மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்புதல் - தலைமை ஆசிரியர்கள் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! District Education Officer posts are filled by promotion - Director of School Education orders seeking details of head teachers!!!
மின் அஞ்சல் மூலம்
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 6 ந.க.எண்.002902/அ1/இ1/2024 நாள்: 11.06.2024
பொருள்:
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு/ பணிமாறுதல் மூலம் நிரப்புதல் - 2024-2025-ஆம் ஆண்டிற்கான முன்னுரிமைப் பட்டியல் தயாரித்தல் அரசு உயர்நிலைப்பள்ளி / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சார்பிலான விவரங்கள் கோருதல் - தொடர்பாக.
2024-2025 ஆம் ஆண்டுக்கான மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்ய ஏதுவாக தகுதி படைத்த அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியலின்படி பெயர்ப் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
இணைப்பில் உள்ள பெயர்ப் பட்டியலில் இடம் பெற்றுள்ள, தங்கள் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சார்பான விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து 21.06.2023 அன்று நேரில் தனிநபர் மூலம் அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பொருள் சார்பாக கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
பெயர்ப் பட்டியலில் தகுதியுள்ள தலைமையாசிரியர் பெயர் ஏதும் விடுபட்டிருப்பின், தலைமையாசிரியர் பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்ட ஆணையின் நகலினை இணைத்து முதன்மைக் கல்வி அலுவலரின் விரிவான குறிப்புரையுடன் இச்செயல்முறைகள் கிடைக்கப் பெற்ற 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அரசாணை (நிலை) எண்.528, பள்ளிக் கல்வி (ஏ1) துறை நாள் 31.12.1997ல் தெரிவித்துள்ளவாறு, இணைப்பில் உள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களிடம் விருப்ப படிவத்தில் (Option Form) பதவி உயர்வு / பணி மாறுதலுக்கு விருப்பம் அல்லது விருப்பமின்மையினை பெற்று. சார்ந்த தலைமையாசிரியர்களின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்து அதன் சான்றொப்பமிட்ட நகல் மற்றும் அசல் விருப்ப உரிமை படிவம் ஆகியவை அனுப்பப்பட வேண்டும்.
மேலும் கடந்த ஆண்டுகளில் மாவட்டக் கல்வி அலுவலரின் பதவி உயர்வு / பணிமாறுதலுக்கு விருப்பமின்மை தெரிவித்திருந்தால் மீளவும் தலைமையாசிரியர்களிடம் இருந்து புதியதாக விருப்ப உரிமை பெற்று கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
சார்ந்த அளிக்க சார்ந்த தலைமையாசிரியரின் பணிப்பதிவேட்டினை ஆய்வு செய்து பரிந்துரை செய்யப்பட வேண்டும் எனவும், பின் வரும் காலங்களில் இது சார்ந்து புகார் ஏதும் பெறப்பட்டால் பரிந்துரை செய்த சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரே இதற்கு பொறுப்பேற்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு / பணி மாறுதலை தற்காலிகமாக உரிமைவிடல் செய்தவர்களில் தற்காலிக உரிமைவிடல் காலம் முடிவு பெற்றவர்கள் சார்பான விவரங்கள் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து சார்ந்த அனுப்பப்பட வேண்டும்.
மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு / பணிமாறுதல்கள் துறைப் பதவி உயர்வு குழுவால் (Departmental Promotional Committee) பரிசீலிக்கப்படும் என்பதால், மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்கு விருப்பம் தெரிவித்துள்ள தலைமையாசிரியர்கள் சார்பான 01.01.2019 முதல் நாளது தேதி வரையிலான மந்தண அறிக்கைகள் தவறாமல் இணைத்து அனுப்ப வேண்டும்.
(ஏற்கனவே மந்தண அறிக்கைகள் அனுப்பப்பட்டிருப்பின் மீதமுள்ள காலத்திற்கு அனுப்பப்பட வேண்டும்). மந்தண அறிக்கைகள் பெறப்படாத தலைமை ஆசிரியர்கள் பெயர் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு / பணிமாறுதலுக்கு பரிந்துரைக்கப்பட மாட்டாது திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது. பின்பற்றி எழுதப்பட எனத் மேலும், மந்தண அறிக்கைகள் அரசாணை (நிலை) எண்.121 பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை நாள்29.09.2011 மற்றும் இவ்வியக்கக ந.க.எண். 61528/01/04/2015 நாள்20.08.2015ல் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் வேண்டும் எனவும். மேற்கண்ட அரசாணையில் இணைக்கப்பட்டுள்ள படிவத்திலேயே மந்தண அறிக்கைகள் எழுதப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. அசல் மந்தண அறிக்கைகள் மட்டுமே அனுப்ப வேண்டும். மந்தண அறிக்கைகள் உண்மை நகல் அல்லது ஜெராக்ஸ் நகல்கள் இணைத்தனுப்பக் கூடாது.
சார்ந்த தலைமையாசிரியர்கள் சார்பான மந்தண அறிக்கைகள் அந்தந்த காலத்தில் பணிபுரிந்த அலுவலர்களால் எழுதப்பட்டு. மேற்கண்ட காலத்தில் பணிபுரிந்த உரிய அலுவலர்களால் கூர்ந்தாய்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். மந்தண அறிக்கைகள் குறிப்பிட்ட காலத்திற்கு எழுதப்படவில்லை எனில் அதற்கான உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும்.
அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் பணியிடத்திலிருந்து அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக பதவி உயர்வில் சென்றவர்களின் முன்னுரிமை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் முன்னுரிமைப்படியே அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
இணைக்கப்பட்டுள்ள பெயர்ப் பட்டியலில் தங்கள் மாவட்டத்தில் எவரும் இல்லையெனில் " இன்மை " அறிக்கையினை தவறாமல் அனுப்ப வேண்டும்.
2024-2025-ஆம் ஆண்டுக்கான மாவட்டக் கல்வி அலுவலர் முன்னுரிமைப் பெயர்ப் பட்டியலுக்கு பரிந்துரைக்கப்படும் தலைமையாசிரியர்கள் சார்பான படிவத்தில் உள்ள கலம் -31 முதன்மைக் கல்வி அலுவலரால் மட்டுமே பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். பரிந்துரைக்கப்படும் படிவத்துடன் கீழ்க்காணும் விவரங்கள் அனுப்ப வேண்டும். 1. விருப்பக் கடிதம் (Option Form)
2. உரிய படிவம்
3. அசல் மந்தண அறிக்கைகள்
இணைத்து தொடுக்கப்பட்டிருப்பின்
4. தமிழ்நாடு குடிமுறைப் பணி விதியின் கீழ் குற்றச்சாட்டு குற்றச்சாட்டின் நகல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கையின் தற்போதைய நிலை மற்றும் தண்டனை அளிக்கப்பட்டிருப்பின் அதன் நகல் மற்றும் தண்டணை நிறைவேற்றப்பட்டமைக்கான ஆவணங்கள்
5. பதவி உயர்வு / பணியிடமாறுதலுக்கு விருப்பம் மற்றும் விருப்பமின்மை தெரிவித்துள்ளவர்கள் சார்பாக பணிப்பதிவேட்டில் மேற்கொள்ளப்பட்ட பதிவின் சான்றொப்பமிட்ட நகல்.கள் அனுப்பப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இச்செயல்முறைகள் கிடைக்கப் பெற்றமைக்கான ஒப்புதலை உடன் அனுப்பி வைக்குமாறும், இணைப்பில் உள்ள அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பெயர்ப் பட்டியலை தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் சுற்றுக்கு அனுப்பி, அதன் ஒப்புகையினைப் பெற்று தங்கள் அலுவலகத்தில் பராமரிக்க வேண்டும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
விருப்ப படிவம்
முன்னுரிமைப் பட்டியல்
படிவம்
பெறுநர்:
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் CLICK HERE TO DOWNLOAD DSE - Called proposal for DEO Panel 2024-2025 PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.