போட்டித் தேர்வுகளுக்கு பள்ளி அளவில் தொடர் பயிற்சி - பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, June 19, 2024

போட்டித் தேர்வுகளுக்கு பள்ளி அளவில் தொடர் பயிற்சி - பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு



தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 6

ந.க.எண்.69931/கே/இ3/2023 நாள்.18.06.2024

பொருள்: பள்ளிக்கல்வி - போட்டித்தேர்வுகள் 2024-2025.ஆம் கல்வியாண்டில் போட்டித் தேர்வுகளுக்கு மாணாக்கர்களை ஆயத்தப்படுத்துதல் - தொடர்பயிற்சி அளித்தல் வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்புதல்-சார்ந்து

பார்வை

சென்னை-6, தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் எண்.17609/ DSE/PC நாள்.10.08.2023.

2024-2025 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ/மாணவிகளில் போட்டித் தேர்வுகள் எழுத விருப்பமுள்ள மாணவ/மாணவிகளுக்கு அவர்கள் பயிலும் பள்ளியிலேயே ஆசிரியர்களைக் கொண்டு முதன்மைக்கல்வி அலுவலர் மேற்பார்வையில் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இதன் தொடர்ச்சியாக, போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிகள்/தேர்வுகள் 12-ஆம் வகுப்பு மாணவ/மாணவியர்களுக்கு பள்ளி அளவில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளதால், பயிற்சி தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

எனவே, போட்டித் தேர்வுகளுக்குகான பயிற்சிகளை இணைக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி சிறப்புடன் செயல்படுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு: வழிகாட்டுநெறிமுறைகள்

பெறுநர்

அனைத்துமாவட்டமுதன்மைக்கல்விஅலுவலர்கள்

போட்டித் தேர்வுகளுக்கு [NEET / JEE] மாணவர்களை ஆயத்தப்படுத்துதல் - பள்ளி அளவில் தொடர் பயிற்சி அளித்திட பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

2024-2025 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12 - ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ / மாணவிகளில் போட்டித் தேர்வுகள் எழுத விருப்பமுள்ள மாணவமாணவிகளுக்கு அவர்கள் பயிலும் பள்ளியிலேயே ஆசிரியர்களைக் கொண்டு முதன்மைக்கல்வி அலுவலர் மேற்பார்வையில் பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இதன் தொடர்ச்சியாக , போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிகள் தேர்வுகள் 12 ஆம் வகுப்பு மாணவ / மாணவியர்களுக்கு பள்ளி அளவில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளதால் , பயிற்சி தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது . எனவே , போட்டித் தேர்வுகளுக்குகான பயிற்சிகளை இணைக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி சிறப்புடன் செயல்படுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பள்ளிக் கல்வி - 2024-2025 ஆம் கல்வியாண்டில் போட்டித் தேர்வுகளுக்கு மாணாக்கர்களை ஆயத்தப்படுத்துதல்- தொடர்பயிற்சி அளித்தல் வழிகாட்டு நெறிமுறைகள் (Standard Operating Procedure)

இணை இயக்குநர் (தொழிற்கல்வி)

1.விருப்பமுள்ள மாணவ/மாணவிகளை தேர்வுகள் செய்ய மாவட்ட அலுவலர்களுக்கு வழிகாட்டுதல்

2. பயிற்சிக்கான கால அட்டவணையை மாநில ஒருங்கிணைப்பு குழுவின் உதவியோடு தயார் செய்தல்

3. பயிற்சிக்குரிய வினாத்தாட்கள் மற்றும் விடைகளை தயார் செய்ய முகாம் நடத்துதல்

4. பயிற்சிக்குத் தேவையான காணொளிக் காட்சிகளைத் தயாரித்தல்

5. அனைத்து குழுக்களின் பணிகளை ஒருங்கிணைத்தல்

6. மாவட்ட பணிகளை ஆய்வு செய்தல் மற்றும் கண்காணித்தல்

7. மாநில புலனக்குழு / மாவட்ட புலனக்குழு ஏற்படுத்துதல், தகவல் பரிமாற்றங்களை ஒருங்கிணைத்தல்

8. முழுஆண்டு விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெறச் செய்தல்

9. பயிற்சிக்குரிய அனைத்து வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்புகளை மாநில ஒருங்கிணைப்பு குழுவிடமிருந்து பெற்று அவற்றை அனைத்து முதன்மைக்கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்புதல்

10. உயர்கல்வி போட்டித் தேர்விற்கான U.Tube (Channel) உருவாக்குதல் மாதம் ஒரு முறை Hi-Tech ஆய்வகம் மற்றும் அலைபேசி செயலி வாயிலாக போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி அளித்தல் மாநில ஒருங்கிணைப்புக் குழு

1. போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிக்கு கால அட்டவணை தயார் செய்தல்

2. பயிற்சிக்குரிய வினாத்தாள்கள் மற்றும் விடைக்குறிப்புகளை உருவாக்குவதற்கு பாட வல்லுநர்களுக்கான பணிமனைகளை (Workshop) நடத்துதல்

3. பயிற்சிக்குரிய வினாத்தாட்கள் / விடைக்குறிப்புகளை தயார் செய்து உரிய கால கட்டத்திற்குள் ஒப்படைத்தல்

4. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாணவ / மாணவிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை மாவட்டக் குழுக்கள் விளக்குவதை கண்காணித்தல்

5. பாடம் ஒன்றிற்கு 5 ஆசிரியர்கள் வீதம் 25 ஆசிரியர்களை ஒன்றிணைத்து செயல்படுத்தல்

6. முழு ஆண்டு விடுமுறை நாட்களில் தேர்வு செய்யப்பட்ட மையங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதைக் கண்காணித்தல்

7. பள்ளி அளவில் நடைபெறும் 30 வார அலகுத் தேர்வுகள் மூலம் 1800 வினாக்களும், முழு ஆண்டு விடுமுறை நாட்களில் தேர்வு செய்யப்பட்ட மையங்களில் நடைபெறவிருக்கும் சிறப்பு வகுப்புகள் மூலம் 2200 வினாக்களும் ஆக மொத்தம் 4000 வினாக்கள் தயார் செய்தல். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு

1. போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளைத் திட்டமிட்டு ஒருங்கிணைத்திட மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், இயற்பியல், கணிதம், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொரு பாடத்திற்கும் இரண்டு பாட வல்லுநர்கள் (5 பாடங்கள் X 2 ஆசிரியர்கள் = 10 ஆசிரியர்கள்) அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும்.

2. மாவட்ட அளவிலான பாட வல்லுநர்களை தேர்வு செய்யும் போது போட்டித் தேர்வுகளில் விருப்பமுள்ள மற்றும் அனுபவமுள்ள ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும்

3. முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நிலை) இக்குழுவின் உறுப்பினர் - செயலராக செயல்படுவார். பாட வல்லுநர்களுக்கான பயிற்சிகள் வழங்குதல் மற்றும் கற்பித்தலை வலுவூட்டுதல் உள்ளிட்ட பணிகளை இக்குழு மேற்கொள்ள வேண்டும்.

4. பள்ளிதோறும் இப்பயிற்சியில் பங்குபெறும் மாணவ / மாணவிகளின் எண்ணிக்கை மற்றும் மாவட்ட அளவில் பங்குபெறும் மாணவ / மாணவிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை தொகுத்தல் மற்றும் தேர்வுகள் சார்ந்த ஏற்பாடுகள் ஆகியனவற்றை முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும். 5. மாநிலக் குழுவில் இருந்து வரும் வினாத்தாட்கள் மற்றும் விடைக்குறிப்புகள் ஆகியவற்றை பள்ளிகளுக்கு அனுப்பிய இச்செயல்பாடுகள் நடைபெறுவதை உறுதி செய்தல் வேண்டும்.

6. மாவட்ட அளவிலான இருவகையான (மாவட்டக்குழு மற்றும் பாடஆசிரியர்கள் குழு) புலனக்குழுக்களை உருவாக்கி தகவல்களை பரிமாறிக் கொள்ளுதல்.

தலைமையாசிரியர் மற்றும் பள்ளி முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பு

1. அனைத்து அரசு / அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாமாண்டு பயின்றுவரும் மாணவர்களில் போட்டித் தேர்வுகள் எழுத விருப்பமும், ஆர்வமும் உள்ள மாணவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட வேண்டும்.மேலும், பெரும்பாலான மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியில் பங்கேற்கும் வகையில், அனைத்து மாணவர்களையும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வமூட்டி ஊக்கப்படுத்தலாம். ஆனால் கட்டாயப்படுத்துதல் கூடாது. எந்த மாணவமாணவியரையும் கட்டாயப்படுத்தி சேர்க்கக் கூடாது.

2. மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வழங்க, அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமையில், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் கணித முதுகலை பாட ஆசிரியர்களைக் கொண்ட குழு உருவாக்கப்பட வேண்டும். மீள்பார்வை

3. அனைத்து வேலை நாள்களிலும் பாடவாரியாக மாலை 4.00 மணி முதல் 5.15 மணி வரை போட்டித் தேர்வுகளுக்கு பள்ளியிலேயே பயிற்சி வகுப்புகள் கால அட்டவணைப்படி திட்டமிட்டு நடத்தப்பட வேண்டும்.

4. போட்டித் தேர்வுகளின் மதிப்பீட்டு அடிப்படையில் (Negative marks) விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு அந்த மதிப்பெண்கள் EMIS Portal-இல் பதிவிட வேண்டும்.

5. பள்ளி அளவிலான தினசரி தேர்வுகள், ஒவ்வொரு மாதமும் இரண்டு சனிக்கிழமை மற்றும் முழு ஆண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு பயிற்சி வழங்கிட மாநில ஒருங்கிணைப்புகுழு உதவிபுரியும். மேலும், அரசு மேல்நிலைப்பள்ளிகளிலுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகம் வழியேயும் மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படும். அது சார்ந்து அவ்வப்போது புலனக்குழுவில் ( Whats app) பகிரப்படும். 6. போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படையில் பள்ளிக்கல்வி இயக்ககத்தால் வழங்கப்படும் கால அட்டவணையை பின்பற்றி முறையாக பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். பயிற்சி வழங்கப்படும் பாடத்தலைப்பினைப் பற்றிய சிறு அறிமுகம் அப்பாடப்பகுதியிலிருந்து போட்டித் தேர்வுகளுக்கு எதிர்நோக்கப்படும் வினாக்களைத் தீர்ப்பதற்கான சிறு குறிப்புகள். சூத்திரங்கள் மற்றும் முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்டுள்ள வினாக்கள் மற்றும் அவற்றை தீர்ப்பதற்கான எளிய முறைகள் ஆகியன மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும்.

CLICK HERE TO DOWNLOAD DSE - NEET 2024-2025 - SOP- Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.