5 வயது பூர்த்தியானால்தான்  1-ம் வகுப்பில் சேர்க்க வேண்டும்: புதியகல்வி கொள்கையில் தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 2, 2024

5 வயது பூர்த்தியானால்தான்  1-ம் வகுப்பில் சேர்க்க வேண்டும்: புதியகல்வி கொள்கையில் தகவல்5 வயது பூர்த்தியானால்தான்  1-ம் வகுப்பில் சேர்க்க வேண்டும்: புதியகல்வி கொள்கையில் தகவல்

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தமிழகத்திற்கான மாநில கல்விக் கொள்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

கடந்த 2022ம் ஆண்டு புதிய தேசிய கல்வி கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்க டெல்லி உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவானது சுமார் 2 வருடங்களாக பொதுமக்கள், மாணவர்கள், மற்றும் கல்வி நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரிடையே கருத்துக்கள் கேட்கப்பட்டு, அக்கருத்துகளின் அடிப்படையில் தமிழகத்திற்கென உருவாக்கப்பட்ட 600 பக்கங்கள் கொண்ட மாநில கல்விக் கொள்கைக்கான அறிக்கையை தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளது.

இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில முக்கியமான அம்சங்கள்,

1. 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இருக்கக் கூடாது

2. 12ம் வகுப்பு மட்டுமின்றி 11ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலும் கல்லூரிகளில் சேர்க்கை நடத்த வேண்டும்.

3. நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். 4. ஆங்கிலம், தமிழ் என இருமொழிக் கல்வி பின்பற்றப்பட வேண்டும்.

5. கல்வி என்பது மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.

6. எம்ஜிஆர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மையங்களாக அமைக்க வேண்டும்.

7. கல்லூரி முடிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

8. சிபிஎஸ்சி, Deemed University அகியவற்றிக்கான கட்டணங்களை சீரமைபதற்காக ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்.

9. 5 வயது பூர்த்தியாளர்கள் 1-ம் வகுப்பில் சேரலாம். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 6 வயது பூர்த்தியானவர்கள் தான் முதல் வகுப்பில் சேர முடியும்

10. 11ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர வேண்டும். இதையடுத்து, மாநில கல்விக் கொள்கைக்கான அறிக்கை மீது பலகட்ட ஆலோசனைகள் நடத்தப்படும் எனத் தெரிகிறது. அதன்பிறகு தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கை அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.