தமிழ்ப் புதல்வன் திட்டம் செயல்படுத்துதல் - அரசாணை வெளியீடு!
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை 2024-2025 ஆம் நிதியாண்டு முதல் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு " புதுமைப் பெண் திட்டம் " போன்று மாதந்தோறும் ரூ .1,000 / - உதவித் தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் " செயல்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
C.No.1150/SW3-2/2024 தமி அ 1/1749667/2024 4000 சுருக்கம் -
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை 2024-2025 ஆம் நிதியாண்டு முதல் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு "புதுமைப் பெண் திட்டம்" போன்று மாதந்தோறும் ரூ.1.000/- உதவித் தொகை வழங்கும் "தமிழ்ப் புதல்வன் திட்டம்" செயல்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந3-2) துறை
அரசாணை (நிலை) எண். 47
நாள் 23.07.2024
1.
குரோதி, ஆடி 07 திருவள்ளுவர் ஆண்டு 2055 படிக்க:
அரசாணை (நிலை) எண்.46, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, நாள் 02.08.2022. 2. அரசாணை (நிலை) எண்.85, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, நாள் 28.12.2022.
3. அரசாணை (நிலை) எண்.16, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, நாள் 11.03.2024.
4. 2024-2025 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிவிப்பில் மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களின் அறிவிப்பு. மேலும் படிக்க:
5. கல்லூரிக் கல்வி இயக்குநர் அவர்களின் கடிதம் ந.க.எண்.7176/ எம்3/2024, நாள் 16.05.2024.
*** ஆணை:
மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், "மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்" என்னும் திட்டமானது "மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்" (புதுமைப் பெண் திட்டம்) என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்று இந்திய அரசு/ தமிழ்நாடு அரசு / பல்கலைக்கழக மானிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு அவர்கள் C.No.1150/SW3-2/2024 2 1/1749667/2024
உயர்கல்வி பயிலும் வரையில் மாதந்தோறும் ரூ.1,000/- வழங்குவதற்கு ஆணைகள் வெளியிடப்பட்டன.
மேலும், இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்
நெறிமுறைகள் மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் வெளியிடப்பட்டன. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் மேற்குறிப்பிட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு திருத்த ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆணையிடப்பட்டுள்ளது.
2. 2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை உரையில் மாண்புமிகு நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் அவர்கள், ஏனையவற்றுடன், பின்வரும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்:-
"உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட "மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம்" பெண்களின் உயர் கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், அரசு பள்ளிகளில் பயின்ற. ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும் அரசுப் மாணவரின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும் 'தமிழ்ப் புதல்வன்' எனும் ஒரு மாபெரும் திட்டம் வரும் நிதியாண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளி பாடப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்கள் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். இத்தகைய முன்னோடித் திட்டங்களின் மூலம் நமது இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி அவர்கள் நமது மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்காலத் தூண்களாகத் திகழ்வார்கள். இப்புதிய திட்டத்தின் மூலம் சுமார் மூன்று இலட்சம் கல்லூரி மாணவர்கள் பயனடைவர். உயரிய நோக்கம் கொண்ட இத்திட்டத்தை நிறைவேற்றிட வரும் நிதியாண்டில் 360 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது".
3. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்களில் மாணவர்கள் சேர்ந்து பயன் பெறும் வகையிலும் மாணவர்களின் உயர்கல்வியை ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தினை நடைமுறைப்படுத்தலாம் என்றும், சமீபத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட "புதுமைப் பெண்" திட்டத்தின் பயனாளர் கணக்கெடுப்பின்படி 3.28,159 மாணவிகள் மாதந்தோறும் ரூ.1,000/-பெற்று பயனடைந்துள்ளனர் என்றும், "புதுமைப் பெண் திட்டம்" தமிழக அரசால் சீரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதன் அடிப்படையில் "தமிழ்ப் புதல்வன்" திட்டத்தில் மேற்காண் மாணவர்களின் எண்ணிக்கையினை தோராயமாக 3,28,000 எனக் கணக்கில் கொண்டு ஒரு மாணவனுக்கு மாதந்தோறும் ரூ.1,000/- வீதம் அளிக்கும் விதமாக ஒரு C.No.1150/SW3-2/2024 3 1/1749667/2024
ஆண்டுக்கு ரூ.393,60,00,000/- மற்றும் இத்திட்டத்தினை செயல்படுத்த நிர்வாக செலவினமாக ரூ.7,87,20,000/- ஆக மொத்தம் ரூ.401,47,20.000/- தேவைப்படுகிறது என்றும், "தமிழ்ப் புதல்வன்" எனும் தொலைநோக்கு திட்டத்தினை செயல்படுத்துகையில் மாணவர்கள் கல்லூரிகளில் அதிக அளவில் சேர்க்கை பெறும் நிலை எழும் என்றும், அவர்களது உயர்கல்வித் தேவைகளை அவர்களே பூர்த்தி செய்து கொள்ளவும் தமிழ்நாட்டின் மொத்த மாணவர் / மாணவியர் சேர்க்கை விகிதம் (GER) உயர்வதற்கு வழிவகை செய்யும் என்றும் தெரிவித்து, அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உதவித் தொகையாக "புதுமைப்பெண்" திட்டத்தின் மூலம் அளிப்பது போன்று "தமிழ்ப்புதல்வன்" திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி பயில வரும் 3,28,000 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உதவித் தொகை அளிக்கும் வகையில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் இத்திட்டத்தினை செயல்படுத்த ஓராண்டிற்கு ரூ.401,47,20,000/- நிதி ஒதுக்கீடு வழங்குமாறு மேலே ஐந்தாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநர் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
4. கல்லூரிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை கவனமுடன் பரிசீலனை செய்த அரசு, அதனை ஏற்று, 2024-2025 ஆம் நிதியாண்டு முதல் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்று மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், புதுமைப் பெண் திட்டம் போன்று மாதந்தோறும் ரூ.1,000/- உதவித் தொகை வழங்கும் "தமிழ்ப் புதல்வன்" என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, இவ்வாணையின் இணைப்பில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் என ஆணையிடுகிறது.
5. மேலும், "தமிழ்ப் புதல்வன்" திட்டத்தின் கீழ் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்று மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உதவித் தொகை அளிக்கும் வகையில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் இத்திட்டத்தினை செயல்படுத்த இந்நிதியாண்டில் தேவைப்படும் ரூ.360 கோடிக்கு நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது. 6. மேற்காணும் திட்டத்தினை முழுமையாக செயல்படுத்திட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சமூக நல ஆணையர் கேட்டுக்கொள்ளப்படுகிறார். இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000/- உதவித் தொகையினை National Automated Clearance House (NACH) மூலம் வழங்குவதற்கு சமூக நல ஆணையருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், இத்திட்டத்திற்கு அடுத்த நிதியாண்டிற்கு தேவைப்படும்
C.No.1150/SW3-2/2024 1/1749667/2024 நிதி ஒதுக்கீட்டினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மானியக் கோரிக்கையின் கீழ் கோருமாறு சமூக நல ஆணையர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
*7. மேலே பத்தி-5ல் ஒப்பளிக்கப்பட்ட செலவினத் தொகை பின்வரும் கணக்குத் தலைப்புகளின் கீழ் பற்று வைக்கப்பட வேண்டும்:-
i. "2202 பொதுக் கல்வி -03 பல்கலைக்கழக கல்வியும் உயர் கல்வியும் 103 அரசுக் கல்லூரிகளும் கல்வி நிறுவனங்களும் KD உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாநிலச் செலவினங்கள் -
மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குதல் மானியங்கள் - 01 தனித்திட்ட மானியம்" [IFHRMS DPC 2202-03-103-KD-31101] ii. "2202 311
பொதுக் கல்வி 03 பல்கலைக்கழக கல்வியும் உயர் கல்வியும் - 789 ஆதிதிராவிடர்களுக்கான சிறப்புக் கூறுகள் திட்டம் - மாநிலச் செலவினங்கள் AA சிறப்புக் கூறுகள் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குதல் 311 மானியங்கள் - 01 தனித்திட்ட - மானியம்" — [IFHRMS DPC 2202-03-789-AA-31101] iii. "2202
பொதுக் கல்வி 03 பல்கலைக்கழக கல்வியும் உயர் கல்வியும் 796 பழங்குடியினர் பகுதித் துணைத் திட்டம் மாநிலச் செலவினங்கள் AA பழங்குடியினர் துணைத் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குதல் 311 மானியங்கள் - 01 தனித்திட்ட மானியம்" [IFHRMS DPC 2202-03-796-AA-31101] -
8. இவ்வரசாணை நிதித் துறையின் மின் அலுவலக எண்.1150/நிதி(சந)/ 2024, நாள் 22.07.2024-ல் பெறப்பட்ட இசைவுடன் வெளியிடப்படுகிறது. (ஆளுநரின் ஆணைப்படி) ஜெயஸ்ரீ முரளிதரன், பெறுநர் சமூக நல ஆணையர், சென்னை-5. அரசு செயலாளர்.
இயக்குநர், கல்லூரிக் கல்வி இயக்ககம், சென்னை-6.
இயக்குநர், பள்ளிக் கல்வித் துறை, சென்னை - 6.
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் / அரசு முதன்மைச் செயலாளர் / அரசு செயலாளர். உயர்கல்வித் துறை/ பள்ளிக் கல்வித்துறை/ கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை/ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை/ C.No.1150/SW3-2/2024 5 1/1749667/2024
பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்படோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை/ மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை/தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை/ வேளாண்மை - உழவர் நலத் துறை/ சட்டத் துறை/ *தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை/ தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை/ இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை/ சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை/ சுற்றுலா பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை, தலைமைச் செயலகம், சென்னை - 9.
பிற துறைகள், தலைமைச் செயலகம், சென்னை - 9. அனைத்து துறைத் தலைவர்கள். தலைமைச் செயல் அலுவலர்.
தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, சென்னை-2. அனைத்து மாவட்ட ஆட்சியர்கள். மாநில முதன்மைக் கணக்காயர், சென்னை-18. சம்பளக் கணக்கு அலுவலர்கள், சென்னை/மதுரை. அனைத்து மாவட்ட கரூவூல அலுவலர்கள். நகல்: மாண்புமிகு முதலமைச்சர் அலுவலகம், சென்னை 9. மாண்புமிகு அமைச்சர் (நிதி மற்றும் மனித வள் அவர்களின் சிறப்பு நேர்முக உதவியாளர், சென்னை - 9. மேலாண்மைத் துறை) மாண்புமிகு அமைச்சர் (இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை) அவர்களின் சிறப்பு நேர்முக உதவியாளர், சென்னை - 9. மாண்புமிகு அமைச்சர் (சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை) அவர்களின் சிறப்பு நேர்முக உதவியாளர், சென்னை - 9. தலைமைச் செயலாளர் அவர்களின் முதுநிலை முதன்மைத் தனிச் செயலாளர், சென்னை - 9. அரசு செயலாளர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அவர்களின் முதன்மைத் தனிச் செயலாளர், சென்னை - 9.
நிதி (ச.ந1)த் துறை, தலைமைச் செயலகம், சென்னை - 9. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந2) துறை, சென்னை - 9. இருப்பு கோப்பு/ உதிரி நகல். //ஆணைப்படி அனுப்பப்படுகிறது// அ. தேவராகன் 2310712024 பிரிவு அலுவலர் 23/07712024 C.No.1150/SW3-2/2024 6 1/1749667/2024
இணைப்பு
(அரசாணை (நிலை) எண்.47, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை (சந3-2) துறை, நாள் 23.07.2024. தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள்:-
(அ) திட்ட வடிவமைப்பு:
மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்க பிரத்தேயகமான விண்ணப்பப் படிவம் ஒன்று (புதுமைப் பெண் திட்டம் போலவே) வடிவமைக்கப்பட்டு, நிகழ்நிலையில் (Online) ஏற்றப்படும். விண்ணப்ப படிவத்தில் அளித்துள்ள ஆதார் எண்ணை சார்ந்த கல்லூரியிலிருந்து பள்ளிக் கல்வித் துறையின் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (EMIS) மூலம் சரிபார்ப்பு செய்து, அம்மாணவன் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்றதை உறுதிப்படுத்துதல் வேண்டும். அதனை உறுதிப்படுத்திய பின்பு உயர்கல்வித் துறைக்கு மேலனுப்பப்படுதல் வேண்டும். பின்னர் விண்ணப்பிக்கும் மாணவருக்கு தனிப்பட்ட எண் (Unique ID) உருவாக்கி, மாணவரால் பதிவு செய்யப்பட்ட அலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அந்த எண்ணைக் கொண்டு இப்பொருள் தொடர்பாக அதன் நிலையினை அறிந்து கொள்ள இயலும். UMIS முகப்பு இணையம் மூலமாக பதிவு செய்யும் விவரத்தையும் இதன் பொருட்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.
(ஆ) நேரடி பலன் பரிமாற்றம்:
அங்கீகரிக்கப்பட்ட அனைத்து நிகழ்நிலை விண்ணப்பங்களுக்கும் (Online Applications), சமூக நலத் துறையால் National Automated Clearing House (NACH) வாயிலாக ரூ.1.000/- தொகை மாணவர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு (Direct Benefit Transfer) வைக்கப்படும். 1. இத்திட்டத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் முழுமையாக பயனடைவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்படும்.
2. மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்ததில் இருந்து, அவ்வூக்கத் தொகையை தங்களது வங்கி கணக்கிற்கு சேரும் வரை நடைபெறும் நிகழ்வுகளை வலுவான தொழில்நுட்ப கட்டமைப்பு (Robust IT System) மூலமாக அதன் நிலைகளை அவர்களுக்கென அளிக்கப்பட்டுள்ள தனிப்பட்ட எண் மூலமாக தெரிந்து கொள்ள இயலும். மேலும், மாணவர்கள் விண்ணப்பம் பதிவு செய்யும் C.No.1150/SW3-2/2024
1/1749667/2024
போதும், ஊக்கத் தொகை மாணவர்களின் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்த பின்னரும் அவர்களின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
3. மாணவர்களுக்கு இது தொடர்பாக ஏற்படும். சந்தேகங்களுக்கு விளக்கங்கள் அளிக்கும் பொருட்டு இணையதளம் மூலமாக பதிவு செய்யவும், அதற்கான தீர்வினை சரிசெய்து முடிக்கவும் வழிவகை செய்யப்படும்.
(இ) தகுதி வரம்புகள்:
1. வருமான உச்ச வரம்பு, இனம் மற்றும் ஒதுக்கீடு ஆகிய எந்தவொரு பாகுபாடும் இன்றி, 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள், தமிழகத்தில் உள்ள எவ்வித கல்வி நிறுவனங்களிலும் உயர்கல்வி பயிலும் மாணவராக இருத்தல் வேண்டும். மேலும், மாணவர் பயிலும் நிறுவனம் மற்றும் பாடப்பிரிவு அரசால் அங்கீகரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
2. அரசுப் பள்ளிகளிலும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் 8 ஆம் வகுப்பு அல்லது 9 ஆம் வகுப்பு அல்லது 10 ஆம் வகுப்பு வரை பயின்று தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைய தகுதி உடையவர்கள் ஆகிறார்கள்.
3. தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இளங்கலை பட்டம், தொழிற்சார் படிப்புகளில் சேர்க்கையில் முன்னுரிமை வழங்குதல் சட்டம், 2021ல் குறிப்பிட்டுள்ளவாறு "அரசுப் பள்ளி" என்பது அரசுப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை பள்ளிகள், கள்ளர் மறுவாழ்வு பள்ளிகள், வனத் துறை பள்ளிகள் மற்றும் கல்விக்கான அடிப்படை உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வி பெறும் மாணவர்கள் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் நடத்தப்படும் அரசு சேவை இல்லங்கள் / அரசு குழந்தைகள் காப்பகங்கள் போன்றவற்றை உள்ளடக்கியது. 4. உயர்கல்வி என்பது கலை மற்றும் அறிவியல், தொழிற்சார் படிப்புகள், இணை மருத்துவம் சார்ந்த படிப்புகள், பட்டயப் படிப்பு. தொழிற்கல்வி மற்றும் ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு போன்றவற்றை உள்ளடக்கியது.
C.No.1150/SW3-2/2024 8 1/1749667/2024 5. தொலைதூர அஞ்சல் வழியிலும், அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களிலும் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகையை பெற இயலாது.
6. வேறு ஏதேனும் உதவித் தொகை பெற்று வருபவராக இருப்பினும், இத்திட்டத்தில் பயன்பெற தகுதி உடையவராவர்.
7. மற்ற மாநில பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் இத்திட்டத்தில் பயனடைய தகுதி அற்றவர்களாவர்.
8. ஒரே குடும்பத்திலிருந்து எத்தனை மாணவர்கள் தகுதி பெற்றிருப்பினும், அனைவரும் இத்திட்டத்தின் கீழ் பயனடைய விண்ணப்பிக்கலாம்.
9. பள்ளிப் படிப்பிற்கு பின்னர், உயர்கல்வி பயின்று வரும் மாணவர்கள் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவராவர். ஒருங்கிணைக்கப்பட்ட பாடப்பிரிவில் (Integrated courses) பயிலும் மாணவர்களுக்கு மட்டும் முதல் மூன்று ஆண்டுகள் இத்திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகையினை பெற இயலும்.
10. பருவத் தேர்வு / வருடத் தேர்வினை எழுத அனுமதிக்கப்படும் மாணவர்கள் இந்த உதவித் தொகை பெறுவதற்கு தகுதி பெறுவார்கள். 11. பிற மாநிலங்களில் ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் IIT, NIT, IISER போன்ற தகைசால் கல்வி நிறுவனங்களில் பயிலும் அரசுப் பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயின்ற மாணவர்களும் இத்திட்டத்தில் பயன்பெறுவர். இவர்கள் மாநில திட்ட மேலாண்மை அலகின் மூலமாக அணுகலாம்.
(ஈ) தரவு சரிபார்ப்பு செயல்முறை:
மாணவர்கள் இணைய முகப்பின் (Online Portal) வழியாக பதிவு செய்யப்பட்ட விவரங்கள் பள்ளிக் கல்வித் துறைக்கும் (6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்றதையும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயின்றதையும் உறுதி செய்யும் பொருட்டு), உயர்கல்வி பயிலும் நிறுவனத்திற்கும் (அந்நிறுவனத்தில் சேர்ந்து, தொடர்ந்து பயின்று வருவதை உறுதி செய்யும் பொருட்டு), சார்ந்த வங்கிகளுக்கும் (மாணவரின் வங்கி கணக்கு சரிபார்க்கும் பொருட்டு) அனுப்பி வைக்கப்படும். (உ) அளிக்கப்படும் ஊக்கத் தொகையின் விவரம்: அரசுப் பள்ளிகளில் பயின்று மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்று கலை மற்றும் அறிவியல் பிரிவு (3 ஆண்டு படிப்பு), பொறியியல் பிரிவு (4 ஆண்டு படிப்பு), மருத்துவப் படிப்பு (5 ஆண்டு படிப்பு), சட்டம் C.No.1150/SW3-2/2024 9 1/1749667/2024
மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இணையான கல்வி (3 - 4 ஆண்டுகள்) மற்றும் இதர கல்வி பயிலும் மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1.000/- வீதம் வழங்கப்படும். ஒருங்கிணைக்கப்பட்ட பாடப் பிரிவில் (Integrated Courses) பயிலும் மாணவர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் இத்திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை வழங்கப்படும்.
(ஊ) திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல்:
National Automated Clearance House (NACH) மூலமாக நேரடியாக (Direct Benefit Transfer) மாணவரது வங்கி கணக்கில் பணப் பரிமாற்றம் ஒற்றைச் சாளர முறையில் செய்யப்படும். அரசாங்கத்திடமிருந்து மாணவர்களுக்கு இணையதள சேவைகள் கிடைக்கும் வகையில் இந்த அமைப்பு மின் ஆளுமை (e-Governance) மூலம் செயல்படுத்தப்படும்.
மாணவர்களின் விண்ணப்பங்களை இம்முறையில்
ஆய்வு செய்வதற்காகவோ அல்லது பயனாளிகளை கண்டறிவதற்காகவோ எவ்விதமான காகித தொடர்பு மற்றும் நேரடி தொடர்பு தேவை ஏற்படாது. இத்திட்டமானது முற்றிலும் தானியங்கி முறையில் நடைபெறும். மாணவர்களின் விண்ணப்பங்கள், பயனாளரின் அங்கீகார நிலையினை பொறுத்து உரிய அதிகாரி / பயனாளிக்கு தெரியும் வகையில் அமையும்.
மாணவர்களின் ஆதார் எண், பள்ளிக் கல்வித் துறையின் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (EMIS) தரவுகள் மற்றும் உயர்கல்வி பயிலும் நிறுவனத்தில் பெற்ற சேர்க்கை மற்றும் பல்கலைக் கழக மேலாண்மை தகவல் அமைப்பு (UMIS) ஆகிய தரவுகளுடன் மாணவர்களின் விண்ணப்பம் ஒற்றைச் சாளர முறையில் சரிபார்க்கப்படும். நிகழ்நிலை (Online) வாயிலாக இத்திட்டத்தினை கண்காணிக்க வழிவகை செய்யப்படும். பதிவு செய்யப்பட்ட அலைபேசிக்கு குறுஞ்செய்தி மூலம் பதிவு முடிவு பெற்ற விவரம் மற்றும் தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட விவரம் ஆகியவை அனுப்பப்படும்.
மாணவர்களின் குறைகளை களைய, இணையதள குறைதீர்க்கும் முறை (Online Grievance Redressal Mechanism) ஏற்படுத்தப்படும். மேலும், உரிய அதிகாரிகள் மூலம் மாணவர்களின் குறைகள் உடனே நிவர்த்தி செய்யப்படும். மேலாண்மை தகவல் முறையில் (MIS) பயனாளிகளுக்கு எந்தவொரு தகவலினையும் சார்ந்த அதிகாரிகள் வழங்கும் விதமாக இணைய முகப்பு (Online Portal) வடிவமைக்கப்படும். (எ) இத்திட்டத்தில் ஒன்றிணைந்த துறைகள்: 1. உயர்கல்வித் துறை 2. பள்ளிக் கல்வித் துறை C.No.1150/SW3-2/2024 10 1/1749667/2024 3. தொழில்நுட்பக் கல்வித் துறை 4. தகவல் தொழில்நுட்பத் துறை 5. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை 6. கருவூலக் கணக்கு துறை 7. தமிழ்நாடு மின் ஆளுமை முகமை
8. அனைத்து பல்கலைக் கழகங்கள் 9. முன்னணி வங்கி / மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு
துறையின் செயல்பாடுகள் மற்றும் பொறுப்புகள்
இத்திட்டம் தமிழ்நாடு அரசின் மற்ற துறைகள் மற்றும் நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து கீழ்க்கண்டுள்ளவாறு செயல்படுதல் வேண்டும்:- சமூக நலத் துறையின் செயல்பாடுகள்:
1. சமூக நல ஆணையர் இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பு அலுவலராக (Nodal Officer) செயல்படுவார். கூடுதலாக சமூக நல ஆணையர் வழியாக திட்ட பலன் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
2. தகுதியான விண்ணப்பங்களுக்கு பட்டியலிட்டு, திட்டப் பயன் மாதந்தோறும் ரூ.1,000/- மாணவர்களுக்கு வழங்குதல்.
3. National Automated Clearance House (NACH) வழியாக பயளாளிகளுக்கு முறையாக உரிய நேரத்தில் நேரடி பண பரிமாற்றம் (Direct Benefit Transfer- DBT) மேற்கொள்ள வேண்டும். 4. இத்திட்டத்தின் ஒட்டு மொத்த கண்காணிப்பு.
5. இத்திட்டத்தில் தொடர்புடைய ஒவ்வொரு துறை மற்றும் நிறுவனத்தின் மேற்பார்வை அலுவலர்களை ஒருங்கிணைக்க வேண்டும்.
பள்ளிக் கல்வி / ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் / பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் செயல்பாடுகள்:
1. இத்திட்டத்திற்கென மேற்பார்வை அலுவலர் (Nodal Officer) இணை இயக்குநர் அளவில் ஒருவரை நியமனம் செய்தல் வேண்டும்.
2. கல்வி மேலாண்மைத் தகவல் முறையின் (EMIS) மூலம் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ள மாணவர் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்றவர் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்றவர் என்பதை உறுதி செய்து நிகழ்நிலை (Online) மூலமாக தெரிவிப்பதற்கு பொறுப்பாளர்கள் ஆவர். C.No.1150/SW3-2/2024 11 1/1749667/2024 3. கல்வி மேலாண்மைத் தகவல் முறையின் (EMIS) எண் இல்லாமல் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ள மாணவன் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்றவர் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்றவர் என்பதை உறுதி செய்ய இயலாத மாணவர்களின் விவரத்தினை நேரடியாக சார்ந்த பள்ளியினை தொடர்பு கொண்டு உறுதி செய்து தெரிவித்தல் வேண்டும். 4. அரசுத் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள் தங்கள் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை பெறுவதற்கு தகுதியின் அடிப்படையில் தவறாமல் விண்ணப்பித்தார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
5. பள்ளிக் கல்வித் துறைக்கு சரிபார்ப்பு வேண்டி அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மற்றும் குறைகள் ஒரு வார் காலத்திற்குள் சரிபார்க்கப்பட்டு மீள சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
உயர் கல்வித் துறையின் செயல்பாடுகள்:
1. மாணவர்களுக்கு இத்திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நோக்கங்கள் பற்றிய விவரங்களை சரியான நேரத்தில் வழங்கும் பொருட்டு, தகவல் பலகைகள், கல்வி மற்றும் தொடர்பு சாதனங்கள் வாயிலாக அதன் சிறப்பம்சங்களை விளக்கும் வகையில் தெரிவித்தல் வேண்டும்.
2. தகுதியுள்ள அனைத்து மாணவர்களும் வங்கிக் கணக்கு வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். வங்கி கணக்கு இல்லாத மாணவர்களை பூஜ்ய இருப்புடன் கூடிய வங்கி கணக்கினை திறக்க வலியுறுத்த வேண்டும். 3. தகுதியான மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டு பயனடைவதை உறுதி செய்ய வேண்டும்.
4. ஒரு வருடத்தில் ஒவ்வொரு ஆறு மாதங்களும் அதாவது டிசம்பர்,31 மற்றும் ஜூன்,30 ஆகிய தேதிகளில் மாணவர்கள் தங்கள் நிறுவனத்தில் உயர் கல்வியைப் படிக்கிறார்களா / தொடர்கிறார்களா என்பதை உறுதி செய்திடல் வேண்டும்.
5. உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து துறைகளிலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான செயல்படுத்தும் பொறுப்பு அலுவலர் (Nodal Officer) ஒருவரை நியமித்தல் வேண்டும்.
6. ஒவ்வொரு கல்லூரியிலும் பல்கலைக் கழகத்திலும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தினை செயல்படுத்தும் பொறுப்பு அலுவலர் (Nodal Officer) நியமிக்கப்பட்டு கண்காணிக்க வேண்டும்.
7. குறை தீர்க்கும் அமைப்பின் முதல் முனையமாக செயல்படுதல் வேண்டும். C.No.1150/SW3-2/2024 12 1/1749667/2024
8. வங்கி செயலிழப்பு புகார்களை திட்ட மேலாண்மை பிரிவுக்கு சரியான நேரத்தில் தெரிவித்தல் வேண்டும்.
9. நிறுவனத் தலைவர்கள் மாணவர்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட கால வரையறையினை பேணுவதை உறுதி செய்தல் வேண்டும்.
10. இத்திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்கள், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்கள் தகவல் முகமையில் (Portal) இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
கருவூலத் துறை:
மாணவர்களுக்குச் சேர வேண்டிய தொகைக்கான பட்டியல்களை கால தாமதமின்றி இத்திட்டத்திற்காக துவங்கப்படும் வங்கிக் கணக்கில் சேர்க்க வேண்டும்.
வங்கித் துறை:
மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவின் செயல்பாடுகள்:-
1. மாணவர்களுக்கு "தமிழ்ப் புதல்வன்" திட்டத்தின் மூலம் ஊக்கத் தொகை பெறுவதற்கான பூஜ்ய இருப்பு வங்கிக் கணக்கு துவங்கிட சுணக்கமற்ற வசதிகள் செய்து தர வேண்டும். பயனாளிகளுக்கு நேரடி வங்கி பரிமாற்றங்களை கண்காணித்தல் மற்றும் பயனாளிகளின் வங்கிக் கணக்கினை ஆதார் எண்ணுடன் இணைப்பதை உறுதி செய்தல் வேண்டும். அதற்கான முகாம்களை கல்லூரிகளிலேயே நடத்திட வேண்டும்.
2. தகுதி வாய்ந்த அனைத்து மாணவர்களுக்கும் பற்று அட்டை (Debit Card) வழங்கவும், அவர்களுக்கான ஊக்கத் தொகையினை தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் (ATM) மூலம் எடுத்துக் கொள்ளவும் வசதிகள் ஏற்படுத்தித் தருதல் வேண்டும்.
மாவட்டங்களில் உள்ள முன்னோடி வங்கிகள்
மாணவர்களுக்கு "தமிழ்ப் புதல்வன்" திட்டத்தின் மூலம் ஊக்கத் தொகை பெறுவதற்கான பூஜ்ய இருப்பு வங்கிக் கணக்கு துவங்கிட சுணக்கமற்ற வசதிகள் செய்வதுடன், கல்லூரிகளில் முகாம்கள் நடத்தி எளிமையான வங்கிக் கணக்கு துவங்கும் வழிமுறைகள் மற்றும் வங்கியின் சேவைகளை எளிதில் பெற்றிட வழிவகை செய்தல் வேண்டும். சமூக நலத் துறையின் அனுமதி ஆணைகளின் அடிப்படையில் பயனாளிகளுக்கு நேரடி பணப் பரிமாற்றம் மற்றும் தொடர்பான அறிக்கை ஆகியவற்றை மாற்று ஏற்பாடு வரும் வரை நிர்வகிப்பது இதன் பொறுப்பாகும். C.No.1150/SW3-2/2024 13 1/1749667/2024 தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA) தமிழ்ப் புதல்வன் திட்டத்தினை தொடக்கம் முதல் இறுதி வரை செயல்படுத்திட மின் ஆளுமை முகமை சமூக நலத் துறைக்கு உதவிட வேண்டும். இத்திட்டத்தினை ஒட்டு மொத்தமாக செயல்படுத்திட திட்ட ஒருங்கிணைப்பாளர் நியமனம் செய்திடல் வேண்டும்.
"தமிழ்ப் புதல்வன்" திட்டத்தினை செயல்படுத்தும் பொருட்டு, திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல், மேம்படுத்துதல் மற்றும் கணினிச் செயல்பாடுகளைப் பராமரித்தல், 24 மணி நேரம் 7 நாட்களும் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் பொருட்டு கணினி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் வெளி முகமை மூலம் நியமனம் செய்யப்பட வேண்டும்.
தகவல் முகமை (Portal) உருவாக்கம்
"தமிழ்ப் புதல்வன்" திட்டத்திற்கான தகவல் முகமையினை (Portal) தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் (TNeGA) உருவாக்கித் தரப்பட வேண்டும் மற்றும் அதற்கான செயல்பாட்டு பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் (TNeGA) வழங்கப்பட வேண்டும்.
ஒற்றை சாளர சேவை மூலம் செயல்படுத்துதல் (Process Flow Service Delivery) -
Single Window
1. "தமிழ்ப் புதல்வன்" திட்டத்திற்காக விண்ணப்பிக்கும்
விண்ணப்பிக்கும் அனைவரும் ஊக்கத்தொகையைப் பெற இந்த திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக தகவல் முகமையினை (Portal) அவர்கள் உயர்கல்வியைத் தொடரும் கல்வி நிறுவனம் மூலமாக நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
2. அரசுக்கும், மாணவர்களுக்கும் இடையே இடைத்தரகர்களை களைவதற்கும், ஊக்கத்தொகையை மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துவதற்கும் இந்த இணையதளம் மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட வேண்டும்.
3. இந்த தகவல் முகமை (Portal) தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அணுகக்கூடியதாக இருக்கும். தகவல் முகமை (Portal) முழுமையாக பாதுகாக்கப்படும் மற்றும் அனைத்து முக்கிய விவரங்களும் குறியாக்கம் செய்யப்படும். 4. தமிழ்நாட்டில் செயல்படும் மருத்துவம் / பொறியியல்/ வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்பு, சட்டம் / கலை மற்றும் அறிவியல் / பாலிடெக்னிக் / ஐடிஐ / மீன்வளம் / இசை மற்றும் கவின்கலை /துணை மருத்துவம் C.No. 1150/SW3-2/2024 14 1/1749667/2024 போன்ற அங்கீகாரம் செய்யப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் தனி உள்நுழைவு (unique login) வழங்கப்படும்.
5. ஒவ்வொரு உயர்கல்வி நிலையத்திலும் உதவி மையம் அமைத்து மாணவர் சேர்க்கையை எளிதாக்க வேண்டும்.
6. மாணவர்களின் விவரங்கள் அவர்களின் இ.எம்.ஐ.எஸ் (EMIS) எண்ணிலிருந்து தானாகவே பெறப்படும். வங்கி விவரங்கள், தொடர்புத் தகவல் போன்ற ஏதேனும் தகவல்களை மாணவர்கள் மாற்ற விரும்பினால், அவர்கள் அதை தகவல் முகமையின் (Portal) மூலம் செய்யலாம். 7. விண்ணப்பத்தைப் பெற்றவுடன், தகவல் முகமை (Portal) தானாகவே ஆதார் உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்த்து, பதிவு பற்றி உறுதிப்படுத்தும் விதமாக குறுஞ்செய்தி (SMS) அறிவிப்பை அனுப்பும்.
8. சம்பந்தப்பட்ட மாணவர்கள் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள் / தொடர்கிறார்கள் என்பதை கல்லூரியில் சரிபார்த்த சரிபார்த்த பிறகு, ஊக்கத் தொகையை சமூக நல ஆணையரகம் வாயிலாக ஒவ்வொரு மாதமும் நேரடியாக அந்தந்த மாணவரின் வங்கிக் கணக்கில் செலுத்தும்.
9. EMIS எண் இல்லாத விதிவிலக்கான நேர்வுகளில், மாணவர்கள் தங்கள் முழு விவரங்களையும் தகவல் முகமையின் (Portal) மூலம் சமர்ப்பிக்கலாம். இந்த விவரங்கள் பள்ளிக் கல்வி ஆணையரால் சரிபார்க்கப்பட்டு உயர்கல்வித் துறைக்கு அனுப்பப்பட்டு. இறுதியாக ஊக்கத் தொகை வழங்கக் கோரி விண்ணப்பம் பெறப்பட்ட 15 நாட்களுக்குள் சமூக நல ஆணையரகத்திற்கு ஒப்பளிப்பிற்காக அனுப்பி வைக்கப்படும்.
10. அனைத்து விவரங்களையும் சரிபார்த்த பிறகு, 15 நாட்களுக்குள் பயனாளியின் வங்கிக் கணக்கில் கணக்கில் ஊக்கத் தொகையை சமூக நல ஆணையரகம் கருவூலம் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திட்டத்தின் (IFHRMS) மூலம் National Automated Clearing House (NACH) வாயிலாக நேரடி பயன் பரிமாற்றம் (DBT) வழங்கும்.
11. மாணவரின் ஊக்கத் தொகை ஒவ்வொரு மாதமும் 7 ஆம் தேதிக்குள் அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
12. விண்ணப்பங்கள் ஒப்பளிப்பு வழங்கப்படுவதிலிருந்து ஒவ்வொரு விண்ணப்பத்தின் நிலையைக் நிலையிலும் இணையதளம் மூலம் காணுதல் / கண்காணிப்பதற்கு வலுவான தகவல் தொழில்நுட்ப அமைப்பு (Robust IT System) உருவாக்கப்படும். C.No.1150/SW3-2/2024 15 1/1749667/2024
13. தகவல் முகமையின் (Portal) மூலம் அணுகுவதில் சிரமம் உள்ள மாணவர் கல்லூரிகள் மூலம் ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
14. இந்த செயல்முறை மற்றும் அனுமதியின் எந்த நிலையிலும் எந்தவொரு மாணவரும் ஏதேனும் சந்தேகம் இருந்தால், அவர்கள் தங்கள் குறைகளை குறை தீர்க்கும் இணைய முகப்பு மூலம் நேரடியாக பதிவு செய்யலாம்.
15. சமூக நல ஆணையரகத்தின் கீழ் நிறுவப்படும் மாநில திட்ட கண்காணிப்பு அலகில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் தகவல் மற்றும் குறை தீர்க்கும் பிரச்சினைகளில் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ளலாம். ஏற்படும் 16. துறைகளுக்கிடையேயான பிரச்சனைகள் மாநில திட்ட கண்காணிப்பு அலகு மூலம் தீர்த்து வைக்கப்படும். 17.MIS மற்றும் பகுப்பாய்வு அறிக்கைகள் மாநில திட்ட மேலாண்மை அலகுடன் இணைக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவால் வழங்கப்படும். (ஏ) மாநில திட்ட மேலாண்மை அலகு (State Project Management Unit): தமிழ்ப் புதல்வன் திட்டத்தினை செயல்படுத்துவதற்கு ஏதுவாக மாநில திட்ட மேலாண்மை அலகு (State Project Management Unit (SPMU)) அமைப்பதற்கு சமூக நல ஆணையரிடமிருந்து கருத்துரு பெறப்பட்டு தனியே ஆணை வெளியிடப்படும்.
மாநில திட்ட மேலாண்மை அலகின் செயல்பாடுகள்:
1. தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் தினசரி செயல்பாடுகளை கண்காணித்தல், மேலாண்மை தகவல் முறை (MIS) திட்டமிடுதல் அனைத்து மாவட்டங்களிலிருந்து பெறப்படும் தகவல்களை ஆய்வு செய்து, தொகுத்தல் மாநில அளவிலான மேலாண்மை தகவல் முறையில் தயாரித்தல், 2. இத்திட்டம் மாநில அளவில் செயல்படுத்தும் பொருட்டு தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை ஆதரவினை அளித்தல், 3. இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு உரிய அதற்கான திருத்தங்களையும் அவ்வப்போது வழிமுறைகளையும் வழங்குதல்.
4. ஒட்டு மொத்த கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு உத்தி மற்றும் வருடாந்திர கண்காணிப்புத் திட்டங்களை உருவாக்குதல், 5. தமிழ்நாடு மின் ஆளுமை முகமையுடன் தொடர்பு கொண்டு "தமிழ்ப் புதல்வன்" திட்டத்தினை செம்மையாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு. திட்ட மேலாண்மை தகவல் முறையின் (MIS) தேவைகளை மின் ஆளுமையின் தரத்துடன் பூர்த்தி செய்யும் வகையில் செயல்படுதல். C.No.1150/SW3-2/2024 16 1/1749667/2024
6.மாநில அளவிலான வங்கிக் குழுவினருடன் இணைந்து பயனாளிகளுக்கு பணப்பரிமாற்றம் சிறந்த முறையில் நடைபெறுவதை உறுதிபடுத்துதல்.
7. மாநில அளவிலான துறைகள், பலதரப்பு முதலீட்டு உத்திரவாத நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பெரும் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு ஒன்றிணைந்து இத்திட்டத்தினை செயல்படுத்துதல். 8. அவ்வப்போது ஏற்படும் குறைகள் மற்றும் தொழில் நுட்ப பிரச்சனைகளை நிவர்த்தி செய்தல்.
9. மாநில அளவிலான வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்புக் குழுவிற்கு காலமுறை அறிக்கைகளை சமர்ப்பித்தல். (ஐ) மாநில அளவிலான வழிகாட்டுதல் குழு வ. விவரம் எண் 1. அரசு தலைமைச் செயலாளர் 2. செயலாளர் / முதன்மைச் செயலாளர் / கூடுதல் குழுவில் வகிக்கும் பதவி தலைவர் உறுப்பினர் செயலர் தலைமைச் செயலாளர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை 3. செயலாளர் / முதன்மைச் செயலாளர் / கூடுதல் உறுப்பினர் தலைமைச் செயலாளர், நிதித் துறை 4. செயலாளர் / முதன்மைச் செயலாளர் / கூடுதல் உறுப்பினர் தலைமைச் செயலாளர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை 5. செயலாளர் / முதன்மைச் செயலாளர் / கூடுதல் உறுப்பினர் தலைமைச் செயலாளர், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை 6. செயலாளர் / முதன்மைச் செயலாளர் / கூடுதல் தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை உறுப்பினர் 7. 8. செயலாளர் / முதன்மைச் செயலாளர் / கூடுதல் தலைமைச் செயலாளர், உயர்கல்வித்துறை செயலாளர் / முதன்மைச் செயலாளர் / கூடுதல் தலைமைச் செயலாளர், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை உறுப்பினர் உறுப்பினர் 9. செயலாளர் / முதன்மைச் செயலாளர் / கூடுதல் தலைமைச் செயலாளர், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை உறுப்பினர் C.No.1150/SW3-2/2024 வ. எண் 10. 17 1/1749667/2024 விவரம் செயலாளர் / முதன்மைச் செயலாளர் / கூடுதல் தலைமைச் செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை குழுவில் வகிக்கும் பதவி உறுப்பினர் 11. செயலாளர் / முதன்மைச் செயலாளர் / கூடுதல் உறுப்பினர் தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை 12. செயலாளர் / முதன்மைச் செயலாளர் / கூடுதல் உறுப்பினர் தலைமைச் செயலாளர், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை 13. செயலாளர் / முதன்மைச் செயலாளர் / கூடுதல் உறுப்பினர் தலைமைச் செயலாளர், கால்நடை பராமரிப்பு பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை 14. செயலாளர் / முதன்மைச் செயலாளர் / கூடுதல் உறுப்பினர் தலைமைச் செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை 15. சமூக நல ஆணையர் /இயக்குநர் உறுப்பினர் இக்குழு வருடம் இருமுறை கூட்டப்படும். மாநில அளவிலான வழிகாட்டுதல் குழுவின் செயல்பாடுகள்: 1. திட்டத்தின் அடிப்படை மற்றும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அடிப்படையான வழிகாட்டுதலை வழங்கும். 2. ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக பங்குதாரர்களிடையே பேச்சுவார்த்தையை ஊக்குவிக்கும். "தமிழ்ப் புதல்வன்" திட்ட உயர்கல்வி உறுதிப் பயனாளிகளுக்கு விளைவுகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஊக்குவிக்கும் வகையில், திட்டப் பலன்கள் மற்றும் இணைப்புகள் மற்றும் கூட்டாண்மைகளை உறுதி செய்வதற்காக பங்குதாரர்களிடையே ஒருங்கிணைப்பை மேற்கொள்ளும். (ஒ) மாநில அளவிலான மேற்பார்வைக் குழு: வ. எண் விவரம் செயலாளர் / முதன்மைச் செயலாளர் / கூடுதல் தலைமைச் செயலாளர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை குழுவில் வகிக்கும் பதவி தலைவர் C.No.1150/SW3-2/2024 18 1/1749667/2024 வ. விவரம் எண் குழுவில் வகிக்கும் பதவி 2. சமூக நல ஆணையர் /இயக்குநர் உறுப்பினர் செயலர் 3. தொழில் நுட்பக் கல்வி ஆணையர் / உறுப்பினர் இயக்குநர் 4. பள்ளிக் கல்வி ஆணையர் /இயக்குநர் உறுப்பினர் 5. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல உறுப்பினர் ஆணையர் /இயக்குநர் 6. மருத்துவக் கல்வி இயக்குநர் உறுப்பினர் 7. கல்லூரிக் கல்வி ஆணையர் /இயக்குநர் உறுப்பினர் 8. வேளாண் இயக்குநர் / தமிழ்நாடு வேளாண் உறுப்பினர் பல்கலைக் கழகப் பதிவாளர் 9. கரூவூலக் கணக்கு ஆணையர்/ இயக்குநர் உறுப்பினர் 10. சட்டக் கல்வி இயக்குநர் உறுப்பினர் 11. தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் உறுப்பினர் தலைமை நிர்வாக அலுவலர் 12. மாநில அளவிலான வங்கி குழு பிரதிநிதி உறுப்பினர் 13. உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு உறுப்பினர் மேம்பாட்டு ஆணையம் 14. இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை உறுப்பினர் 15. இணை இயக்குநர், மாநில திட்ட உறுப்பினர்/ மேலாண்மை அலகு. தமிழ்ப் புதல்வன் திட்டம் ஒருங்கிணைப்பாளர் இந்த மாநில அளவிலான மேற்பார்வைக் குழுவானது காலாண்டிற்கு ஒரு முறை கூட்டப்படும். மாநில அளவிலான மேற்பார்வைக் குழுவின் செயல்பாடுகள்: 1. திட்டத்தை அனைத்து மாணவர்களுக்கும் பயன் பெறும் வகையில் இறுதி நிலை வரை எடுத்துச் செல்லுதல் மற்றும் கண்காணித்தல். 2. திட்டத்தின் நிதி மேலாண்மையை கண்காணித்தல். 3. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பான விஷயங்களையும் மதிப்பாய்வு செய்து கண்காணித்தல். அனைத்து 4. திட்டத்தை செயல்படுத்தும் போது இடையூறு இருப்பின் அதனை கருத்தில் கொண்டு, செயல்படுத்தலை மேம்படுத்த தேவையான மாற்றங்களை மேற்கொள்ளுதல். C.No.1150/SW3-2/2024 19 1/1749667/2024 வ. விவரம் எண் 1. மாவட்ட ஆட்சியர் (ஓ) மாவட்ட அளவிலான செயல்பாட்டுக் குழு குழுவில் வகிக்கும் பதவி தலைவர் 2. மாவட்ட வருவாய் அலுவலர் உறுப்பினர் 3. மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் உறுப்பினர் 4. முதன்மை கல்வி அலுவலர் உறுப்பினர் 5. பிற்படுத்தப்பட்ட வகுப்பு நலத் துறை அலுவலர் உறுப்பினர் 6. முன்னணி வங்கி மேலாளர் உறுப்பினர் 7. கல்லூரி பிரதிநிதிகள் - மூன்று பேர்" உறுப்பினர் 8. மாவட்ட சமூக நல அலுவலர் உறுப்பினர்/ ஒருங்கிணைப்பாளர் (* மாவட்ட ஆட்சித் தலைவரின் தேர்வுபடி) மாவட்ட அளவிலான செயல்பாட்டுக் குழு மாதத்திற்கு ஒருமுறை மாவட்ட அளவில் திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்யும். (ஒள) மாவட்ட சமூக நல அலுவலரின் செயல்பாடுகள் 1. தேவை அடிப்படையிலான உத்தரவுகளை வழங்குதல் மற்றும் மாநில திட்ட மேலாண்மை அலகின் அனைத்து உத்தரவுகளும் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்தல் உள்ளிட்ட திட்டப்பணிகளை திறம்பட செயல்படுத்துவதற்கு மாவட்ட அளவில் செயல்படுத்தும் அலுவலராக இருத்தல். 2. மாவட்ட அளவிலான மேலாண்மை தகவல் முறையை (MIS) பராமரிக்கும் தொகுதிகளிலிருந்து அறிக்கைகளைத் தொகுத்து மதிப்பாய்வு செய்தல். 3. "தமிழ்ப் புதல்வன்" உயர்கல்வி உறுதித் திட்ட தகவல் முகமையின் (Portal) விவரங்களின் அடிப்படையில் மாதாந்திர மாவட்டக் கண்காணிப்பு வடிவமைப்பினைப் புதுப்பித்தல். 4. பயனாளிகளுக்கு பணப் பரிமாற்றம் திறம்பட செயல்படுவதற்கு மாவட்ட தொடர்பு அலுவலரால் முன்னணி வங்கியுடன் ஒப்பீடு செய்யப்படுவதை உறுதிசெய்தல். 5. மாவட்ட செயல்பாட்டுக் குழு காலமுறை அறிக்கையினை மாநில திட்ட மேலாண்மை அலகுக்கு அளித்தல். 6. திட்ட செயல்பாடு குறித்து அவ்வப்போது நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொள்ளுதல். C.No.1150/SW3-2/2024 20 1/1749667/2024 "தமிழ்ப் புதல்வன்" எனும் தொலைநோக்கு திட்டத்தினை செயல்படுத்துகையில் மாணவர்கள் கல்லூரிகளில் அதிக அளவில் சேர்க்கைக்கு வரும் நிலை உள்ளதுடன், அவர்களது உயர்கல்வி தேவைகளை அவர்களே பூர்த்தி செய்துகொள்ள வழிவகுப்பதாக அமையும். இதனால் தமிழ்நாட்டின் மொத்த மாணவர்களின் சேர்க்கை விகிதத்தினை (GER) குறைந்தபட்சம் 10 சதவீதம் உயர்த்துவதற்கு வழிவகை செய்யும். //உண்மை நகல்// ஜெயஸ்ரீ முரளிதரன், அரசு செயலாளர். அ.தேவராகன் பிரிவு அலுவலர். 231-7/2024 2310712024
CLICK HERE TO DOWNLOAD G.O.Ms. No.47 Tamil Puthalvan - PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.