ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை செயலாளர் வாழ்த்து செய்தி வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, June 5, 2024

ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை செயலாளர் வாழ்த்து செய்தி வெளியீடுEMIS - Mobile Number Verification - Greeting Message from Secretary School Education Department - EMIS - கைபேசி எண் சரிபார்ப்பு - பள்ளிக் கல்வித் துறை செயலாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி

தமிழ்நாடு அரசு பலவேற மாணவர் நலத்திட்டங்களை பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்தி இருகிறது . இத்திட்டங்கள் அனைத்தையும் உரிய நேரத்தில் மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது நமது கடமையாகும் இத்திட்டங்கள் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் . நலத்திட்ட விவரத்தினை அவர்தம் பெற்றோர்களுக்கும் தெரிய வேண்டியது அவசியமாகிறது. அங்ஙனம் விவரங்களை பெற்றோர்களுக்கு தெரிவிப்பதற்கு ஏதுவாக பெற்றோர்களின் கைபேசி எண்களை சரிபார்க்கும் பணியானது மேற்கொள்ளப்பட்டது . இப்பணியினை முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களின் சீரிய வழிகாட்டுதலின்படி பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முழுவீச்சில் இப்பணியினை மேற்கொண்டமையால் இதுவரை 102.13.156 மாணவர்களின் பெற்றோர்களது கைபேசி எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன.

மிகக்குறுகிய காலத்தில் இப்பணியினை மேற்கொண்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பணி மகத்தானது. மிகவும் பாராட்டுதலுக்குரியதாகும் . அரசு நலத்திட்டங்கள் வழங்கப்படும் விவரத்தினை தெரிவிப்பது மட்டுமின்றி மாணவர்களின் கல்விசார் செயல்பாடுகளை பெற்றோர்கள் அறிந்து கொள்வதற்கு இது பேருதவியாக அமைந்திடும் . இந்நேர்வில் எஞ்சியுள்ள 25,07,777 மாணவர்களின் பெற்றோர்களுடைய கைபேசி எண்கள் சரிபார்க்க வேண்டியுள்ளது. இப்பணியினையும் பள்ளி திறப்பதற்கு முன்பாக விரைந்து முடித்திட பள்ளித் தலையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பு அவசியமானதாகும் . இம்மாபெரும் பணியினை மேற்கொள்வதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது உளமார்ந்த பாராட்டுகள் மற்றும் நன்றிகள் .

1 comment:

  1. பாராட்டுக்கள் நன்றிகள் எல்லாம் வேண்டாம்.ஊக்க ஊதிய உயர்வு சரண்டர் பழைய ஓய்வுதிய திட்டம் போன்றவற்றை உடனே நிறைவேற்று.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.