உபரி இடைநிலை ஆசிரியர்களை ஒன்றியத்திற்குள் ( Within Block ) பணிநிரவல் மாறுதல் செய்ய அறிவுரைகள் - இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, June 11, 2024

உபரி இடைநிலை ஆசிரியர்களை ஒன்றியத்திற்குள் ( Within Block ) பணிநிரவல் மாறுதல் செய்ய அறிவுரைகள் - இயக்குநரின் செயல்முறைகள்



Instructions for Intra Block Transfer of Surplus Secondary Teachers - Director's Procedures உபரி இடைநிலை ஆசிரியர்களை ஒன்றியத்திற்குள் ( Within Block ) பணிநிரவல் மாறுதல் செய்ய அறிவுரைகள் - இயக்குநரின் செயல்முறைகள்

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 01.08.2023 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது - உபரி இடைநிலை ஆசிரியர்களை ஒன்றியத்திற்குள் ( Within Block ) பணிநிரவல் மாறுதல் செய்ய அறிவுரைகள் வழங்குதல் - சார்பு .

ஒன்றியத்திற்குள் இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வு 13.06.24 - இயக்குநரின் செயல்முறைகள்👇 மேற்குறிப்பிட்ட 1862 பணியிடங்களுக்கு முதல் கட்டமாக ஒன்றியத்திற்குள் மட்டுமே பணிநிரவல் மாறுதல் கலந்தாய்வு 13.06.2024 அன்று நடைபெற உள்ளது .

ஒன்றியத்திற்குள் பணிநிரவல் மாறுதல் வழங்கப்பட்டு மீதமுள்ள பணியிடங்களுக்கு மாண்பைமிகு உச்சநீதிமன்றத்தில் TET சார்ந்த வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டு ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்று முடிக்கப்பட்ட பின்னர் உள்ள காலிபணியிடத்தில் இரண்டாம் மற்றும் இறுதி கட்டமாக பணிநிரவல் மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று முடிக்கப்படும் .

பார்வை 1 முதல் 7 வரையில் உள்ள அரசாணைகளை பின்பற்றி 01.08.2023 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் (Staff Fixation) செய்யப்பட்டு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து (தொடக்கக் கல்வி) விவரங்கள் பெறப்பட்டுள்ளது.

மேலும் பார்வை 14ல் காண் செயல்முறைகள் மற்றும் 07.06.2024 அன்று அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) இயக்குநரால் நடத்தப்பட்ட இணையவழி கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகளுக்கேற்ப 01.08.2023 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் (Staff Fixation) செய்யப்பட்டதில் ஆசிரியருடன் உபரி என கண்டறியப்பட்ட 2236 பணியிடங்களில் 31.05.2024 அன்றைய நாளின்படி உள்ள ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் 2024 மார்ச் மாதம் நடைபெற்ற சிறப்பு மாணவர்களின் சேர்க்கை விவரத்தினையும் கருத்தில் கொண்டு இறுதியாக்கப்பட்ட பட்டியலின்படி 1862 பணியிடங்கள் ஆசிரியருடன் உபரி என இறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட 1862 பணியிடங்களுக்கு முதல் கட்டமாக ஒன்றியத்திற்குள் மட்டுமே பணிநிரவல் மாறுதல் கலந்தாய்வு 13.06.2024 அன்று நடைபெற உள்ளது. ஒன்றியத்திற்குள் பணிநிரவல் மாறுதல் வழங்கப்பட்டு மீதமுள்ள பணியிடங்களுக்கு மாண்பைமிகு உச்சநீதிமன்றத்தில் TET சார்ந்த வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டு ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்று முடிக்கப்பட்ட பின்னர் உள்ள காலிபணியிடத்தில் இரண்டாம் மற்றும் இறுதி கட்டமாக பணிநிரவல் மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று முடிக்கப்படும்.

மலை சுழற்ச்சி மாறுதல் கலந்தாய்வு:

இதற்கு முன்பாக 12.06.2024 அன்று 7 மாவட்டங்களுக்கான மலை சுழற்ச்சி மாறுதல் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட வேண்டும்.

07.06.2024 அன்றைய இணைய வழி கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டதற்கிணங்க ஏற்கனவே தாய் ஒன்றியத்திற்கு வரவேண்டி உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கான மாறுதல் ஆணையினையும் இதற்கு முன்பாக முடிக்கப்பட வேண்டுமென திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்காண் அறிவுரைகளை பின்பற்றி பணிநிரவல் கலந்தாய்விற்கு தேவையான கணினி வசதிகள் (ஒரு அறையில் ஒரு ஒன்றியம் என்ற முறையில்), மின்சார வசதி, இதர முன்னேற்பாடுகளை செய்திடுமாறும், இதில் எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் கலந்தாய்வினை நடத்திட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறது.




CLICK HERE TO DOWNLOAD இயக்குநரின் செயல்முறைகள் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.