PR.II(1)/2022-1, நாள்.26.10.2022. பார்வையில் காணும் கடிதம் மீது தங்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது.

ஊரகப் பகுதிகளில் நமது இந்திய மக்களாட்சியின் முக்கிய நிகழ்வுகளாக நாடு முழுவதும் கொண்டாடப்படும் நாட்களான, சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய நாட்களில் இந்திய தேசியக் கொடியினை அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களிலும் ஏற்றி வைக்கும் சம்பிரதாய முறைகள் நடைமுறையில் உள்ளன. கிராம ஊராட்சியின் அலுவலகங்களில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்திடும் பொறுப்பு கிராம ஊராட்சித் தலைவர்கள் வசம் உள்ளது.

மேலும் கிராம ஊராட்சிகளில் அமையப் பெற்றுள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் ஆகியவற்றில் தேசியக் கொடியினை ஏற்றிடும் பொறுப்பு அத்தகைய பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மூலம் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த முக்கிய தருணங்களில், அவ்வூராட்சியில் அமைந்துள்ள அரசு மற்றும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் கொடியேற்றுவது குறித்து துறைகளால் வழங்கப்பட்டுள்ள நெறிமுறைகள் உரியவாறு எடுத்து சொல்லப்படாத நிலையில் கிராம ஊராட்சித் தலைவர்கள், பள்ளிகளில் தேசியக் கொடியேற்ற முனைப்பு காட்டுவதினால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மேலும், தேசியக் கொடி ஏற்றுகின்ற நிகழ்வானது. குறிப்பிட்ட கால அளவில் நடைபெற வேண்டியுள்ளதால் கிராம ஊராட்சித் தலைவர்கள் தத்தமது கிராம ஊராட்சியின் கிராம ஊராட்சி கட்டிடத்தில் உள்ள கொடிக் கம்பத்தில் மூவர்ண அலுவலகக் கட்டிடத்தில் கொடியினை ஏற்றிட வேண்டும்.

தேசியக் அரசு மற்றும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில், பள்ளிக் கல்வி துறையின் அறிவுரைகளின் படி தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும். எனவே மேற்கண்ட தகவல்களை அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தெரிவிக்க கேட்டுக்கொள்கிறேன்.

நகல்:

உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), அனைத்து மாவட்டங்கள். CLICK HERE TO DOWNLOAD Flag Hoisting order PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.