பள்ளிகளில் BALA Painting செய்யப்பட்ட விவரங்களை TNSED App யில் உள்ளீடு செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக DEE Proceedings DEE Proceedings regarding input of BALA Painting in schools in TNSED App - giving instructions
பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை எண் : மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் அரசு நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில் நுட்பக் கணினி ஆய்வகங்கள் ( Hi Tech Labs ) மற்றும் அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் ( Smart Class Rooms ) ஏற்படுத்துதல் - பள்ளிகளில் BALA Painting செய்யப்பட்ட விவரங்களை TNSED App யில் உள்ளீடு செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை – 6.
ந.க.எண் : 029481 / கே2 / 2023,
நாள்:4.05.2024
பொருள்: தொடக்கக் கல்வி - பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை எண் : 43 மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் அரசு நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில் நுட்பக் கணினி ஆய்வகங்கள் (Hi Tech Labs) மற்றும் அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் (Smart Class Rooms) ஏற்படுத்துதல் - பள்ளிகளில் BALA Painting செய்யப்பட்ட விவரங்களை TNSED Appயில் உள்ளீடு செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக
பார்வை: 1. மாண்புமிகு
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் 2023-2024 2. அரசாணை (நிலை) எண்.132, பள்ளிக் கல்வித் துறை (எஸ்எஸ்எ1) துறை, நாள் 28.07.2023
3. அரசாணை (நிலை) எண்.207, பள்ளிக் கல்வித் துறை (எஸ்எஸ்எ1) துறை, நாள் 17.11.2023
4. சென்னை 6, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண் : 029481 / கே2 / 2023, நாள்: 22.12.2023
5.சென்னை 6, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், ந.க.எண் : 029482 / கே2 / 2023, நாள்: 22.12.2023 6. சென்னை 6, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநிலத் திட்ட இயக்குநரின் கடித ந.க.எண் : 0690/ கட்டடம் / ஆ6 / ஒபக / 2023, நாள்: 26.02.2024 பார்வை (1)யில் காணும் மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக அரசு நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில் நுட்பக் கணினி ஆய்வகங்கள் (Hi Tech Labs), அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் (Smart Class Rooms) அகன்ற இணைய இணைப்புடன் ஏற்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
பார்வை (6)யில் காணும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதத்தில் 2023-2024ஆம் ஆண்டில் முதற்கட்டமாக (Phase-1) 6,130 பள்ளிகளில் திறன் வகுப்பறைகள்-Smart Class Rooms அமைப்பதற்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநருக்கு நிதி விடுவித்து பணிகளை தொடங்கிட கேட்டுக் கொண்டுள்ளார்.
அதனடிப்படையில் இணைப்பில் கண்டுள்ள 6,130 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்ககம் வாயிலாக தற்போது பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்தப் பள்ளிகளில் திறன் பலகை (Smart Board) பொருத்தப்படும் வகுப்பறைகளில் மாணவர்களை கவரும் வகையில் சுவர்களில் வண்ண ஓவியங்கள் BALA Painting இடம்பெற்று இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
TNSED Appயின் வழியாக பள்ளிகளில் BALA Painting செய்யப்பட்டுள்ளதா என்பதை சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் அவர்களின் கைபேசி மூலம் புகைப்படம் எடுத்து அதனை உள்ளீடு செய்திட வேண்டும். அவ்வமயம்,
1) BALA Painting பணி முழுமையாக நிறைவு பெற்று இருந்தால் Completed எனவும் 2) BALA Painting பணி நடைபெற்று கொண்டு இருந்தால் In Progress எனவும் 3) BALA Painting பணி தொடங்கப்படவில்லை எனில் Yet to Start எனவும் பதிவிட வேண்டும். (குறிப்பு : Completed மற்றும் In Progressக்கு மட்டும் புகைப்படங்களை பதிவிட்டால் போதுமானது)
எனவே, இணைப்பில் கண்டுள்ள 6,130 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கி இப்பணிகளை நேரடி கவனத்தில் கொண்டு கண்காணித்திடவும் பணிகளை உடனடியாக விரைந்து முடிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இணைப்பு :
பள்ளிகளின் பட்டியல்
பெறுநர்
தொடக்கக் கல்வி இயக்குநர்
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) 4)5/4 நகல்
அரசு செயலர், பள்ளிக் கல்வித் துறை, தலைமைச் செயலகம், சென்னை - 9. மாநிலத் திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை - 6.
தகவலுக்காக பணிந்து அனுப்பலாகிறது CLICK HERE TO DOWNLOAD DEE Proceedings PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.