ADW - பொதுத்தேர்வில் 100% & 95% தேர்ச்சி காட்டிய ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை - அரசாணை வெளியீடு!
ADW பள்ளிகளில், பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி காட்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கு ₹5000 மற்றும் 95% தேர்ச்சி காட்டிய தலைமையாசிரியர்களுக்கு ₹10000 ஊக்கத்தொகை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு!
சுருக்கம்
ஆதிதிராவிடர் நலம் கல்வி பள்ளிகள் - 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 95 மற்றும் அதற்குமேல் தேர்ச்சி விழுக்காடு காட்டிய தலைமை ஆசிரியர்கள் மற்றும் தேர்ச்சி விழுக்காடு காட்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்படுகிறது.
பாடம் வாரியாக 100 % ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்(ஆதிர.) துறை
அரசாணை (ப)எண். 111
நாள்: 04.06.2024 குரோதி வருடம்.
வைகாசி மாதம் 22 ஆம் நாள்,
திருவள்ளுவர் ஆண்டு 2055,
படிக்கப்பட்டது
அரசாணை (நிலை) எண்.121, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (ஆதிந7 துறை. நாள்.28.11.201.
2. பழங்குடியினர் நல இயக்குநரின் கடித ந.க.எண். பமே. /ஐ2/4232/2021, BITCT-9.2.2024. ஆணை:-
மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 2011-2012 ஆம் கல்வி ஆண்டு முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொது தேர்வுகளில் 95 விழுக்காடு காட்டும் தலைமை ஆசிரியர்களுக்கு ரூ.10,000/ மற்றும் பாடம் வாரியாக 100% விழுக்காடு தேர்ச்சி வழங்கும் முதுகலை/ பட்டதாரி பாட ஆசிரியர்களுக்கு ரூ.5,000/-ம் ஊக்கத் தொகையாக வழங்கிட அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
2. மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட பழங்குடியினர் நல இயக்குநர் அவர்களின் கடிதத்தில், மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட பொதுத் தேர்வு தேர்ச்சி விவர அறிக்கைகளின் அடிப்படையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 95 விழுக்காடு மற்றும் அதற்கு மேல் தேர்ச்சி கொடுத்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் பாடம் வாரியாக 100% தேர்ச்சி விழுக்காடு காட்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, 2021-2022 மற்றும் 2022-2023 ஆம் கல்வி ஆண்டிற்கான தேர்ச்சி குறித்த விவரங்களை தொகுத்து நிதியினை வழங்கிடுவதற்கு ஏதுவாக தயியா.
அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்துள்ளார், மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்த 2016-2017 வரை, அதிக தேர்ச்சி விழுக்காடு காட்டிய ஆசிரியர்களுக்கு 2225 01 277 AG 5904 என்ற கணக்குத் தலைப்பின் கீழ் ஊக்கத் தொகை பெற்று வழங்கப்பட்டுள்ளது என்றும், அதனைத் தொடர்ந்து பழங்குடியினர் நலத்துறை தனியாக செயல்படும் நேர்வில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், அதிக தேர்ச்சி விழுக்காடு காட்டிய மேல்நிலை / உயர்நிலை / பட்டதாரி பள்ளி. தலைமை ஆசிரியர் மற்றும் பாடம் வாரியாக முதுகலை ஆசிரியர்களுக்கு 2021-2022 மற்றும் 2022-2023 ஆம் கல்வி ஆண்டுகளில் நிலுவையாக உள்ள ஊக்கத் தொகையான ரூ.30.05,000/- (ரூபாய் முப்பது இலட்சத்து ஐந்தாயிரம் மட்டும் யினை சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பெற்று வழங்கிடுவதற்கு ஏதுவாக புதிய கணக்கு தலைப்பு வழங்கி, நிதி ஒதுக்கீடு செய்யுமாறு பழங்குடியினர் இயக்குநர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார். 3. பழங்குடியினர் நல இயக்குநரின் கருத்துருவினை, அரசு கவனமுடன் பரிசீலனை செய்து அதனடிப்படையில் பழங்குடியினர் நலத்துறையின்கீழ் இயங்கும் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் 05% தேர்ச்சி வழங்கும் தலைமை ஆசிரியர்களுக்கு ரூ.10,000/- மற்றும் பாடம் வாரியாக 100% தேர்ச்சி வழங்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.5,000/-ம் ஊக்கத்தொகையாக வழங்கிடவும், 2021-2022 மற்றும் 2022-2023 ஆம் கல்வி ஆண்டுகளில் வழங்கப்படாமல் நிலுவையாக உள்ள ரூ.30.95,000ரூபாய் முப்பது இலட்சத்து ஐந்தாயிரம் மட்டும் கூடுதல் நிதியாக ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிடுகிறது.
4. மேலே பத்தி 3ல் ஒப்பளிக்கப்பட்ட செலவினம் கீழ்காணும் தலைப்பின் கீழ் பற்று வைக்கப்பட வேண்டும்.
2225 ஆதிதிராவிடர், பழங்குடியினர், ஏனைய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் நலன் - 02 பழங்குடியினர் நலன் 277 கல்வி மாநில செலவினங்கள் BS பழங்குடியினர் நலப் பள்ளிகளுக்குப் பரிசுகள் 01 பரிசுகளும் 359 பரிசுகளும் வெகுமதிகளும் வழங்குதல் வெகுமதிகளும். (IFHRMS DPC: 2225.02-277-BS-35901)
2024-2025-ஆம் 5 மேலே பத்தி 3-ல் ஒப்பளிக்கப்பட்ட செலவினத்தினை மேற்கொள்ள தேவையான கூடுதல் நிதியொதுக்கம் ரூ.30,05,000/-ஐ நிதியாண்டிற்கான திருத்த மதிப்பீடு இறுதி திருத்த நிதியொதுக்கத்தில் ஒதுக்கீடு செய்யப்படும். இருப்பினும் மேற்கண்ட செலவினம் 20242025ஆம் நிதியாண்டிற்கான துணை மானியக்கோரிக்கையில் ஒரு சிறப்பு நிகழ்வாக கொணர்ந்து சட்டமன்றப் பேரவையின் ஒப்புதல் பின்னர் பெறப்படும். இந்நிதியொதுக்கம் செய்ய இருப்பதை எதிர்நோக்கி மேலே பத்தி 3-ல் ஒப்பளிக்கப்பட்ட தொகையினை பெற்று வழங்கிட பழங்குடியினர் நல இயக்குநர் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
மேலும் பத்தி 3ல் ஒப்பளிக்கப்பட்ட செலவினத்தை 2024-2025ஆம் நிதியாண்டிற்கான துணை மதிப்பீடுகளில் சேர்ப்பதற்கு உரிய வரைவு விளக்கக்குறிப்பினையும் மற்றும் திருத்த மதிப்பீடு / இறுதி திருத்த நிதியொதுக்கத்தில் சேர்ப்பதற்கு உரிய கருத்துருவையும் தவறாது நிதித் (ஆதிம.பந/ வ.செ.பொ1துறைக்கு அனுப்பி வைக்குமாறு பழங்குடியினர் நல இயக்குநர் அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
6. மேலே பத்தி 2ல் அனுமதிக்கப்பட்ட தொகையினை பெற்று வழங்கிட இயக்குநர் பழங்குடியினர் நலம், சென்னை அவர்கள் மூலம் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்கிட அனுமதி அளிக்கப்படுகிறது.
7. இவ்வாணை அ.சா.கு.எண்.டீ349/ஆதி(ம)பந/2024, நாள்:01.06.2024-ல் நிதித்துறையின் ஒப்புதல் பெற்று வெளியிடப்படுகிறது. இதற்கான கூடுதல் நிதியொதுக்க பெயரேட்டு எண். 0223 (இருநூற்று இருபத்து மூன்று (IFHRMS ASI No. CLICK HERE TO DOWNLOAD G.O.Ms.No.111 , Date : 04.06.2024 PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.