01.08.2024 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் - Dir Proceedings
01.08.2024 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து இணை இயக்குநர் பணியாளர் தொகுதி அவர்களின் செயல்முறைகள் ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் சார்ந்த கூட்டம் நடைபெறும் இடம்
கூட்டப்பொருள்
கலந்து கொள்ள வேண்டிய நபர்கள்
கலந்து கொள்ள வேண்டிய மாவட்டங்கள்...
முழு விபரங்கள்...
👇👇👇👇👇👇
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்
சென்னை 6
ந.க.எண். 048350 / சி3 / இ1 / 2024 நாள்.05.08.2024
பொருள்:
பள்ளிக் கல்வி -01.08.2024 அன்றைய நிலவரப்படி அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களின்எண்ணிக்கையின்அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் அறிவுரைகூட்டம்-சார்பாக. பார்வை: 1)அரசாணைஎண்.525 பகதுநாள்.29.12.1997 2)அரசாணைஎண்.46 பகதுநாள்.14.5.2004
3)அரசாணைஎண்.231 பகதுநாள்.11.8.2010
4)அரசாணை எண்.180 பகதுநாள்.17.7.2012
5)அரசாணைஎண்.217பகது (5(1)துறைநாள்.20.6.19 6)அரசாணை (நிலை) எண்.176 பள்ளிக்கல்வி (பக5(1)துறைநாள்.17.12.2021
7)G.O.(Ms)No.12 School Education (SE5(1)Dept. dt.3.2.2022
-0- பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08. அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் (Staff Fixation) மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு (2024-25) 01.08.2024 அன்றைய நிலவரப்படி எண்ணிக்கையின்படி பட்டதாரி மாணவர்களின் ஆசிரியர்கள் பணியிடம் (BT Staff Fixation) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது.
இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அலுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.
CLICK HERE TO DOWNLOAD Dir Proceedings - PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.